Saturday, April 22, 2017

விசுவாச அறிக்கை / FAITH CONFESSION





இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
                                                         மத்தேயு 12: 34, 35
தோத்திர ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள கடவுளே! சர்வ ஜுவ தயாபர பிதாவே! அபாத்திரரான உமது அடியாராகிய எங்களுக்கும் மற்றெல்லா மனிதருக்கும், தேவரீர் அருளிச் செய்த பற்பல கிருபைக்காகவும், அன்புள்ள தயவுக்காகவும், நாங்கள் மிகுந்த தாழ்மையோடும், முழு இருதயத்தோடும் உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம்.  தேவரீர் எங்களை சிருஷ்டித்ததற்காகவும், காப்பாற்றுகிறதற்காகவும், இம்மைக்குரிய எல்லா ஆசீவாதங்களுக்காகவும், உம்மைத் துதிக்கிறோம்; விசேஷமாய் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினாலே உலகத்தை மீட்டுக் கொண்ட விலைமதியாத உமது அன்புக்காகவும், கிருபையின் யத்தனங்களுக்காகவும், மகிமை யடைவோம் என்கிற நம்பிக்கைக்காகவும் உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம்.  நாங்கள் உண்மையாய் நன்றியறிந்த இருதயமுள்ளவர்களாய் இருக்கவும், எங்களை உமது ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு முன்பாகப் பரிசுத்தமும், நீதியுமுள்ளவர்களாய் நடக்கவும், எங்கள் வாக்கினாலே மாத்திரமல்ல, எங்கள் நடக்கையினாலேயும் உம்முடைய புகழைப் பிரஸ்தாபப்படுத்தவும், தேவரீர் செய்த உபகாரங்களெல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளும் உணர்வை எங்களுக்கு  அருளிச்செய்ய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.  அவருக்கும் தேவரீருக்கும் பரிசுத்த ஆவிக்கும் எல்லா மேன்மையும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக.  ஆமென்.
••…  ஆண்டவரே! உமது இரக்கத்தை எங்களுக்குக் காண்பியும்.
••  ஆண்டவரே! உமது இரக்கத்தை எங்களுக்கு அருளிச்செய்யும்.
~~…  ஆண்டவரே! எங்களை ஆளுபவர்களை வழிநடத்தும்.
~~  அவர்களுக்குப் பரத்திலிருந்து வரும் ஞானத்தைக் கொடுத்தருளும்.
√√…  உம்முடைய பணிவிடைக்காரருக்கு நீதியைத் தரிப்பியும்.
√√  நீர் தெரிந்து கொண்ட ஜனத்தைச் சந்தோஷப்படுத்தும்.
>>…  ஆண்டவரே! உம்முடைய ஜனத்தை இரட்சியும்.
>>  உம்முடைய சுதந்திரத்தை ஆசீர்வதியும்.
**…  ஆண்டவரே! எங்கள் காலத்தில் சமாதானத்தைத் தந்தருளும்.
**  தேவரீரேயல்லாமல் உலகத்தை ஆளுபவர் வேறு ஒருவருமில்லை.
++…  கடவுளே! எங்கள் இருதயங்களைச் சுத்திகரியும்.
++  உம்முடைய பரிசுத்த ஆவியை எங்களிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாதேயும்.
