தெய்வீக பாதுகாப்பு
சங்கீதம்: 91 அதிகாரம்
1. உன்னதமானவரின் மறைவிலிருக்கிறேன். சர்வவல்லவருடைய நிழலில் தங்கியிருக்கிறேன்.
2. நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
3. அவர் என்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
4. அவர் தமது சிறகுகளாலே என்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுந்தேன்; அவருடைய சத்தியம் எனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
5. இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
6. இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பேன்.
7. என் பக்கத்தில் ஆயிரம்பேரும், என் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது என்னை அணுகாது.
8. என் கண்களால் மாத்திரம் நான் அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பேன்.
9. எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை எனக்குத் தாபரமாகக்கொண்டேன்.
10. ஆகையால் பொல்லாப்பு எனக்கு நேரிடாது, வாதை என் கூடாரத்தை அணுகாது.
11. என் வழிகளிலெல்லாம் என்னைக் காக்கும்படி, எனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
12. என் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் என்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
13. சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நான் நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவேன்.
14. நான் கர்தரிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவர் என்னை விடுவிப்பார்; அவர் நாமத்தை நான் அறிந்திருக்கிறபடியால் என்னை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பார்.
15. நான் அவரை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் எனக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வார்; ஆபத்தில் அவர் என்னோடிருந்து, என்னைத் தப்புவித்து, என்னைக் கனப்படுத்துகிறார்.
16. நீடித்த நாட்களால் என்னைத் திருப்தியாக்கி, அவர் இரட்சிப்பை எனக்குக் காண்பிக்கிறார்.
.1.நீதி 3:26 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என வேதத்தில் எழுதியிருக்கிறதே - எனவே கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் பெயராலே என்னையும், நான் நேசிப்பவர்களையும் தீவிரவாதிகளின் செயல்களிலிருந்து காத்து மூடிக் கொள்ளும்.
2. லூக்கா 18:3 எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று உம் வார்த்தையில் எழுதப்பட்டுள்ளதே - எனவே கர்த்தாவே, எனக்கு எதிராக எழும்பும் விரோதிகளுக்கு எதிராக நீர் யுத்தம் செய்து கிரியை செய்யும், பழி வாங்கும்.
3. நியா 5:20. வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின என்ற உம்முடைய வார்த்தையின் படி எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் வானங்களே, நீங்கள் இயேசுவின் நாமத்தில் யுத்தம் செய்வீர்.
4. எசே 20:38 கலகக்காரரையும் துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசிப்பதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என வேதத்தில் எழுதப்பட்டுள்ளதே - எனவே என் வீட்டையும், என் வீட்டிலுள்ள அனைத்தையும் சுத்தப் படுத்தும், பரிசுத்தப்படுத்தும்.
5. எசே 16:23 ஐயோ! உனக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புக்களெல்லாம் ஐயோ!, என வேதம் சொல்லுகிறதே - எனக்கு கெடுதல் செய்ய சத்துரு உபயோகிக்கும் எல்லா அஸ்திரங்களுக்கும் ஐயோ! ஆண்டவர் இயேசுவின் திருப் பெயராலே.
6. எசே 16:27 ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக் குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன் என்ற வார்த்தையின் படி - ஆண்டவர் இயேசுவின் பரிசுத்தமான நாமத்தில், எனக்கு எதிரான விரோதிகள் அவர்களுடைய விரோதிகளின் கரத்தில் விழுவார்களாக.
7. எசே 21:32 நீ அக்கினிக்கு இரையாவாய்; உன் இரத்தம் உன் தேசத்தின் நடுவில் சிந்திக்கிடக்கும்; நீ இனி நினைக்கப்படுவதில்லை; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார் என்ற உம்முடைய வார்த்தையின் படி - ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எனது ஆவிக்குரிய விரோதிகள் தெய்வீக அக்கினிக்கு எரிபொருளாவார்களாக.
8. எசே 30:8 நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்ற உம் வசனத்தின் படி - எனது விரோதிகளுக்கு உதவி செய்பவர்கள் இயேசுவின் வல்லமையான நாமத்தில் அழிக்கப்படுவார்களாக.
9. ஏரே 14:16 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள் என வேதத்தில் எழுதப்பட்டுள்ளதே - என்னையும், எனக்குப் பிரியமான வர்களையும் அழிக்க நினைப்பவர்கள் மேல் உமது வல்லமை இறங்கி வருத்தப் படுத்துவீராக.
10. எரே 50:29 பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள், ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிகட்டுங்கள்; அது செய்ததின்படி யெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது என்ற உம்முடைய வேதத்தில் எழுதப்பட்டுள்ளதே - எனவே கர்த்தரின் எல்லா சேனைகளும் எனது ஆவிக்குரிய விரோதிகளுக்கு எதிராக இரங்கி அவர்களை இயேசுவின் நாமத்தில் திருப்பிப் போடும்.
11. சங் 68:1 தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள் என உம் வார்த்தை சொல்லுகிறதே - கர்த்தாவே, உமது விரோதிகள் என் வாழ்வில் வரும் போது இயேசுவின் நாமத்தில் சிதறடிக்கப் படுவார்களாக.
12. ரோமர் 8:27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார் என்ற உம்முடைய வார்த்தையின் படி - உமது சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து, எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் வேண்டுதல் செய்யும் இயேசு கிறிஸ்துவின் ஜெபம் வீணாய் போகாமல் இருப்பதாக.
13. சங் 121:5-8 - 5. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். 6. பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. 7. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். 8. கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளதே -
கர்த்தாவே, உமது அக்கினியாலும், இயேசுவின் இரத்தத்தினாலும் என்னையும் எனக்கு அன்பானவர்களையும் இயேசுவின் நாமத்தினாலும் மூடிக் கொள்ளும்.
14. 1தெச 5:16-18. - 16. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். 17. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். 18. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்ற உம்முடைய வார்த்தையின் படி - எனக்கும் நான் நேசிப்பவர்களுக்கும் தகப்பனே! நீர் ஒரு தெய்வீக பாதுகாப்பு வைத்திருப்பதற்காய் நன்றி சொல்கிறேன். நீர் எனக்கு செய்கிற ஒவ்வொரு நன்மைக்கும் நன்றி சொல்லும் இருதயத்தை தந்திருப்பதற்காய் நன்றி ஆண்டவரே.
என்னையும் என் வீட்டையும் சந்தோஷத்தாலும் நிரப்பியிருப்பதற்காய் நன்றி சொல்கிறேன். எனது எல்லா ஜெபங்களுக்கும் இயேசுவின் நாமத்தில் பதில் தருவதற்காய் நன்றி. உமது நாமம் உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment