கிறிஸ்துவுக்குள் திரட்சி
ஆண்டவரே, நீர் என் மேய்பராயிருக்கிறீர். நான் தாழ்ச்சியடையேன். என் ஜுவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத்தொடரும். நான் உம்மைத் தேடுவதால் ஒரு நன்மையும் எனக்குக் குறைவுபடாது. உம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின் படியே என் குறைவுகளையெல்லாம் மகிமையிலே நிறைவாக்குகிறீர். (ங் 23:1,6; 34:19; பிலி 4:19)
கிறிஸ்துவுக்குள் பரிபூரணம்
ஆண்டவரே நீர் எனக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தீர். உமக்குள்ள தெல்லாம் என்னுடையதாயிருக்கிறது. நீர் நன்மையினால் என் வாயை திருப்தியாக்குகிறீர். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால். (யோவான் 10:10; லூக் 15:31; சங் 103:5)
கிறிஸ்துவுக்குள் பூர்த்தி
ஆண்டவரே, கிழக்கிலும், மேற்கிலும், வனாந்திர திசையிலுமிருந்தும் ஜெயம் வராது. நீரே நியாயாபதி. நீரே ஒருவனை தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறீர். ஆகாயத்துப் பறவைகளைப் போஷித்து, காட்டு புஷ்பங்களுக்கு உடுத்துவிக்கிற நீரே என்னுடைய பரமபிதா. இவைகள் எனக்கு வேண்டியவைகள் என்று நீர் அறிந்திருக்கிறீர். என் ஆத்துமா வாழ்கிறது போல நான் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருப்பேன். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால். ( சங் 75:5-6; மத் 6:25-32; 3 யோவான் 2)
கிறிஸ்துவுக்குள் 100 மடங்கு பெருக்கம்
ஆண்டவரே, வறடசியான காலங்களில் என் ஆத்துமாவைத் திருப்தியாக்குகிறீர். என் சத்துருக்களைப் பார்க்கிலும் நான் பலத்தவனாயிருக்கிறேன். எனக்கு வரும் நிந்தைகளிலும், துன்பங்களிலும் சந்தோஷப்பட்டு களிகூருகிறேன். உமது மகிமையான ஆவியானவர் என் மேல் தங்கியிருக்கிறார். நான் நூறு மடங்கு பலனைப் பெறுவேன். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால்.
கிறிஸ்துவுக்குள் வாரி வழங்கும் அற்புதம்:
ஆண்டவரே, விதைக்கிறவனுக்கு விதையையயும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் தருகிறீர். நீர் விதையை அளித்து அதைப் பெருகப் பண்ணுகிறீர். நான் அதை விதைத்து என்னுடைய நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்கிறேன். நான் எல்லாவற்றிலும் மிகுந்த சம்பூரணமுள்ளவனாயிருக்கிறேன். ஜீவனுக்கும் தேவ பக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும் உம்முடைய திவ்விய வல்லமை எனக்கு அருளியிருக்கிறது. உம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி எங்கள் குறைவையெல்லாம் நீர் மகிமையிலே நிறைவாக்குகிறீர். எல்லாம் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால். (2 பேதுரு 1:3; 2கொரி 9:10-11; பிலி 4:19)
No comments:
Post a Comment