Saturday, April 22, 2017

கவலையிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை

தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜுவனை அடையும் படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16) என்ற உம்முடைய வார்த்தைக்காக கோடா கோடி நன்றி Daddy.

இயேசு நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.  (தீத்து 2:14) - நன்றி இயேசுவே!

"தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?" (ரோமர் 8:32)  - நன்றி Daddy.

தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்ற மில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலக தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்.  (எபேசியர் 1:4) -  நன்றி Daddy.

உன்னதபாட்டு 8:6 - "நேசம் மரணத்தைப் போல வலியது."

இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததினால் அன்பு மரணத்தைவிட வலிமையானது என்பதை நிரூபித்துள்ளார்.  Amen.

தேவனுடைய அன்பு தனிப்பட்ட நபருக்குரியது.

தேவனுடைய அன்பு நித்தியமானது.

தேவனுடைய அன்பு உலக தோற்றத்திற்கு முற்பட்டது.

தேவனுடைய அன்பு தடைசெய்ய முடியாதது.

"அனாதி சினேகத்தால் உன்னை சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தினால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்."  (ஏரேமியா 31:3) THANK YOU FATHER.

எங்கள் முன்னோர்களால் நாங்கள் பாரம்பரியமாய் நாங்கள் அனுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்க்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே நாங்கள் மீட்க்கபட்டதை அறிந்து நன்றியோடு உமக்கு ஆராதனை செய்து உம்மை எங்கள் வாழ்நாளெல்லாம் தொழுது சேவிக்க எங்களை நாங்கள் தாழ்த்தி அர்ப்பணிக்கின்றோம்.

திரும்பவும் பயப்படுகிறதற்கு நாங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல் 'அப்பா பிதாவே' என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றோமே - நன்றி ஆண்டவரே!

நாங்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று தூய ஆவியானவர் தாமே எங்களுடைய ஆவியுடனே சாட்சி கொடுக்கிறார் - நன்றி தெய்வமே!

நாங்கள் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே. தேவனுடைய சுதந்திரராம், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரராமே. நன்றி இயேசுவே!

கிறிஸ்துவுடனேகூட நாங்கள் மகிமைப்படும்படிக்கு அவருடனே கூட பாடுபட அப்பா பிதாவே எங்களை ஒப்புக் கொடுக்கின்றோம்.  (ரோமர் 8: 15-17)

இயேசு தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு அநேகருடைய பாவத்தை தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன் என ஏசாயா 53:12. ல் வாக்கு அருளியுள்ளீரே - நன்றி தகப்பனே!

1.  நாம் மன்னிக்கப்படும் படி இயேசு தண்டிக்கப்பட்டார்.

2.  நாம் சுகம் பெறும்படி இயேசு காயப்பட்டார்.

3.  அவருடைய நீதியினால் நாம் நீதியாகும்படி இயேசு நமது பாவங்களினால் பாவமாக்கப்பட்டார்.

4.  நாம் அவருடைய வாழ்வை வாழும்படி இயேசு தமது மரணத்தை அடைந்தார்.

5.  அவருடைய பரிபூரணத்தில் நாம் பங்கு கொள்ளும்படி இயேசு நமது வருமையை ஏற்றுக் கொண்டார்.

6.  நாம் அவருடைய மகிமையில் பங்குகொள்ள இயேசு இகழப்பட்டார்.

7.  பிதா நம்மை எற்றுக்கொள்ளும் படியாக இயேசு நம் நிமித்தம் ஒதுக்கி தள்ளப்பட்டார்.

8.  நாம் ஆசீர்வாதத்தைப் பெறும்படி இயேசு சாபமானார்.

உந்தன் ஆவி எந்தன்
உள்ளம் தங்க வேண்டும்.
எந்த நாளும் உந்தன் நாமம்
பாட வேண்டும

உள்ளமெல்லாம் அன்பினாலே
பொங்க வேண்டும்.
கள்ளம் நீங்கி காலமெல்லாம்
வாழ வேண்டும்.

பாவமான சுபாவம் எல்லாம்
நீங்க வேண்டும்.
தேவ ஆவி தேற்றி என்றும்
நடத்த வேண்டும்.