**  நான் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன்.  (2 கொரி 5:21)
**  நான் பாவத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன்.  (ரோமர் 6:14)
**  கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நான் நிதிமானாக்கப்பட்டிருக்கிறேன்.  (கலா 2:16)
**  நான் தேவனுடைய பிள்ளை.  (ரோமர் 8:17)
**  தேவனுடைய பரிசுத்த ஆவி என்னில் வாசமாயிருக்கிறார்.  (ரோமர் 8:9)
**  நான் நீதிக்கு அடிமை.  (ரோமர் 6:18)
**  நான் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாயிருக்கிறேன்.  (2 கொரி5:17)
**  கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டேன்.  (எபே 2:8)
**  நான் முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவன்.  (ரோமர் 8:37)
**  நான் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன்.  (கலா 2:20)
**  நான் தேவனுடைய செய்கையா யிருக்கிறேன்.   (எபே 2:10)
••  என்னை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்கு சொந்தமான பிள்ளையாக்கிக்கொள்ள அன்பினால் முன் குறித்தார்.  (எபே 1:5,6)
••  என் ஜுவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிது. (கொலோ 3:3)
•• நான் தேவனுடைய சுதந்திரம். (ரோமர் 8:17)
••  நான் கிறிஸ்துவுக்கு உன் சுதந்திரம். (ரோமர் 8:17)
••  நான் தேவனிடதில் சமாதானம் பெற்றிருக்கிறேன். (ரோமர் 5:11)
••  இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். (எபே 2:5,6)
••  ஆண்டவர் என்னை கடையனாக ஆக்காமல் முதல்வனாக்கினார்.  (உபா 28:13)
••  ஆண்டவர் என்னை தாழ்ந்து போக விடாமல் உயர்வாக்கினார். (உபா 28:13)
••  நான் கொண்டுள்ள நம்பிக்கை வழியாய் மீட்புக்காக கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறேன். (பேதுரு 1:5)
••  தேவன் தம்முடைய சாயலிலே என்னை சிருஷ்டித்தார்.  (ஆதி1:27) ஆம் கடவுள் தம் உருவில் என்னைப் படைத்தார்.
••  கிறிஸ்து இயேசு சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை சுமந்தார்; நாம் பாவங்களுக்கு இறந்து நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார்.  அவருடைய காயங்களால் நான் குணமானேன்.  (பேதுரு 2:24)
••  உண்மையான திராட்சை செடி இயேசு; தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்; நான் கொடி.  செடியில் என்ன சாரம் பாய்கிறதோ அதே தான் கொடியிலும் பாயும். நான் மிகுந்த கனிகளைத் தருவேன். (யோவான் 15:12)
~~  என்னுடைய போராட்டம் மனிதர்களோடு மட்டும் அல்ல, ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகளோடும் எனக்கு போராட்டம் உண்டு.  (எபே 6:12)
~~  வல்லமை பெறும்படி கடவுள் அருளிய எல்லாப் படைக் கலன்களையும் எடுத்துக் கொண்டேன்.  எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றி பெறுவேன்.  (எபே 6 :13)
~~  நான் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம். நான் தூயவனாக, மாசற்றவனாக அவர் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்தார்.
~~  தேவன், என் பேரில் நினைத்திருக்கும் நினைவுகள் தீமைக்கல்ல, நன்மைக்கே.  அவர் எனக்காக வகுத்திருக்கும் திட்டங்கள் வளமான எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் எனக்கு அளிப்பதற்கான நல் வாழ்வின் திட்டங்களே!  (எரே 29 :11)
~~  எல்லா சூழ்நிலைகளிலேயும் எல்லா நேரத்திலும் கர்த்தரின் கிருபை எனக்குப் போதுமானது.  (2 கொரி12:9)
~~  நித்தமும் என் தேவைகளை எகோவாயீரே சந்திப்பார்.  (பிலி.4:13)
~~  உலகத்தில் இருக்கிறவனைக் காட்டிலும் எனக்குள் இருப்பவர் மகா பெரியவர்.  (1 யோவா 4:4)
~~  தேவன் என் பட்சத்தில் இருக்கிறார்; எனக்கு விரோதமாய் இருப்பவன் யார்? (ரோமர் 8:31)
~~  பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவைகளையே நாடுவேன்.  (கொலோ 3:2)
~~  சமாதான கர்த்தரே! உம்மையே நான் நம்பியிருக்கிறேன்.  நீர் என்னை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.  ஸ்தோத்திரம்!  (ஏசா 26:3)
~~  நான் தீமையை நன்மையால் வெல்லுவேன்.  (ரோமர் 12:21)
~~  என் சத்துருக்களை நான் சிநேகிப்பேன்.  (மத் 5:44)
••  என்னை துன்பப்படுத்துகிற வர்களுக்காக ஜெபிப்பேன்.  (மத் 5:44)
••  என்னைப் பகைக்கிற வர்களுக்காக நான் நன்மை செய்வேன்.  (மத் 5:44)
••  அனைத்திலும் முதலாவதாக தேவனுடைய இராஜ்யத்தைத் தேடுவேன்.  (மத் 6:33)
••  நான் இந்த பூமிக்கு உப்பாயிருக்கிறேன்.  (மத் 5:13)
••  நான் இவ்வுலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறேன்.  (மத் 5:14)
••  பரலோகப்பிதா மகிமைப்படும் படியாக நான் நற்கிரியைகளைச் செய்வேன்.  (மத் 5:16)
••  கேட்பதற்கு துரிதமாயும் பேசுவதற்கு தாமதமாயும் இருப்பேன்.  (யாக் 1:19)
••  விழித்திருந்து ஜெபிப்பேன்.  (எபே 6:18)
••  அனுதினமும் என்னை வெறுத்து சிலுவையை சுமப்பேன்.  (லூக்14:27)
••  எனக்கும் என் நேசருக்குமிடையே எதையும் அனுமதிக்க மாட்டேன்.
