9. அறிவு தருவார்.
1. கர்த்தர் ஞானத்தை தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். (நீதி 2:6)
2. ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும். (நீதி 2:10)
3. அப்போது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக் கொள்ளும். (நீதி 5:2)
4. ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம் பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். (நீதி 8:12)
5. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. (நீதி 9:10)
6. நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. (சங் 147:5)
7. தேவன் தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு ஞானத்தையும், அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார். (பிர 2:26)
8. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் தங்கியிருப்பார். (ஏசா 11:2)
9. சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல். பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். (ஏசா 11:9)
10. கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (2. கொரி 2:14)
10. அநுக்கிரகம், அநுகூலம்.
1. தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு. (ஆதி 33:11)
2. அநுகிரக காலத்திலே நான் உமக்குச் செவி கொடுத்து, இரட்சணிய நாளிலே உனக்கு உதவி செய்தேன். (ஏசா 49:8)
3. அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம். (பிர 3:13)
4. தேவன் ஐசுவரியத்தையும், சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ; அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம். (பிர 5:19)
5. பொறுமையையும், ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின் படியே, நீங்கள் ஏக சிந்தையுள்ளவர்களாய் இருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வாராக. (ரோமர் 15:6)
6. தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள் வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி கூறி வருகிறேன். (அப் 26:22)
7. கர்த்தாவே நீர் எனக்குத் துணை செய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞகர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமான ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும். (சங் 86:17)
8. உமது அடியேனுக்கு அநுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக் கொள்ளுவேன். (சங் 119:17)
9. இங்கே பெரிதும் அநுகூலமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது. (1 கொரி 16:9)
10. சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ் செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.
No comments:
Post a Comment