Saturday, April 22, 2017

ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக ஸ்தோத்திரம்:

ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக ஸ்தோத்திரம்:

1.  பிதாவே, எங்கள் தேவனே,  உம்முடைய முன்னறிவின் படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்படிதலுக்கும், இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் தெளிக்கப்படுதலுக்கும், நாங்களும், எங்கள் சந்ததியும் தெரிந்து கொள்ளப்பட்டோமே - ஸ்தோத்திரம்.  (1 பேதுரு 1:2)

2.  எங்களை ஆழைத்த நீர் பரிசுத்தர்.  உம்மைப் போல நாங்களும் எங்கள் நடக்கைககள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருக்க எங்களுக்கு கிருபையருளும்.  (1 பேதுரு 1:15-16)

3.  எங்களை அந்தகாரத்தினின்று உம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தீரே - நன்றி ஆண்டவரே.  நாங்கள் உம்முடைய புண்ணியங்களை அறிவிக்கும் படி தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாகவும்,  ராஜரீகமான ஆசாரிய கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், உமக்கு சொந்த ஜனமாயும் இருக்கிறோமே - நன்றி இயேசு ராஜா. (1 பேதுரு 2:9)

4.  உம்முடைய தீர்மானத்தின் படி அழைக்கப்பட்ட நாங்கள் தேவனிடத்தில் அன்புகூருகிறோம், சகலமும் எங்கள் வாழ்க்கையிலே நன்மைக் கேதுவாக நடக்கிறது - நன்றி எங்கள் மீட்பரே.

5.  முன்னறிந்த தேவனே - ஸ்தோத்திரம்.  முன்னறிந்த எங்களை உம்முடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்தீரே - நன்றி தந்தையே.  எங்களை அழைத்தீரே, நீதிமானாக்கினீரே, மகிமைப்படுத்தினீரே - நன்றி Daddy.

6.  மரித்த இயேசு உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய சுதந்திரத்திற்கேதுவாக ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும் படி உமது மிகுந்த இரக்கத்தின் படியே எங்களை மறுபடியும் ஜெனிப்பித்தீரே - நன்றி Daddy.  இரட்சிப்புக் கேதுவான எங்கள் விசுவாசம் உம்முடைய பலத்தினாலே காக்கப்படுகிறதே - நன்றி Daddy. பரலோகத்திலே வைக்கப்பட்டிருக்கிற அந்த சுதந்திரத்துக்காக - நன்றி Daddy.  (1பேதுரு 1:4-5)

7.  மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும் படி, ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்படிந்து, ஆத்துமாவை சுத்தமாக்கிக் கொண்டவர்களாய் சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூர அருள் செய்தீரே - நன்றி ஆண்டவரே.  (1 பேதுரு 1:22)

8.  என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் எங்களை ஜெனிப்பித்தீரே - நன்றி ஆண்டவரே.  (1 பேதுரு 1:23)

9.  எங்களை கிரயத்துக்கு கொண்ட ஆண்டவரே - ஸ்தோத்திரம்.  (2 பேதுரு 2:1)

10.  எங்கள் தேவனும், இரட்சகராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய நீதியால் விசுவாசத்தை பெற அருள் செய்தீரே - ஸ்தோத்திரம்.  (2பேதுரு 1:1)

11. தேவனையும், எங்கள் கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் எங்கள் வாழ்வில், கிருபையையும் , சமாதானத்தையும் பெருகச்செய்கிறீர் - ஸ்தோத்திரம்.

12.  தம்முடைய மகிமையினாலும், காருணியத்தினாலும் எங்களை அழைத்த உம்மை, அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும், தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், உம்முடைய திவ்விய வல்லமை எங்களுக்கு தந்ததே - ஸ்தோத்திரம்.  (2 பேதுரு 1:3)

13.  இச்சையினாலே உலத்திலுண்டான கேட்டுக்குத் தப்ப அருள் செய்பவரே - ஸ்தோத்திரம்.

14.  திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகா மேன்மையான அருமையான வாக்குத்தத்தங்கள் எங்களுக்கு அளிக்கப்பட்டதற்காக - ஸ்தோத்திரம்  (2பேதுரு 1:4)

15.  நாங்கள்  அதிக ஜாக்கிரதை யுள்ளவர்களாக, எங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்க அருள் செய்பவரே - ஸ்தோத்திரம்.  (2 பேதுரு 1:5-7)

16.  கிறிஸ்து இயேசுவுக்குள் எங்களை உமது நித்திய மகிமைக்கு அழைத்தவரே - ஸ்தோத்திரம்.