••  தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்வேன்.  (எபே 6:11)
••  எக்காலத்திலும் என் ஆண்டவர் இயேசுவை மட்டும் திருப்தி செய்ய முயலுவேன்.  (கொலோ 1:10)
√√  நான் தேவனிலும் அவர் வார்த்தையிலும் நிலைத்திருப்பேன்.  நான் கேட்டுக் கொள்வது எனக்கு அருளப்படும்.  (யோவான் 15:7)
√√  கர்த்தர் என்னோடு இருப்பதால் நான் தனியே யில்லை.  (மத் 28:20)
√√  தினமும் சிலுவையை சிறிது நேரமாகிலும் தியானிப்பேன். 
√√  நம்பிக்கையிலே சந்தோஷமா யிருப்பேன், உபத்திரவத்திலே பொறுமையாயிருப்பேன், ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்பேன்.  (ரோமர் 12:12)
√√  கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே என் பெலன்.  (நெகே 8:10)
√√  கிறிஸ்து இயேசுவே எனக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.  (1 கொரி 1:30)
√√  கர்த்தர் என்னுடைய நியாயாதிபதி, கர்த்தர் என் நியாயபிரமாணிகர், கர்த்தர் என் ராஜா.  (ஏசா 33:32)
√√  என் குடியிருப்பு சமாதான தாபரமாயும் நிலையான வாசஸ்தலமாயும் அமைதியாய் தங்கும் இடமாயும் இருக்கும்.  (ஏசா 32:18)
√√  கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்.  அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.  (நீதி 10:22)
√√  நான் நிற்பதும் நடப்பதும் கர்த்தரால் உறுதிப்படும்.  (சங் 37:23)
√√  என் வழிகள் கர்த்தருக்கு பிரியமாயிருக்கிறது.  என் சத்துருக்கள் என்னோடு சமாதானம் ஆகும் படி செய்கிறார்.  (நீதி 16:7)
√√  நான் சாகாமல் பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். (சங் 118:17)
++  மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்.  ஆனால் கர்த்தருடைய யோசனையே நிலை நிற்கும்.  (நீதி19:21)
++  நான் கர்த்தரை நேசிக்கிற படியால் எனக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும்.  (ரோமர் 8:28)
++  தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பெலனும், அன்பும், தெளிந்தபுத்தியையே தந்திருக்கிறார்.  (2 தீமோ 1:7)  ஸ்தோத்திரம்!
++  கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக எனக்குள் இருக்கிறார்.  (கொலோ 1:27)
++  ஆண்டவரே! என்றுமுள கடவுள்; அவர் விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை  அய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.  ஸ்தோத்திரம்!
ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்; கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஒடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார். (ஏசாயா 40:28-31)ஸ்தோத்திரம்!
++  நான் கர்த்தருக்கு காத்திருப்பதால் புது பெலனடைவேன்.  ஸ்தோத்திரம்!
