Saturday, April 22, 2017

மீட்கப்பட்டோர் இப்படிச் சொல்வார்களாக

மீட்கப்பட்டோர் இப்படிச் சொல்வார்களாக

1. என்னுடைய சரீரம் மீட்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, இயேசுவின் இரத்தத்தினாலே பரிசுத்தமாக்கப் பட்டு இருக்கிறதினாலே அது பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது.

2. என் சரீரத்தின் உடலுருப்புகள் தேவனுடைய மகிமைக்கும், ஊழியத்திற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட நீதியின் அவயவங்களாயிருக்கிறது.

3. என்னிடத்தில் பிசாசிற்கு எந்த பங்குமில்லை.  என் மேல் அதிகாரம் செலுத்தவோ, கணக்கை தீர்த்து வை என்று சொல்லவோ பிசாசிற்கு உரிமையில்லை.  அனைத்தும் இயேசுவின் இரத்தத்தினாலே கட்டித் தீர்க்கப்பட்டாயிற்று.

4. ஆட்டுக்குட்டீயானவருடைய இரத்தத்தினாலும், என் சாட்சியின் வசனத்தினாலும் நான் சாத்தானை மேற்கொண்டேன்.  மரணமே நேரிடுவதாயினும் அதிலிருந்து தப்பும்படி என் ஜீவனை பொருட்படுத்த மாட்டேன்.

5. என் சரீரம் கர்த்தருடையது.  கர்த்தர் எ சரீரரத்துக்குரியவர்.  (சங் 107:2; 1யோவான் 1:7; ரோமர் 3:23-25; 8:33-34; 1 கொரி 6:19; எபி 13:12; வெளி 12:11; எபே 1:7; ரோமர் 6:13; 1 கொரி 6:13)

உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமையா

தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்

வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கிறேன்
மீண்டும் தலைதூக்காமல்
மாண்டு மடியட்டுமே

கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உம்மைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்

கர்த்தா உம் குரல் கேட்கணும்.

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...