Saturday, April 22, 2017

ஞானத்திற்காக, ஆலோசனைக்காக

1. “சத்திய ஆவியாகிய அவர் என்னில் நிலைத்திருக்கிறார். அவர் எல்லாவற்றையும் எனக்கு அறிவித்து சகல சத்தியத்திற் குள்ளும் என்னை நடத்துகிறார். ஆகவே எனக்கு எதிராக வரும் ஒவ்வொரு சூழ்நிலையைப் பற்றியும், சந்தர்ப்பத்தைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் எனக்கு தேவ ஞானமுண்டு.”

2. “என் சுய புத்தியின் மேல் சாயாமல் என் முழூ இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாய் இருக்கிறேன்.”  (நீதி 3:5)
3. “என் வழிகளிலெல்லாம் அவரை (இயேசுவை) நினைத்துக் கொள்கிறேன். அவர் என் பாதைகளை செவ்வை படுத்துகிறார். “

4. “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.”  (சங் 138:8)

5. “தேவனுடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமா யிருக்கிறது.”

6. “கிறிஸ்துவின் வசனம் எனக்குள் சகல ஞானத்தோடும் சம்பூரணமாய் வாசம் பண்ணுகிறது.”

7. “நான் நல்ல மேய்ப்பனைப் பின் தொடர்கிறேன். அவரது சத்தம் எனக்குத் தெரியும். அந்நியனுடைய சத்தத்திற்குச் செவி கொடேன்.”

8. “இயேசுவே எனக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமா யிருக்கிறார். ஆகவே எனக்கு தேவ ஞானமுண்டு. கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவ நீதி யென்று அறிக்கை யிடுகிறேன். “

9. “நான் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் தேவனுடைய சித்தத்தை அறிகிற அறிவினால் நிரப்பப் பட்டிருக்கிறேன்.”

10. “நான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய கையின் கிரியையா யிருக்கிறேன். ஆகவே எனக்குள் கிறிஸ்துவின் சிந்தை யுண்டு. அவருடைய ஞானம் எனக்குள் உருவாக்கப்பட்டுள்ளது.”

11. “என்னை சிருஷ்டித்தவருடைய சாயலுக் கொப்பான புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறேன். பழைய மனுஷனைக் களைந்து விட்டேன்.”

12. “ஞானத்தின் ஆவியையும், தேவனை அறிகிற அறிவின் வெளிப்படுத்துதலையும் நான் பெற்றிருக்கிறேன். தேவனுடைய வல்லமையின் மகா மேன்மையான மத்துவம் இன்னதென்று அறியும் படிக்கு,  என்னுடைய மனக்கண்கள் பிரகாசிக்கப்பட்டுள்ளது.  நான் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் என் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகி யிருக்கிறேன். “

சங்கீதம்: 35 அதிகாரம

1. கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம் பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.

2. நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.

3. என்னைத் துன்பப்படுத்துகிற வர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.

4. என் பிராணனை வாங்கத் தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.

5. அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக;கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.

9. என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.

10. சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.

18. மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.

19. வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.

24. என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.
27. என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.

28. என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...