Friday, April 21, 2017

தேவனோடு உள்ள உறவு





 "Let the Light of God swallow every darkness in my life in the name of Jesus."
"கர்த்தாவே! இடைவிடாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண, என் ஜெபம் சுத்தமாய் யிருக்க இயேசுவின் நாமத்தின் நிமித்தம் கிருபை செய்யும்." (1 தெச.5:7; லூக்கா 18:1; யோபு 16:17)
"கர்த்தாவே! விழித்திருந்து ஜெபிக்க இயேசுவின் நாமத்தின் நிமித்தம் கிருபை செய்யும். ( மாற்கு 14:38)
**  "ஏனோக்கு மொத்தம் 360 ஆண்டுகள் வாழ்ந்தான்.  ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை.  ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார் என ஆதியாகமம் 5:23,24ல் படிக்கிறேனே ஸ்தோத்திரம்!
ஏனோக்கு உம்மோடு சஞ்சரித்தது போல நானும் உம்மோடு சஞ்சரிக்க இயேசுவின் நாமத்தின் நிமித்தம் கிருபை செய்யும்.
(1).  பிதாவே! நான் உம்மை கனம் பண்ணுகிறவனாய் வாழ இயேசுவின் நாமத்தில் உதவி செய்யும்.  (மல் 1:6)
(2).  தேவனே! என்னுடைய கண்கள் உம்மை மகிமை பொருந்தினவராய் காணட்டும்.  (ஏசா 33:17)
**  ஆண்டவரே! எங்கள் மீது இரக்கமாய் இரும்; நாங்கள் உமக்காக காத்திருக்கிறோம்; அதிகாலைதோறும் எங்களை காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும் இருப்பீராக! (ஏசா 33:2)
**  மாட்சிக்குரியவரே! உம்மைத் துதிக்கிறேன்.
**  உன்னதத்தில் உறைகின்ற வரே! உம்மைப் போற்றுகிறேன்.
**  ஞானத்தையும், அறிவாற்றலை யும் நல்குபவரே! உம்மை நான் ஆராதனை செய்கின்றேன்.
**  உம்மைப்பற்றிய அச்சமே எங்களது அரும் செல்வம் - உமக்கு ஸ்தோத்திரம்!
**  நீதிநெறியில் நடப்பவரை, நேர்மையானவற்றை பேசுபவரை உன்னதங்களில் வாழச் செய்பவரே! உமக்கு ஸ்தோத்திரம்!
**  ஆண்டவரே! நீரே எமக்கு நீதித் தலைவர்; எமக்கு நியமம் வழங்குபவர்; நீரே எமக்கு வேந்தர்; நீரே எமக்கு மீட்பு அளிப்பவர். உமது நாமம் வாழ்க!
(3).  ஆண்டவரே! ஏசாயா உம்மைக் கண்டது போல உயரமானதோர் அரியணையில் நீர் அமர்ந்திருப்பதை என் கண்களும் கான இயேசுவின் நாமத்தில் அருள் செய்யும்.
**  படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது என சேராபீன்கள் உரத்த குரலில் கூறிக் கொண்டிருப்பதை என் காதுகளும் கேட்க இயேசுவின் நாமத்தில் அருள் செய்யும்.
**  தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழும் என் வாயை பலிபீடத்திலிருந்து நெறுப்புப்பொறி ஒன்றை சேராபீன் ஒருவர் குறட்டால் எடுத்து வந்து தொட்டு என் குற்றப் பழியை என்னை விட்டு அகற்றி என் பாவம் மன்னிக்கப்பட்டது என்று ஏசாயாவுக்கு சொன்னது போல எனக்கும் சொல்லட்டும். ஸ்தோத்திரம்!
