Saturday, April 22, 2017

ஆத்துமா / SOUL









மனம், நினைவு, அறிவு, சித்தம், சிந்தை, உணர்ச்சி, இருதயம்.

~~ ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்; தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்துக்குரியவர். ஸ்தோத்திரம்!

~~ அவரே ஞானத்தைப் படைத்தவர்; அதைக் கண்டு கணக்கிட்டவர்; தம் வேலைப்பாடுகளை யெல்லாம் அதனால் நிரப்பியவர்!

~~ தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்; தம்மீது அன்பு கூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்! ஸ்தோத்திரம்!

** உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று; என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள். ஸ்தோத்திரம்!

** ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம். அது இறைப்பற்று உள்ளோருக்கு தாய் வயிற்றில் இருக்கும் பொழுதே வழங்கப் பெறுகிறது. ஸ்தோத்திரம்!

** ஞானம் மனிதர் நடுவில் முடிவில்லாத அடித்தளத்தை அமைத்துள்ளது; அவர்களுடைய வழி மரபினரிடையே நீங்காது நிலைத்திருக்கும். ஸ்தோத்திரம்!

** ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் அணிவேர்; அதன் கிளைகள் நீடிய வாழ்நாட்கள். ஸ்தோத்திரம்!

** ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் பாவங்களை விரட்டி விடுகிறது. அது இருக்கும் போது சினத்தையெல்லாம் அகற்றி விடுகிறது. ஸ்தோத்திரம்!

[] என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவருக்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்...

[] இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன், ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்...

[] அப்பா உம் திருச்சித்தம் - என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம் தினம்
எப்போதும் அமர்ந்திருப்பேன்...

[] கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்...

** தகப்பனே! நாங்கள் ஒளியைச் சார்ந்தவர்கள். பகலில் நடப்பவர்கள். விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

** நம்பிக்கையையும், அன்பையையும் மார்புக் கவசமாகவும், மீட்பு பெறுவோம் என்னும் எதிர் நோக்கைத் தலைச் சீராகவும் அணிந்து கொள்வோம்.

** ஆண்டவர் எங்களை இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.

** நாம் இருந்தாலும் இறந்தாலும் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் எங்கள் பொருட்டு இறந்தார். ஆமென்! அல்லேலூயா!!

** எல்லாருக்கும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்! எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்! இடைவிடாமல் இறைவனிடம் வேண்டுங்கள்! எல்லா சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்! என வேதம் சொல்லுகிறதே - ஸ்தோத்திரம்.

√√ அமைதி அருளும் கடவுள் தாமே எங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக! அவரே எங்கள் ஆண்டவர் இயேசு வரும் போது எங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாக காப்பாராக!! எங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அல்லேலூயா! ஆமென்!!

√√ பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே! என் ஆத்துமாவை உம்முடைய கல்வாரி திருப் பாதத்தில் அர்ப்பணித்து ஜெபிக்கிறேன்.

√√ தேவனே! என் ஆத்துமாவிற் காக உமது சமூகத்தில் பாவ நிவிர்த்தி செய்ய இயேசுவின்' நாமத்தில் கிருபையருளும்.

√√ நேர்மையை கடைபிடித்த லையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுள் முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதை தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார் - என வேதம் சொல்கிறதே! ஸ்தோத்திரம். (மீகா 6:8)

√√ உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம் - ஸ்தோத்திரம்.

√√ தேவனே! என் ஆத்துமாவின் பாவங்களை இயேசுவின்' நாமத்தில் மன்னித்தருளும். (மீகா 6:7)

√√ தேவனே! என் ஆத்துமாவை பாவத்திற்கு விலக்கி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும். (எசே 18:4)

√√ தேவனே! என் ஆத்துமாவை பாவத்திலிருந்து விடுவித்து இயேசுவின்' நாமத்தில் குணமாக்கியருளும்.

** எளியோரின் நலனில் அக்கரை கொள்பவர் பேறுபெற்றவர். துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார் - என வேதம் சொல்லுகிறதே ஸ்தோத்திரம்.

√√ தேவனே! என் ஆத்துமா தீட்டுப்படாதபடி விலக்கி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும். (எசே 4:14)

√√ தேவனே! என் ஆத்துமாவைப் பொய் உதடுகளுக்கும், கபட நாவுகும் இயேசுவின்' நாமத்தில் தப்புவித்தருளும். (சங் 120:2)

** நான் சமாதானத்தை நாடுவேன்; அதைப் பற்றியே இயேசுவின்' நாமத்தில் பேசுவேன்

√√ தேவனே! என் ஆத்துமாவை கொடுமையினின்றும் வன்முறை யினின்றும் இயேசுவின்' நாமத்தில் விடுவியும்.

√√ தேவனே! என் ஆன்மாவை எதிர்த்துப் போர்புரியும் ஊனியல் பின் இச்சைகளை விட்டு விட இயேசுவின்' நாமத்தில் கிருபை செய்யும்.

