Sunday, April 23, 2017

செழிப்பான வாழ்வு - எனது அறிக்கை

செழிப்பான வாழ்வு - எனது அறிக்கை

1.  தேவன் என் மேல் அன்பு வைத்து என்னை ஆசீர்வதிக்கிறார்.  என்னைப் பெருகப்பண்ணி என்னுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் ஆசீர்வதிக்கிறார்.  சகல ஜனங்களைப் பார்க்கிலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.  (உபா 7:13-14)

2.  ஏற்ற காலத்தில் என் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதினால் நான் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தன் நன்மையின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் எனக்குத் திறந்துள்ளார்.  நான் பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பேன்.  நானோ கடன் வாங்காதிருப்பேன்.  (உபா 28:12)

3.  கர்த்தர் என்னை எப்போதும் வழிநடத்துகிறார்.  மகா வறட்சியான காலங்களில் அவர் என் தேவைகளை திருப்தி செய்கிறார்.  என் உடலையும் பெலனுள்ளதாக்குகிறார்.  நான் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப் போலவும் இருக்கிறேன்.  (ஏசா 58:11)

4.  முகம் மலர்ந்து கொடுக்கும் என்னிடம் தேவன் பிரியமாய் இருக்கிறார்.  தாராளமாய் விதைக்கிறபடியால் ஏராளமாய் அறுவடை செய்கிறேன்.  எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் எனக்குத் தருகிறார்.  அனைத்து நற்செயல்களையும் செய்வதற்கு மிகுதியாய் தருகிறார். (2கொரி 9:6-8)

5.  என் பொருளாலும் என் எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம் பண்ணுகிறேன்.  செழிப்பாய் வாழ்கிறேன்.  (நீதி 3:9-10)

6.  நான் நேர்மையுடன் நடக்கிறேன்.  சரியானதைப்பேசுகிறேன்.  வீண் ஆதாயத்தை வெறுக்கிறேன்.  உணவும் தண்ணீரும் தாராளமாய் எனக்கு உண்டு. பாதுகாப்புடன் வாழ்கிறேன்.  (ஏசா 13:15-16)

7.  நான் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன்.  அவரின் ஆசீர்வாதமே எனக்கு செல்வத்தைக் கொண்டு வருகிறது.  அதனோடே அவர் துன்பத்தைக் கூட்ட மாட்டார்.  (நீதி 10:22)

8.  நான் இரவும் பகலும் வேதத்தில் தியானமாய் இருக்கிறேன்.  நான் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்ட பலன் தரும் மரம் போல் இருக்கிறேன்.

9.  நான் சாந்தகுணமுள்ளவன்.  நான் கர்த்தரையே தேடுகிறேன்.  அவரைத் துதிக்கிறேன்.  புசித்து திருப்தி யடைகிறேன்.  என் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.  (சங் 22:26)

10.  கர்த்தருக்குப் பயந்து, அவருடைய வார்த்தையின்படி நடக்கிற நான் ஆசீர்வாதமானவன்.  என் பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களா யிருப்பார்கள்.  செல்வமும் சொத்துக்களும் என் வீட்டில் இருக்கின்றன.  (சங் 112:1-3)

11.  சிங்கக்குட்டிகள் பட்டினியாய் இருக்கலாம்.  ஆண்டவரைத் தேடும் எனக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.  (சங் 34:10)

12.  என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.  (பிலி 4:19)

13.  என் ஆத்துமா வாழ்கிறது போல நான் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கிறேன்.  (3 யோவான் 2)

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...