(4).  தேவனே! மோசேக்கு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே தரிசனமானீரே! அவரோடு பேசினீரே! என் கண்களும் உம்மைக்காண, என் காதுகளும் உம் குரலைக் கேட்க இயேசுவின் நாமத்தின் நிமித்தம் அருள் செய்வீராக!  ஸ்தோத்திரம்! (யாத் 3:2)
(5).  ஆபிரகாமிற்கு தரிசனமாகி ஆபிரகாமோடு பேசினவரே! உம் சத்தத்தை என் காதுகளும் இயேசுவின் நாமத்தில் கேட்க அருள் செய்யும். (ஆதி 12:1)
**  உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன்.  உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.  உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னை சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும் - என்ற உம்முடைய வாக்குக்காக நன்றி ஆண்டவரே! கோடாகோடி நன்றி!  (ஆதி 12:2)
(6).  ஈசாக்கிற்கு தரிசனமாகி, "உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே.  ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்.  உனக்கு ஆசி வழங்கி, என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு உனது வழி மரபைப் பெருகச் செய்வேன் " என்று சொன்னீரே! உமக்கு ஸ்தோத்திரம்! எனக்கும் உம்முடைய தரிசனத்தைத் தாரும்.  இயேசுவின் நாமத்தில் என்னையும் ஆசீர்வதியும். (ஆதி 26:24)
(7).  சாமுவேலுக்கு தரிசனமாகி நீங்க செய்யப் போவதை சொன்னீங்களே! ஸ்தோத்திரம்! நான் செய்ய வேண்டிய காரியங்களையும், நீர் செய்யப் போவதையும் எனக்கு இயேசுவின் நாமத்தின் நிமித்தம் சொல்லும்.  சாமுவேலைப் போல நானும் ஆண்டவரே! பேசும் உம் அடியேன் கேட்கிறேன் என்று சொல்ல கிருபை செய்யும்.  (சாமு 3:10,11)
(8).  கர்த்தாவே! கிதியோனுக்கு தரிசனமாகி உனக்கு இருக்கிற பலத்தோடே போ; இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய் என்று சொன்னவரே! உம்மைத் துதிக்கிறேன்.  என் மூலமும் அனேகர் இரட்சிக்கப்பட உதவி செய்யும்.  (நியா 6:14)
(9).  அண்டவரே! உமது அடியானாகிய நான் உமது பார்வையில் உண்மையுடனும், நேரிய உள்ளத்துடனும் நடக்க அருள் செய்யும்.  உமது பேரன்பை காண்பியும். நன்மை தீமை பகுத்தரியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்கு தந்தருளும். (1 இராஜா 3:6)
**  சாலமோனுக்கு ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை கொடுத்தது போல ஆண்டவரே எனக்கும் ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தைத் தாரும்.  (இராஜா 3:12)
(10).  தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவிற்கு தலைவனிடத்தில் பரிவும், இரக்கமும் கிடைக்கச் செய்தீரே! எங்கள் பிள்ளைகளுக்கும் அவ்வாரே பணி செய்யும் இடத்தில் எல்லார் கண்களிலும் பரிவும் இரக்கமும் கிடைக்க இயேசுவின் நாமத்தின் நிமித்தம் அருள் செய்யும்.  (தானி 1:9)
**  தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் தோற்றம் மிகக் களையுள்ளதாயும், உடற்கட்டு மிகச் செழுமை யுள்ளதாயும் காணப்பட்டது என வேதம் (தானியேல் 1:15) சொல்லுகிறதே உமது அடியேனின் பிள்ளைகளுக்கும் அப்படிப்பட்ட கிருபையை இயேசுவின் நாமத்தில் அருளிச் செய்யும்.
**  இந்த நான்கு இளைஞர்களுக் கும் அறிவையும், அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும், ஞானத்தையும், சாமர்த்தியத்தை யும் கொடுத்தீரே! தானியேலுக்கு எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றலை கொடுத்தீரே! உமக்கு ஸ்தோத்திரம்! உமது அடியேனுக்கும், அடியேனின் சந்ததிக்கும் அதே கிருபைகளை இயேசுவின் நாமத்தின் நிமித்தம் அருளிச் செய்யும்.  உம்மை துதித்து ஆராதனை செய்கிறேன்.
(11).  அரசன் இந்த நான்கு இளைஞர்களோடு உரையாடின போது தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைப் போல் வேறெருவரும் காணப்பட வில்லை என்றும் இவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததையும் கண்டறிந்தான் என வேதத்தில் (தானி 1:17,19,20)  படிக்கிறேனே! இப்படிப்பட்ட கிருபைகளை உமது அடியவர்களுக்கும், அவர்கள் சந்ததிக்கும் இயேசுவின் நாமத்தின் நிமித்தம் அருளிச் செய்யும்.  ஸ்தோத்திரம்!