17.  சகல கிருபையும் பொருந்திய தேவனே, எங்களைச் சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துகிறவரே உமக்கு ஸ்தோத்திரம்.

18.  நாங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை, தேவனுடைய மெய்யான கிருபை - ஸ்தோத்திரம்.  (1 பேதுரு 5:10-12)

19.  ஆசீரவாதத்தை சுதந்தரித்துக் கொள்ள எங்களை அழைத்தவரே, ஜீவனை விரும்பி நல்ல நாட்களைக்  காண, பொல்லாப்புக்கு நாவையும், கபடத்துக்கு உதடுகளையும் விலக்கி, நன்மை செய்து, சமாதானத்தை தேடி அதைப்பின் தொடர கட்டளையிட்டவரே உம்மைத் துதிக்கிறேன்.  (1 பேதுரு 3:9-11)

20.  கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி எங்களுக்குள்ளே ஸ்திரபடுத்தப்பட்ட படியே, நாங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும், எல்லா அறிவிலும், மற்ற எல்லாவற்றிலும், சம்பூரணமாக்கப்பட்டிருக்கிற படியால் அவர் மூலமாய் எங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, அப்பா உமக்கு ஸ்தோத்திரம்.

21.  நாங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்கு காத்திருக்க கிருபை அளித்தீரே, உம்க்கு நன்றி.

22.  எங்கள் கர்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நாங்கள் குற்றம் சாட்டப்படாதவர்களாய் இருக்கும் படி முடிவு பரியந்தம் எங்களை ஸ்திரப்படுத்துபவரே, உமக்கு ஸ்தோத்திரம்.

23.  கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு எங்களை அழைத்த உண்மையுள்ள தேவனே - ஸ்தோத்திரம்.  (1 கொரி 1:4-9)

24.  பிரிவினைகளில்லாமல், ஏகமனதும், ஏகயோசனையும், உள்ளவர்களாய் சீர்பொருந்தியிருக்க அருள் செய்பவரே ஸ்தோத்திரம். (1 கொரி 1:10)

25.  கிறிஸ்துவைப்பற்றின உபதேசம் எங்களுக்கு தேவபெலனா யிருக்கிறது. ஸ்தோத்திரம்.  (1 கொரி 1:18)

26.  எங்களுக்கு கிறிஸ்து தேவபெலனும், தேவஞானமுமாய் இருக்கிறார்.  ஸ்தோத்திரம்.  (1 கொரி 1:24)

27.  கர்தராகிய கிறிஸ்து இயேசுவைக் குறித்தே மேன்மைபாராட்டுகிறேன்.  அவரே தேவனால் எங்களுக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமாயிருக்கிறார்.  (1 கொரி 1:30-31)

28.  சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்தை அளிக்கிறவரே ஸ்தோத்திரம்.  (1 பேதுரு 1:8)

தேவனுடைய பாதுகாப்பிலுள்ள நம்பிக்கையை அறிக்கையிடுதல்

"தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி., இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."  (யோவான் 3:16)

உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்றவேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே

பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்.

ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே.

எபேசியர் 6:10-12. - "கடைசியாக என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.  நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்."

நம்முடை எதிரி பிசாசு.  அவனை எதிர்த்து யுத்தத்தில் ஈடுபட போர் புரிய உரிய ஆயுதங்கள் தேவை.

"ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு."

அமெரிக்கத்திருப்புதல் - "ஏனெனில் நமது போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல ஆட்சி செய்பவர்களுக்கு எதிராகவும், அதிகாரங்களுக்கு எதிராகவும் இந்த இருள் உலகத்தின் சக்திகளுக்கெதிராகவும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கெதிராகவும் உள்ளது."

LIVING BIBLE திருப்புதலில்  - மாம்சமும் இரத்தமுமுள்ள மக்களோடு நமது போராட்டமில்லாமல் உடலற்ற மக்களோடும் காணக்கூடாத உலகத்தினை ஆட்சி செய்யும் பொல்லாத மக்களோடும் வல்லமைபொருந்திய சாத்தானுடைய ஆட்களோடும், இவ்வுலகத்தை ஆட்சிசெய்யும் இருளின் பெரிய பொல்லாத இளவரசர்களோடும், ஆவிகளின் உலகத்திலுள்ள எண்ணிலடங்காத பொல்லாத ஆவிகளோடும் நமக்கு போராட்டம் உண்டு."

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...