ஜுவ தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்.
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழ வேண்டும்.

வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்.
வாழ்நாளெல்லாம் பணிசெய்து
மடிய வேண்டும்.

ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்.
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும்.

கவலையிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை பெற இந்த மாத்திரைகளை தினமும் மூன்று வேளை அறிக்கை யிடுங்கள்.

1. “நான் கிறிஸ்துவின் சரிரமாயிருக்கிறேன். சாத்தானுக்கு என் மீது அதிகாரம் இல்லை. நான் தீமையை நன்மையினால் வெல்லுகிறேன்.”

2. “நான் தேவனால் உண்டாயிருந்து சாத்தானை ஜெயித்தேன். ஏனெனில் உலகத்தில் இருக்கிவனிலும் என்னில் இருக்கிறவர் பெறியவர்.”  (1யோவான் 4:4)

3. “நான் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட யிருக்கிறீர். உமது ஆவியும், உமது வார்த்தையும் என்னைத் தேற்றும். “  (சங் 23:4)
4. “கொடுமை எனக்குத் தூரமாயிருக்கிறது. பயம் என்னை அணுகாது.”  (ஏசா 54:14)

5. “எனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயூதமும் வாய்க்காதேபோம். நான் செய்வதெல்லாம் வாய்க்கும். ஏனெனில் நான் நீர்க்கால்கள் ஒரமாய் நடப்பட்ட மரத்தைப் போலிருக்கிறேன். “  (ஏசா 54:17)

6. “தேவனுடைய சித்தத்தின் படி நான் பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கப்பட்டிருக்கிறேன்.”

7. “நான் திருவசனத்தைக் கேட்கிறவனாய் மாத்திரமல்ல அதன் படி செய்கிறவனாய் இருக்கிறேன். ஆகவே நான் எனது செய்கையில் ஆசீர்வதிக்கப்பட்டு அவற்றில் களிகூறுகிறேன்.” (யாக்கோபு 1:22)

8. “பொல்லாப்பு எனக்கு நேரிடாது. வாதை என் கூடாரத்தை அணுகாது. என் வழிகளிளெல்லாம் என்னைக் காக்கும் படி எனக்காகத் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார். என் பாதையில் ஜீவனுண்டு மரணம் இல்லை.  (சங் 91:10-11; நீதி 12:28)

9. “நான் விசுவாசம் என்னும் கேடகத்தை யெடுத்துக்கொண்டு என் மீது பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை எல்லாம் அவித்துப்போடுகிறேன்.”  (எபே 6:16)

10. “கிறிஸ்து என்னை நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆகவே வியாதியோ வேதனையோ என் சரிரத்திலே வரக்கூடாதெனக் கட்ட ளையிடுகிறேன்.  இந்த சரீரத்தைத் தொடும் எந்த விஷக் கிருமியும், வைரசும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாகிறது. இந்த சரீரதத்திலுள்ள ஒவ்வொரு உருப்பும் தசையும், நரம்பும் எவ்வாறு இயங்க வேண்டும் என்று தேவன் உண்டாகினாறோ அவ்வாறே இயங்குமென கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டளையிடுகிறேன்.”

11. “நான் ஜெயம் கொள்ளுகிறவன். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலும், சாட்சியின் வசனத்தினாலும் நான் ஜெயம் கொள்ளுகிறேன்.”  (வெளி 12:11)

12. “நான் சாத்தானை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நிற்பதால் அவன் என்னை விட்டு ஓடிப்போனான்.”

13. தேவனுடைய வசனம் என்றென்றும் வானங்களில் நிலைத்திருக்கிறது. ஆகவே அவருடைய வசனங்களை பூமியில் நிலை நிறுத்துகிறேன்.”

14. “இருளின் அதிகாரத்தினின்று நான் விடுதலையாகி, அவருடைய அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறேன.” .

15. என் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள்; என் பிள்ளைகளின் சமாதானம் பொரிதாயிருக்கும்.  

16. இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்.  யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.  அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.  (உபா 33:25-27)

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...