Sunday, April 23, 2017

நான் சுகமானேன்...எனது அறிக்கை

நான் சுகமானேன்...எனது அறிக்கை

1.  சர்வ வல்லமையுள்ள தேவன் எனது பரிகாரி.  எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகள் ஒன்றையும் எனக்கு வரப் பண்ணார்  ஆவியானவரின் உதவியால் தேவனுடைய சத்தத்திற்கு நான் கவனமாய் செவிகொடுத்து அவருக்குப் பிரியமானவைகளை யெல்லாம் நிறைவேற்றுகிறேன்.  (யாத் 15:26)

2.  நான் பாவங்களுக்கு மரித்து நீதிக்குப் பிழைத்திருக்கிறேன்.  இயேசு கிறிஸ்து எனது எல்லா வியாதியையும்சிலுவையிலே சுமந்து தீர்த்துவிட்டார்.  அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்.  வியாதி என் சரீரத்தை மேற்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன்.  (1பேதுரு 2:24; ஏசா 53:4)

3.  தேவன் தமது வசனத்தை அனுப்பி என்னை குணமாக்கி என்னை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.  (சங் 107:20)

4.  நானும் என் விட்டாரும் தேவனில் அன்புகூர்ந்து அவரையே சேவிப்பதால் என் தேவன்  என்னுடைய அப்பத்தையும்,  தண்ணீரையும் ஆசீர்வதிக்கிறார்.  என் மத்தியில் இருக்கும் எல்லா வியாதியையும் நீக்கி விட்டார்.  (யாத் 23:25)

5.  தேவன் எனக்கு செளக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி என்னை குணமாக்கி எனக்கு பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறார்.  (ஏரே 33:6)

6.  இயேசுவே என் ஆண்டவர்.  ஆகையால் வியாதியும், பெலவீனங்களும் என்னைத் தொட அதிகார மில்லை.  என் பாவத்திலிருந்தும், குற்ற மனச்சாட்சியிலிருந்தும் தேவன் என்னை பரிபூரணமாய் விடுதலையாக்கி விட்டார்.  (பிலி 2:11; கொலோ 1:19-21; எபி 9:13)

7.  நான் இருளின் அதிகாரத்தினின்று அன்பின் குமாரனாகிய இயேசுவின் ராஜ்யத்திற்கு மாற்றப்பட்டு விட்டேன்.  ஆகையால் வியாதி என்னைத் தொடுவதில்லை.  (கொலோ 1:13)

8.  நான் கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகுகிறேன்.  என் உடல் நலம் பெறும்.  என் எலும்புகள் உரம் பெறும்.

9.  நான் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்து, அந்த வார்த்தைகள் என் கண்ணை விட்டுப் பிரியாமல் காத்துக் கொள்கிறேன்.  அவைகளை என் இருதயத்தின் மத்தியில் வைத்திருக்கிறேன்.  ஏனெனில் இதுவே என் சரீரம் முழுவதற்கும் சுகமும் ஆரோக்கியமுமாம்.  (நீதி 4:20-22)

10.  என் ஆத்துமா வாழ்கிறது போல நான் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கிறேன்.  (3யோவான் 2)

11.  கர்த்தர் சோர்ந்து போகிறவனுக்குப் பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணுகிறார்.  நான் கர்த்தருக்குக் காத்திருந்து புதுபெலன் அடைந்து கழுகுககளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவேன்.  நான் ஒடினாலும் இளைப்படையேன்.  நடந்தாலும் சோர்ந்து போகமாட்டேன்.  (ஏசா 40:29,31)

12.  இயேசுகிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர் எனக்குள்ளே வாசம்பண்ணும் தம்முடைய வல்லமையின் படியே, சாவுக்கேதுவான என் சரீரத்தை அனுதினமும் உயிர்பிக்கிறார்.  ஆகவே வியாதி, பலவீனங்கள், பேக்டீரியா, வைரஸ், என் சரீரத்தை தெடமுடியாது.  (ரோமர் 8:11)  என் சரீரம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறது. (1 கொரி 3:16-17)

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவருக்கே சொந்தம்.
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்.

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக் கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்.

அப்பா உம் திருச் சித்தம் - என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்.

கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்

என்னை எந்நாளும் நடத்திடும்.

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...