++  என் பெலவீனத்தில் அவர் (கர்த்தர்) பெலன் பூரணமாய் விளங்கும்.  (2 கொரி. 12:9)
++  நான் பெலவீனமாய் இருக்கும் போதே பெலமுள்ளவனாய் இருக்கிறேன்.  (2 கொரி 12:10)
++  நான் ஒடினாலும் இளைப்படைவதில்லை; நடந்தாலும் சோர்வடைவதில்லை.  (ஏசா 40:31)
++  என் ஜுவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்.  (சங் 23:6)
++  (அவர்) கர்த்தர் என்னோடு இருக்கிறபடியால் நான் பொல்லாப்புக்குப் பயப்படேன். (சங் 23:4)
++  பழிவாங்குதல் தேவனுக்குரியது. (ரோமர் 12:19)
**  ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும் படி செய்வார். (நீதி 16:7) ஸ்தோத்திரம்!
**  உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை (கடவுளை) நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப் படுத்துவார். (நீதி 3:5-6) என்ற வசனத்துக்காக நன்றி ஆண்டவரே.
**  மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார் (நீதி 5:21) என வேதத்தில் படிக்கிறேனே ஸ்தோத்திரம்!
**  மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள் (நீதி 14:12)  என வேதம் எச்சரிக்கிறதே ஸ்தோத்திரம்!
** பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளை காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
நீங்கள் புத்தியைக் கேட்டு ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவி கொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான் - (நீதி 8:32-35) என வேதத்தில் நீர் சொல்லியுள்ளீர்.  ஸ்தோத்திரம்!
~~  மேகம்போன்ற திரளான சாட்சிகள் என்னை சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், என்னை சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, எனக்கு நியமித்திருக்கிற ஒட்டத்தில் பொறுமையோடே ஒடுவேன்.  (எபி 12:1)  ஸ்தோத்திரம்.
~~  என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்கு சாட்சியாயிருக்கிறார்.  (ரோமர் 1:9)
~~  கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்க்கப்படேன்.  அது விசுவாசிக்கிற எனக்கு தேவபெலனாயிருக்கிறது.  (ரோமர் 1:16)
~~  விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.  (ரோமர் 1:17)
~~  நான் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடப்பேன்.  ஸ்தோத்திரம்!
~~  என் ஆத்துமா வாழ்ந்திருப்பது போல் நான் எல்லாவற்றிலும்  வாழ்ந்து சுகமாயிருப்பேன்.  (3 யோவான் 2)
~~  என் தேவனாகிய கர்த்தரிடத்தில் நான் என் இருதயத்தோடும், முழு மனதோடும், என் முழு பெலத்தோடும், என் முழு ஆத்துமாவோடும் அன்பு கூறுவேன்.  (மத் 22:37)
~~  என்னிடத்தில் நான் அன்பு கூருவது போல நான் பிறனிடத்திலும் அன்புகூருவேன்.  (மத் 22:39)
~~  பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் என்னை சேதப்படுத்தாது.  (சங் 121:6)
~~  கர்த்தர் என்னை எல்லா தீங்கிற்கும் விலக்கி காப்பார்.  (சங் 121:7)
~~  நான் வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பேன், போகையிலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பேன். (உபா 28:6)
~~  என் கூடையும் மா பிசைகிற தொட்டியும் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கும்.  உபா 28:5)
√√  என் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; என் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கும்.  ஏசா 54:13)
√√  கர்த்தர் எல்லா தீமையினின்றும் என்னை இரட்சித்து தம்முடைய பரம இராஜ்ஜியத்தை அடையும்படி காப்பாற்றுவார்.  (2 தீமோ 4:18)
√√  ஆண்டவரே! என் புகலிடம்;  உன்னதரே! என் உறைவிடம்.  தீங்கு எனக்கு நேரிடாது; வாதை என் கூடாரத்தை நெருங்காது.  (சங் 91:10)
√√  நான் ஜாதிகளுக்கு கடன் கொடுப்பேன்; நானோ கடன் வாங்காமல் இருப்பேன்.  (உபா 28:12)
√√  கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பேன்.  ஆண்டவரோடு இணைந்து மகிழுவேன்.  (பிலி 4:4)
√√  எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டேன்.  ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் இயேசுவின் நாமத்தில் கடவுளிடம் என் விண்ணப்பங்களைத் தெரிவிப்பேன்.  (பிலி 4:6)
√√  அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள என் உள்ளத்தையும் மனதையும் பாதுகாக்கும்.  (பிலி 4:7)
√√  உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனதில் இருத்துகிறேன்.  (பிலி 4:8)
√√  அமைதியை அருளும் கடவுள் என்னோடிருக்கிறார்.  வேதத்தில் நான் கற்றுக்கொண்டவைகளை, கேட்டறிந்தவைகளை, கண்டுணர்ந்தவைகளை, பெற்றுக்கொண்டவைகளையே கடைபிடிப்பேன்.  (பிலி 4:9)
√√  எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்க கற்றுக் கொண்டுள்ளேன்.  எனக்கு வருமையிலும் வாழத்தெரியும்; வளமையிலும் வாழத்தெரியும்.  வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எச்சூழலிலும் வாழ பயிற்சி பெற்றிருக்கிறேன்.  (பிலி 4:11-12)
√√  எனக்கு வலுவூட்டுகிற கிறிஸ்துவின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.  (பிலி 4:13)
√√  என் கடவுள் கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.  ஸ்தோத்திரம்!   (பிலி4:19)  எங்கள் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்! அல்லேலூயா!!