(12).  பவுலுக்கு தரிசனமாகி அவனை வல்லமையாய் பயன்படுத்தியது போல என்னையும், என் பிள்ளை களையும் வல்லமையாய் இயேசுவின் நாமத்தின் நிமித்தம் பயன்படுத்தும். ஆண்டவரே! உமக்கே மகிமை!  ஸ்தோத்திரம்! (அப் 9:4)
(13).  அண்டவரே! தோமாவைப் போல் உம்மைக்கண்டு விசுவாசிக்க வேண்டும் என்று எண்ணாதபடி உம்மைக் காணாதிருந்தும் விசுவாசிக்க இயேசுவின் நாமத்தில் கிருபை செய்யும்.  ஸ்தோத்திரம்! (யோவான் 20:29)
(14).  ஆண்டவராகிய இயேசுவே உம்முடைய சீஷர்களோடு சஞ்சரித்தது போல என்னோடும் சஞ்சரியும்.  (யோவான் 3:22)
(15).  நாங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து எங்களுக்கு மறுமொழி அளிப்பவரே - உமக்கு ஸ்தோத்திரம்.
**  வழி இதுவே, இதில் நடந்து செல்லுங்கள் என்று எனக்குப் பின்னாலே நீர் சொல்லும் வார்த்தையை என் காதுகள் கேட்கவும் அதன்படி நடக்கவும் இயேசுவின் நாமத்தில் உதவி செய்யும்.  (ஏசா 30:21)
(16).  யாரும் அழிந்து போகாமல் எல்லாரும் மனம் மாறவேண்டு மென விரும்புகிறவரே - உமக்கு ஸ்தோத்திரம்!
**  தூய இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என விரும்புகிறவரே!  உமக்கு ஸ்தோத்திரம்!
**  கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு, எங்கள் உறுதி நிலையினின்று விழுந்து விடாதபடி கவனமாயிருக்க இயேசுவின் நாமத்தின் நிமித்தம் அருள் செய்யும்.
**  ஆண்டவராகிய இயேசுவே! எங்கள் மீட்பரே!  உம்முடைய அருளிலும், அறிவிலும் வளர்ச்சி அடைய கிருபை செய்யும்.  (2பேதுரு 3:18)
(17). தந்தையே! உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும், உம்முடைய திருக்குமாரனாகிய கிறிஸ்து இயேசுவையும் அறிவதே நிலைவாழ்வு என யோவான் 17:3ல் படிக்கிறேனே, உம்மையும், நீர் அனுப்பிய இயேசுவையும் நான் முழுமையாக அறிந்து கொள்ள தூய ஆவியானவர் என்னை கரம் பிடித்து வழிநடத்துவாராக! (யோவான் 17:3)
(18).  பத்து தொழுநோயாளர்களை "ஐயா! இயேசுவே எங்களுக்கு இரங்கும்" என்ற அவர்களின் வேண்டுதலைக் கேட்டு, அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய் உங்களை குருக்களிடம் காண்பியுங்கள்" என கூறி அவர்கள் போகும் போது அவர்களின் நோயை குணக்கினீரே! உமக்கு ஸ்தோத்திரம்!  அவர்களில் ஒருவர் தன் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டே உம்மிடம் திரும்பி வந்து நன்றி செலுத்தினாரே! உமக்கு ஸ்தோத்திரம்!
**  ஆண்டவராகிய இயேசுவே!  நான் உம்மை மகிமைப் படுத்துகிறவனாய் வாழ உதவி செய்யும்.  (லூக்கா 17:11-19)
(19).  ஆண்டவரே! உம்முடைய செல்வாக்கு பெருக வேண்டும்; எனது செல்வாக்கு குறைய வேண்டும்.
**  விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என யோவான் 3:27 ல் எழுதப் பட்டிருக்கிறதே!  ஸ்தோத்திரம்!
(20).  ஆண்டவராகிய இயேசுவே! உம்முடைய சித்தத்தை அறிந்து அதன்படி நான் செய்ய எனக்கு உதவி செய்யும்.  (லூக்கா 12:47)
**  தலைவர் வந்து பார்க்கும் போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள்.  அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களை பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் (லூக்கா 12:37) என்ற உம் வார்த்தைக்காக  ஸ்தோத்திரம்!
**  நீங்களும் ஆயத்தமாயிருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார் என லூக்கா 12:39 செல்லுகிறதே ஸ்தோத்திரம்!
**  தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியை செய்து கொண்டிரருப்பவரை தம் உடமைக் கெல்லாம் அதிகாரியாக அமர்த்துவார் என உம் வார்த்தை (லூக்கா 12:43) செல்லுகிறதே உமக்கு பிரியமாக நாங்கள் நடக்க எங்களுக்கு உணர்வைத் இயேசுவின் நாமத்தின் நிமித்தம்   தாரும்.
