தேவனுடைய பாதுகாப்பிலுள்ள நம்பிக்கையை அறிக்கையிடுதல்
"தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி., இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16)
உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்றவேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே
பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்.
ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே.
எபேசியர் 6:10-12. - "கடைசியாக என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்."
நம்முடை எதிரி பிசாசு. அவனை எதிர்த்து யுத்தத்தில் ஈடுபட போர் புரிய உரிய ஆயுதங்கள் தேவை.
"ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு."
அமெரிக்கத்திருப்புதல் - "ஏனெனில் நமது போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல ஆட்சி செய்பவர்களுக்கு எதிராகவும், அதிகாரங்களுக்கு எதிராகவும் இந்த இருள் உலகத்தின் சக்திகளுக்கெதிராகவும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கெதிராகவும் உள்ளது."
LIVING BIBLE திருப்புதலில் - மாம்சமும் இரத்தமுமுள்ள மக்களோடு நமது போராட்டமில்லாமல் உடலற்ற மக்களோடும் காணக்கூடாத உலகத்தினை ஆட்சி செய்யும் பொல்லாத மக்களோடும் வல்லமைபொருந்திய சாத்தானுடைய ஆட்களோடும், இவ்வுலகத்தை ஆட்சிசெய்யும் இருளின் பெரிய பொல்லாத இளவரசர்களோடும், ஆவிகளின் உலகத்திலுள்ள எண்ணிலடங்காத பொல்லாத ஆவிகளோடும் நமக்கு போராட்டம் உண்டு."
தேவனுடைய பாதுகாப்பிலுள்ளல் நம்பிக்கையை அறிக்கையிடுத
1. எனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நான் குற்றப்படுத்துகிறேன். இது கர்த்தருடைய ஊழியக்காரனான என்னுடைய சுதந்திரம். இது என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.
2. எனக்கு விரோதமாய் பேசப்படுபவைகள் எவைகளோ, ஜெபிக்கப்படுவது எதுவோ, எனக்கு யார் தீங்கு செய்ய முற்படுகிறார்களோ அவர்களை நான் மன்னிக்கிறேன். (அவர்களின் பெயர்கள் தெரிந்தால் இங்கு கூறவும்.)
அவர்களை மன்னித்தது மட்டுமன்று, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களை நான் ஆசீர்வதிக்கிறேன்.
3. நீரே, நீர் மட்டுமே என் தேவன் என்று அறிக்கையிடுகிறேன். உம்மையன்றி எனக்கு வேறுயாருமில்லை. நீதியுள்ள தேவனே, இரட்சகரே, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன்.
4. நிபந்தனையற்ற கீழ்ப்படிதலுடன் நான் என்னை புதிதாய் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். என்னை ஒப்புக் கொடுத்தது மட்டுமன்றி, உமது வார்த்தையின் படி செய்ய ஒப்புக் கொடுக்கிறேன். நான் பிசாசையும், அவன் தாக்குதல்களையும், எல்லா அழுத்தங்களையும், வஞ்சனைகளையும், எனக்கு விரோதமாய் பயன்பட இருக்கும் கருவிகளையும், பிரதிநிதிகளையும் எதிர்த்து நிற்கறேன்.
5. அவைகளுக்கு நான் என்னை ஒப்புக் கொடுப்பதில்லை. அவைகளை எதிர்க்கிறேன். என்னை விட்டு விரட்டுகிறேன். இயேசுவின் நாமத்தினால் என்னைவிட்டு புறம்பாக்குகிறேன்.
6. சிறப்பாக பெலவீனம், தொற்றுநோய், வலி, வீக்கம், வேண்டாத வளர்ச்சி, ஒவ்வாமை, வைரசுகள், புண்கள், இன்சுலின் குறைபாடு, தைராய்டு குறைபாடு, எல்லாவித பில்லிசூனியங்கள், எல்லாவித மன உளைச்சல்கள். (உனக்கு விரோதமாய் செயல்படும் நோயையும் அல்லது தீய ஆவியையும் பெயர் சொல்லி இங்கு குறிப்பிடு)
7. இறுதியாக கர்த்தாவே இயேசுவின் சிலுவையின் தியாக மரணத்தினால் நான் சாபத்திலிருந்து விடுபட்டு நீர் ஆபிரகாமை ஆசீர்வதித்த எல்லா ஆசீர்வாதங்களுக்குள்ளும் கடந்து வருகிறேன்: உயர்வு, ஆரோக்கியம், இனப்பெருக்கம், வளமை, வெற்றி, தேவ நட்பு, தேவ தயவு ஆகிய ஆசீர்வாதங்களுக்குள் கடந்து வருகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment