Saturday, April 22, 2017

கடந்த கால பாவம், பாரம்பரியமாய் வந்த சாபங்கள், உறவுகள் கட்டுகள் முறிக்கும் ஜெபம்:

கடந்த கால பாவம், பாரம்பரியமாய் வந்த சாபங்கள், உறவுகள் கட்டுகள் முறிக்கும் ஜெபம்:

1.  மரண பள்ளத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கர்த்தரின் கரம் என்னை மீட்டெடுக்கிறது.
2.  எனது வாழ்க்கையை கவனிக்கிறதும், என்னிடமிருந்து திருடுகிறதுமான வல்லமையே, நீ திருடினதை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.  இயேசுவின் நாமத்தில் நீ மரிப்பாயாக.

4.  எனது ஆசனத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் சாத்தானே, உன்னை இயேசுவின் நாமத்தில் சுட்டெரிக்கிறேன்.

5.  பலவான்களிடமிருந்து என் பொருட்களை இயேசு கிறிஸ்துவின் பெயரால் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.

6.  கர்த்தாவே, என் வாழ்வைக் குறித்தான மறை பொருளை எனக்கு இயேசுவின் நாமத்தில் வெளிப்படுத்திக் காட்டும்.
7.  பரிசுத்த ஆவியே, எனது ஆவி, ஆத்துமா, சரீரத்தை இயேசுவின் நாமத்தில் புதுப்பியும்.

8.  எனக்கு கொடுக்கப்பட்ட தெய்வீக பணியை வேறு நபரிடம் கொடாதிரும் இயேசுவின் நாமத்தில்.

9.  அப்படி எனக்கு கொடுக்கப்பட்ட தெய்வீக பணி திரும்ப பெற்றிருக்கப்பட்டுமானால் என் மேல் இரக்கம் காட்டும்.  மேலும் ஒரு வருடத்தைக் இயேசுவின் நாமத்தில் கூட்டிக் கொடும்.

10.  எனது ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இன்று திறந்து தாரும்.  

11.  கர்தருக்கு ஸ்தோத்திரம்.  நான் ஆசீவதிக்கப்பட்டவன்.  என் வாழ்க்கை முழுவதற்கும் நீர் எனக்குக் கொடுத்த ஞானம், அடைக்கலத்திற்காக நன்றி கர்த்தாவே.

12.  கர்த்தாவே, நீர் என் மகள், மருமகன், பேரன் - இவர்களை ஆசீர்வதித்திருக்கிறீர்.  பிள்ளைகளுக்கு ஞானம், உமது கரிசனம் இவற்றைக் கொடுத்து பெரியவர்களாகத் திடப்படுத்தும்.  உமது வழிநடத்துதலைக் கொடுத்தருளும்.

13.  அல்லேலூயா! உமது மிகப் பெரிய ஆசீர்வாதம் என் குடும்ப உறுப்பினர்கள் மேல் வரட்டும்.  அவர்கள் வேலை செய்கிற இடங்களில் வரட்டும்.  ஆமென்.  
14.  எல்லாம் வல்ல கடவுள் என் குடும்ப ஆசீர்வாதமாக மாறட்டும்.  எங்கள் நண்பர்களை ஆசீர்வதியும்.  எல்லாரும் சிறப்பாய் இருப்பதற்காய் நன்றி ஆண்டவரே.  

15.  பிள்ளைகள் வேலை செய்கிற இடங்களில் மகிமைப்படுத்துகிறீர்.  சிறப்பாக வேலை செய்ய உதவுகிறீர்.    சிறப்பாக வேலை செய்ய உதவுகிறீர்.    சிறப்பான உடல் நிலை. ஆரோக்கியம் பெற்றிருப்பதற்காய் நன்றி ஆண்டவரே.  

16.  எனது பேரனுக்காய்/பேத்திக்காய் ஜெபிக்கிறேன்.  அவனுக்கு ஞானம், சாதகமான சூழ்நிலை, நல்ல ஆசிரியர்களின் வழிநடத்துதல், கர்த்தரின் நடத்துதல் கிடைக்கச் செய்யும்.  

17.  கர்த்தருக்குப் பயப்படும் நல்ல நண்பர்களைத் தந்து ஆசீர்வதியும்.  அவனுடைய நண்பர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக.  அவனுடைய வளர்ச்சியை ஆசீர்வதியும்.  படிப்பிலும், விளையாட்டிலும்,  மற்ற செயல்பாடுகளிலும் உயர்நிலையை அடையச் செய்யும். அதனால் சாத்தான் வெட்க்கப்பட்டுப் போவானாக.  நன்றி கர்த்தாவே.
18.  கர்த்தர் நல்லவர் எல்லா நேரங்களிலும். எல்லா நேரங்களிலும் கர்த்தர் நல்லவர்.  செய்ய முடியாத காரியங்களைச் செய்ய பெலன் கொடுக்கிறார்.

19.  எனது வாழ்க்கைக்காக நன்றி ஆண்டவரே.  தேவரீர் தந்த குடும்பத்துக்காக நன்றி ஆண்டவரே.  எங்கள் பிள்ளைகள் வாழ்க்கை ஒட்டத்தில் அன்பு, சமாதானம், நம்பிக்கை, பொறுமை, ஞானம், புரிந்து கொள்ளுதல், அறிவு, விவேகம், புத்தி, சம்பத்து, கனம் நிறைந்து வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு ஆதரவாக இருக்க கிருபை தாரும். ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும்.  

20.  நாங்கள் கர்த்தரையே சார்ந்து கொள்வோம்.  எல்லாம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் நன்மையாக, சுமுகமாக நடக்கும்.  ஆமென்.

21.  என் வயதைப் பொருட்படுத்தாமல் நன்மையானதே, சிறந்ததே என் வாழ்வில் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
22.  என் எதிரிகளை மேற் கொள்ளுவேன்.  அவர்கள் முற்றிலும் வெட்க்கப்பட்டுப் போவார்களாக.  கடவுளால் எல்லாம் கூடும்.  விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.  கர்த்தாவே பிள்ளைகளை, சந்ததியை ஆசீர்வதியும்.  
Philippians 4:4.  கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.


No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...