(21).  ஆண்டவராகிய இயேசுவே! உம்முடைய அன்புக்குரியவன் நான்.  நீர் விரும்பியதை செய்வேன்.  எல்லா சூழ்நிலையிலும் உம்முடைய சித்தத்தையே நான் செய்ய எனக்கு கிருபை தாரும்.  ஸ்தோத்திரம்!  (ஏசாயா 48:14)
**  இதுமுதல் புதியனவற்றையும் நீ அறியாத மறைபொருள்களையும் உனக்கு வெளிப்படுத்துவேன் (ஏசாயா 48:6) என்று சென்னீரே! உம்முடைய வார்த்தையின் படியே அநுகிரகம் செய்யும். ஸ்தோத்திரம்!
** என் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன்.  எனக்குச் செவி கொடு; நானே அவர்; தொடக்கமும் நானே; முடிவும் நானே.  என் கையே மண்ணுலகிற்கு அடித்தளமிட்டது; என் வலக்கை விண்ணுலகை விரித்து வைத்தது.  நான் அழைக்கும் போது அவை ஒருங்கினைந்து நின்றன என வேதத்தில் நீர் கூறியுள்ளீர்.  ஸ்தோத்திரம்! (ஏசாயா 48:11-13)
(22).  நான் கிறிஸ்துவைப்போல் நடப்பது போன்று நீங்களும் என்னைப்போல நடங்கள் என்று கூறிய பவுலைப் போல நான் உம்மைப் பின்பற்ற கிருபை செய்யும்.  (1 கொரி 11:1)
**  ஆண் கடவுளின் சாயலும் மாட்சியும் ஆவார்; பெண் ஆணின் பெருமையாய் இருக்கிறார் என வேதம் சொல்லுகிறதே - ஸ்தோத்திரம்!  (1 கொரிந்தி 11:7)
(23).  அண்டவரே! உம்முடைய சமூகத்தினின்று விலகும் எண்ணம் ஒருபோதும் எனக்கு நேரிடாதபடி இயேசுவின் நாமத்தால் காத்துக்கொள்ளும். (யோனா 1:10)
(24).  நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார்.  எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால் அவரில் நான் மகிழ்ச்சியுறேன் - என எபிரேயர் 10:38 செல்லுகிறதே ஆண்டவரே நான் பின்வாங்கிப் போய் விடாதபடி இயேசுவின் நாமத்தில் காத்துக்கொள்ளும்.
(25).  தேவனே! நான் உம்முடைய ஆட்சியை நாட கிருபை செய்யும்.  (லூக்கா 12:31)
(26).  அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.  உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்.  விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள்.  உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் - என்ற உம்முடைய ஆலோசனையை ஏற்று செயல்படும் உள்ளத்தையே எனக்குத் தாங்க.  ஸ்தோத்திரம்!
(27).  தேவனே! உம்மிடத்தில் நான் ஐசுவரியவானாக இருக்க கிருபை செய்யும். (லூக்கா 12:21)
(28).  எவ்வகை பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கை யாய் இருங்கள் என வேத வசனம் (லூக் 12:15) சொல்லுகிறதே ஸ்தோத்திரம்!
(29).  கர்த்தாவே! உம்மை விட்டு எடுபடாத நல்ல பங்கை நான் தெரிந்து கொள்ள இயேசுவின் நாமத்தால் உதவி செய்யும்.  (லூக்கா 10:42)
(30).  தந்தையே! உமது பெயரின் ஆற்றலால் எங்களைக் காத்தருளும். நாங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.  தீயோனிடமிருந்து எங்களைக் காத்தருளும். உம்முடைய உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்.  உமது வார்த்தையே உண்மை. எங்களுக்காக இயேசு தம்மையே அர்பணமாக்கினாரே! ஸ்தோத்திரம்! (யோவான் 17 அதி)
(31).  பிதாவே! உமக்கு பயப்படுகிற பயத்தோடு வாழ இயேசுவின் நாமத்தில் உதவி செய்யும்.  (மல் 1:6)
(32).  பிதாவே! உம்முடைய நாமத்தை நான் அசட்டை பண்ணாதபடி இயேசுவின் நாமத்தில் காத்துக்கொள்ளும்.   (மல் 1:6)
(33).  தேவனே! உம்முடைய விருப்பத்திற்கேற்ப நான் நடந்தால் எனக்கு ஞானத்தையும், அறிவாற்றலையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக வேதத்தில் (பிரசங்கி 2:26) நீர் வாக்கு பண்ணியுள்ளீர்.
