Sunday, April 23, 2017

பிள்ளைகளின் ஆசீர்வாதம்....பெற்றோரின் அறிக்கை.

1.  நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்.  (ஏசா 8:18)

2.  என் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்.  என் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.   (ஏசா 54:13)

3.  இதோ என் பிள்ளைகள் கர்த்தராரல் வந்த சுதந்திரம்; என் கர்ப்பத்தின் கனி அவரால் எனக்குக் கிடைத்த பலன்.  (சங் 127:4)

4.  என் பிள்ளைகள் என் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக்கன்றுகளைப் போல இருக்கிறார்கள்.  (சங் 128:3)

5.  என் சந்ததியின் மேல் கர்த்தருடைய ஆவியும், என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதங்களும் ஊற்றப்படும்.  அதனால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஒரத்தில் உள்ள அலரிச் செடிகளைப் போல் வளருவார்கள்.  (ஏசா 44:3,4)

6.  என் மேல் இருக்கும் தேவ ஆவியும், என் வாயில் அவர் வைத்துள்ள அவர் வார்த்தைகளும் என் வாயினின்றும் என் சந்ததியின் வாயினின்றும் வழி வழி வரும் என் தலைமுறையினர் வாயினின்றும் நீங்குவதில்லை.  (ஏசா 59:21)

7.  என் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வார்கள்.  அவர்கள் சந்ததி கர்த்தருக்கு முன்பாக நிலைத்திருக்கும்.  (சங் 102:28)

8.  கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்து வாழும் என் மேலும் அவருடைய நீதி என் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் என்றென்றும் இருக்கும்.  (சங் 103:17)

9.  கர்த்தர் என் வாசல்களின் தாழ்பாள்களைப் பெலப்படுத்தி என்னிடத்திலுள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.  (சங் 147:13)

10.  கர்த்தருக்கு பயந்து வாழும் எனக்கு திடநம்பிக்கை உண்டு.  என் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.  (நீதி 14:26)

11.  என் பிள்ளைகளின் பிள்ளைகள் எனக்கு கிரீடமாய் விளங்குவார்கள்.  (நீதி 17:6)

12.  நான் உத்தமத்திலே நடப்பேன்.  எனக்குப் பிறகு என் பிள்ளைகளும் பாக்கியவான்களாய் இருப்பார்கள்.  (நீதி 20:6)

13.  என் சந்ததியானது பிற இனத்தாரிடையேயும், அவர்களது வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்.  அவர்களைக் காண்பவர் யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததி என ஏற்றுக் கொள்வார்கள்.  (ஏசா 61:9)

14.  இயேசுவைப் போல என் பிள்ளைகள் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைவார்கள்.  (லூக்கா 2:52)

15.  சாமுவேலைப் போல என் பிள்ளைகள் கர்த்தருக்கும், மனிதருக்கும் பிரியமாய் நடந்து கொள்வார்கள்.  (1 சாமு 2:26)

16.  யோவான் ஸ்நானகனைப் போல் என் பிள்ளைகள் ஆவியில் பெலன் கொண்டு வளருவார்கள்.  இயேசுவின் இரத்தத்தினால் உண்டாகும் பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பை தெரியப் படுத்துவார்கள்.  (லூக்கா 1:80)

17.  என் பிள்ளைகள் தானியேலைப் போல உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.  இடைவிடாமல் தேவனை ஆராதிப்பார்கள்.  தேவன் பேரில் விசுவாசம் வைப்பார்கள்.  அவர்கள் காரியம் ஜெயமாயிருக்கும்.  (தானி 6:4,16,23,28)

18.  என் குமாரரும், என் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.  தரிசனங்களைக் காண்பார்கள்.

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...