••  ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் என்னோடிருக்கிறது.  (பிலி 4:23)  ஸ்தோத்திரம்!
••  நாங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே எற்று இயேசுவின் நாமத்தில் செயல்படுகிறோம்.
••  கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும்  இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவனாக நேர்மையோடு இயேசுவின் நாமத்தில்  வாழ்ந்து வருகின்றேன். ஆமென்!  அல்லேலூயா!! (பிலி 1:9-11)
••  ஆண்டவரை உறுதியாய் நம்பி கடவுள் வார்த்தையை அச்சமின்றி எடுத்துரைக்க துணிவு பெற்றிருக்கிறேன்.  (பிலி 1:14)
••  நல்மனத்தோடு கிறிஸ்துவை அறிவிக்கத் தூண்டுவது அன்பே, நற்செய்திக்காகக் குரல் கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.  (பிலி 1:15-16)
••  என்ன நேர்ந்தாலும் வெட்கமுறமாட்டேன்.  இன்றும் என்றும் வாழ்விலும் சாவிலும் முழுத்துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப் படுத்துவேன்.  இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு.  (பிலி 1:20)
••  நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.  (பிலி 1:21)
••  நான் கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்து கொள்கின்றேன்.  (பிலி 1:27)
••  கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்வதற்கு மட்டும் அல்ல, அவருக்காக துன்பங்களை ஏற்பதற்கும் நாங்கள் அருள் பெற்றுள்ளோம்.  (பிலி 1:29)
••  கிறிஸ்துவிடமிருந்து நான் ஊக்கம் பெற்றுள்ளேன்.  அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளேன். மனத்தாழ்மையோடு மற்றவர்களை உயர்ந்தவராக கருதுகிறேன். (பிலி 2:1-3)
••  கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே என்னிலும் இருக்கட்டும்.  (பிலி 2: 5)
••  கடவுளே எங்களுள் செயலாற்றுகின்றார்.  அவரே தம் திருவுளப்படி நாங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.  (பிலி 2:13)
[]  முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்வேன்.  (பிலி 2:14)
[]  குற்றமும் கபடற்றவனாய், கடவுளின் மாசற்ற குழந்தையாய் திகழ்வேன்.  உலகில் ஒளிதரும் சுடர்களாக துலங்குவேன்.  வாழ்வின் வார்த்தையை பற்றிக் கொள்வேன். (பிலி 2:15)
[]  உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவை பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்.  இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்.  அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்.  கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாக கருதுகிறேன்.  கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்.  பிலி 3:8-9)
[]  கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கி தொடர்ந்து ஒடுகிறேன்.  கிறிஸ்துஇயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.  (பிலி 3:13-14)
[]  நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.  அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணிய வைக்கவும் வல்லவர்.  (பிலி 3:20-21)
[]  நான் பொய் செல்லமாட்டேன்.  (கொலோ 3:9)

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...