கர்த்தாவே! உம்முடைய பார்வைக்கு நான் நல்லவனாய் இருக்க இயேசுவின் நாமத்தில் உதவி செய்யும்.  ஸ்தோத்திரம்!
(34).  ஒளி இருளைவிட மேலானதாய் இருப்பது போல ஞானமும் மதிகேட்டைவிட மேலானதாய் இருக்கக் கண்டேன்.  ஸ்தோத்திரம்!
(35).  ஆண்டவரே! உண்மையான கடவுள்! அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்.  ஸ்தோத்திரம்!
** அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்; தம் ஞானத்தால் பூவுலகை நிலைநாட்டினார்; தம் கூர் மதியால் விண்ணுலகை விரித்தார்.  ஸ்தோத்திரம்!
**  ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்; நீர் பெரியவர்; உமது பெயர் ஆற்றல் மிக்கது.  மக்களினங்களின் மன்னவரே! உமக்கு அஞ்சாதவர் யார்? அரசுரிமை உமதே - ஸ்தோத்திரம்!
ஆண்டவரே!  உம்மை அறிந்து புரிந்து கொண்டேன்.  பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் நீர் செயலாற்றுகிறீர்.   உம்மைக் குறித்தே நான் மேன்மை பாராட்ட எனக்கு கிருபை தாரும்.  (எரேமியா 10:24)
(36).  ஆண்டவரே! நான் உம்மைக் குறித்தே மேன்மை பாராட்ட இயேசுவின் நாமத்தில் கிருபை செய்யும்!
**  ஞானி தன் ஞானத்தைகுறித்து மேன்மை பாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமதைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம்;  ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்;  மேன்மை பாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயதையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்து இருக்கிறதைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன் என்றும் இவைகளில்மேல் பிரியமாய் இருக்கிறேன் என்றும் எரேமியா 9:23-24ல் செல்லியிருக்கிறீர். ஸ்தோத்திரம்!
(37).  பரிசுத்தமுள்ளவரே! உம்முடைய நாமத்தை நான் பரிசுத்த குலைச்சலாக்காதபடி இயேசுவின் நாமத்தில்  காத்துக்கொள்ளும். (லேவி 20:3)
(38).  ஆண்டவரே! என்னுடைய வார்த்தைகளினால் நான் உம்மை வருத்தப்படுத்தாது இயேசுவின் நாமத்தில் காத்துக்கொள்ளும்.
**  உன் மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடம் கொடாதே; நீ தேவனுக்குப் பயந்திரு (பிரசங்கி 5:6-7) என வேத வசனம் எச்சரிக்கிறதே - ஸ்தோத்திரம்!
(39) .  ஆண்டவரே! என் ஜெபத்தை கேட்டருளுபவரே! உம்மோடு பொருத்தனை பண்ணி நேர்ந்து கொண்டதை நிறைவேற்ற இயேசுவின் நாமத்தில் அருள் செய்யும். (பிர 5:4-5)
**  நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டால், அதைச்செலுத்த தாமதியாதே; நீ நேர்ந்து கொண்டதைச் செய்.  நீ நேர்ந்து கொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்  (பிர 5:4-5) என்று உம் வசனத்தில் நீர் சொல்லியுள்ளீர். ஸ்தோத்திரம்!
(40).  கர்த்தாவே! தசமபாகத்திலும் காணிக்கைகளிலும் நான் உம்மை வஞ்சிக்காதபடிக்கு என்னை இயேசுவின் நாமத்தின் நிமித்தம் காத்தருளும்.  (மல்கியா 3:8)
** என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதினால் என்னை சோதித்துப்பாருங்கள் என்று மல்கியா 3:10 ல் சொல்லி யிருக்கிறீரே! ஸ்தோத்திரம்!
(41).  மகிமையின் தேவனே! கர்த்தராகிய என் ஆண்டவரே! இயேசு ராஜா!  என்னில் நீர் மகிமைப்படும்படி பரிசுத்தமாய் நான் வாழ எனக்கு உம்முடைய கிருபையைத்தாரும்.  ஸ்தோத்திரம்!
(42).  நீதியின் தேவனே! இயேசு ராஜா! உம்மை சந்திக்க நான் மகிழ்சியாய் நீதி செய்யவும், என் வழிகளில் உம்மை நினைக்கவும் கிருபை செய்யும்.  ஸ்தோத்திரம்!
(43) .  மிகுந்த மனஉருக்க முடையவரே! நான் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்க இயேசுவின் நாமத்தில்  அருள்செய்யும்.
**  கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன் (2யோவான் 9) - என வேதம் சொல்லுகிறதே ஸ்தோத்திரம்!
(44).  ஆண்டவராகிய இயேசுவே! உம்மில் நிலைத்திருக்க அருள் செய்யும்.   (யோவான் 15:4)
உம்மில் நிலைத்திருந்து அதிக கனிகளைக் கொடுக்க உதவி செய்யும். (யோவான் 15:5)
**  நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்.  கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது.  அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.  ஸ்தோத்திரம்!
நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள்.  ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.  எங்களை விட்டுப்  பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.  (யோவான் 15:5)  ஸ்தோத்திரம்!
(45).  ஆண்டவராகிய இயேசுவே! என் ஆத்துமாவை கொழுமையான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாக்கும்.  ((ஏசா 55:2) நான் உமக்கு கவனமாக செவிகொடுப்பேன்.  தாவீதுக்கு நீர் காட்டிய மாறாத பேரன்பை எனக்கும் காட்டும்.  ஸ்தோத்திரம்!
(46).  கர்த்தாவே! என் பொறுமையினால் என் ஆத்துமாவை காத்துக்கொள்ள இயேசுவின் நாமத்தில் உதவி செய்யும். 
(47).  ஆண்டவரே! உமக்கு நான் காத்திருப்பேன்.  நான் வெட்கமடையாதபடி செய்யும்.  (ஏசாயா 49:23)
(48).  சர்வ வல்லமையுள்ள தேவனே!  நிற்கிறேன் என்று எண்ணுகிற நான் விழாதபடி எச்சரிக்கையாயிருக்க எனக்கு இயேசுவின் நாமத்தில் உதவி செய்யும்.  (கொரி 10:12)
**  உங்களுக்கு எற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல.  கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்குமேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருளுவார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்.  ஸ்தோத்திரம்!
(49).  அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவமரங்கள் பயன் அற்றுப்போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும் நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பராகிய கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.  ஸ்தோத்திரம்!
(50).  ஆண்டவராகிய தலைவரே! என் வலிமை; அவர் என் கால்களை மானின் காலைப் போலாக்குவார்;  உயர்ந்த இடங்களில் என்னை நடத்திச் செல்வார்.  (அபகூக் 3:17-19)
(51).  அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல்  நம்பிக்கையாயிருப்பேன் என்று கூறிய யோபுவைப் போல உம்மை எக்காலத்திலும் நம்பியிருப்பேன் கர்த்தாவே. ஸ்தோத்திரம்!
தேவ சமுகத்திற்கான ஜெபம்.
(52).  கர்த்தாவே! எனது பிரசன்னம் உன்னோடு செல்லும்.  நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று மோசேக்கு சொன்னவரே! எங்களுக்கு முன்னும் உமது சமுகம் செல்ல கிருபை தாரும்.  ஸ்தோத்திரம்!
(53).  ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன்.  என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஸ்தோத்திரம்!
வாழ்வின் வழியை அறியச் செய்பவரே! ஸ்தோத்திரம்!
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. ஸ்தோத்திரம்!
(54).  ஆண்டவரே! உமது வல்லமையில் பூரிப்படைகின்றேன்.  நீர் அளித்த வெற்றியில் அக்களிக்கின்றேன்.  என் உள்ளம் விரும்பியதை நீர் எனக்கு தந்தருளினீர்; என் வாய் கேட்டதை நீர் மறுக்கவில்லை.  மேன்மையையும் மாண்பையையும் எனக்கு அருளினீர்; ஸ்தோத்திரம்!
உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை நீர் அருளுகின்றீர்; உமது முகத்தை நான் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். ஸ்தோத்திரம்!
ஆண்டவரே! நீரே என் நம்பிக்கை; உமது பேரன்பில் அசைவுராதிருப்பேன்.  நான் உமது வல்லமையை புகழ்ந்து பாடுவேன். (சங் 21)
(55).  நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்; நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்;  உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்.  ஸ்தோத்திரம்! (சங் 41:12)

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...