√√ தேவனே! கறைபடாத கைகளும், மாசற்ற மனமும் உடையவனாக என் ஆத்துமாவை மாயைக்கு (பொய்யான தெய்வங்களுக்கு) ஒப்புகொடா திருக்க, கபடா ஆணையிடா திருக்க இயேசுவின்' நாமத்தின் நிமித்தம் காத்தருளும். (சங் 24:4)

√√ தேவனே! என் ஆத்துமாவை பொருளாசையில் சிக்கிக் கொள்ளாதபடி விலக்கி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும். (யோபு 27:8)

√√ என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது; உமது வசனத்தின் படி என்னை உயிர்ப்பியும். (சங் 119:25)

√√ சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின் படி என்னை எடுத்து நிறுத்தும். (சங் 119:28)

√√ என் ஆத்துமா உம் சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். (சங் 119:167)

√√ தேவனே! என் ஆத்துமா உலகத்திலுள்ளவைகளை இச்சியாதபடி விலக்கி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும்.

√√ தேவனே! என் ஆத்துமா உலகப் பொருட்களை நேசிக்காதபடி விலக்கி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும்.

√√ தேவனே! என் ஆத்துமாவைக் கெடுத்துப் போடாதபடி ஜாக்கிறதையாயிருக்க இயேசுவின்' நாமத்தில் உதவி யருளும்.

√√ தேவனே! என் ஆத்துமாவில் கேடுண்டாகாதபடி விலக்கி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும். (எண் 16:38)

√√ தேவனே! என் ஆத்துமாவைத் துன்மார்க்கத்திற்கு விலக்கி இயேசுவின்' நாமத்தினால் காத்தருளும்.

√√ தேவனே! என் ஆத்துமா வெறுமையடையாதபடி இயேசுவின் நாமத்தின் நிமித்தம் காத்தருளும்.

** கர்த்தாவே! உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். என் சத்தத்திற்குச் செவி கொடும். என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப் பலியாகவும் இருக்கக் கடவது.

** கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.

** என் இதயம் தீயது எதையும் நாட விடாதேயும்; தீச்செயல்களை நான் செய்ய விடாதேயும்.

√√ என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மையே நோக்கியே இருக்கின்றன; உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழிய விடாதேயும். (சங் 141:8; எசா 32:6)

√√ தேவனே! என் ஆத்துமாவி லிருந்து கசப்பை நீக்கியருளும் இயேசுவின்' நாமத்தில். (யோபு 27:4)

** என் உடலில் உயிர் இருக்கும் வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும் வரை, என் உதடுகள் வஞ்சகம் உரையா; என் நாவும் பொய்யைப் புகலாது.

√√ தேவனே! என் ஆத்துமா ஜீவனை அரோசியாதபடி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும். என் உள்ளம் என் வாழ்வை அருவருக்காது காத்தருளும். (யோபு 10:1)

√√ தேவனே! என் ஆத்துமா விசனப்படாதபடி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும். என் உயிர் போகுமளவிற்கு வருத்தமுறாதபடி என்னைக் காத்தருளும். (நியா 16:16)

√√ தேவனே! என் ஆத்துமா நெருக்கமடையாதபடி, துயரத்தால் என் கண்ணும், என் உயிரும், என் உடலும் தளர்ந்து போகாதபடி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும்.

** ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒரு போதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும். ஸ்தோத்திரம்!

** உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும்; எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னை பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
ஸ்தோத்திரம்!

** ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நீரே என் கடவுள்' என்று சொன்னேன்.

** என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உம் கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும், என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.

** உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். ஸ்தோத்திரம்!

** உமக்கு அஞ்சி நடப்போருக்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மீகுதி! ஸ்தோத்திரம்!

** மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக்காப்பாறி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்து காக்கின்றீர்! ஸ்தோத்திரம்!

** ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள். ஆமென்! அல்லேலூயா!! (சங் 31)

√√ தேவனே! என் ஆத்துமா வேதனைப்படாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (1 சாமு2:33)

√√ என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களாய் இல்லாதபடி காத்தருளும். எள்ளி நகைப்போர் என்னை சூழ்ந்துகொள்ளாதபடி காத்தருளும். (யோபு 16:20, 17:2)

என் உள்ளத்தை அவர்கள் புண் படுத்தாதபடி, என்னை வார்த்தைகளால் நொறுக்காத படி, பழித்துரைக்காத படி, வெட்கமின்றி என்னைத் தாக்கிப்பேசாதபடி தேவனே! என்னை காத்தருளும். (யோபு 19:2) தேவனே! என் ஆத்துமா வருத்தமடையாத படி இயேசுவின் நாமத்தில் காத்தருளும்.

நீரே எனக்கு பணையமாய் இருப்பீராக! வேறுயார் எனக்கு கையடித்து உறுதியளிப்பார். (யோபு 17:3) ஸ்தோத்திரம்!

இப்போதும் என் சான்று விண்ணில் உள்ளது; எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார். அல்லேலூயா! (யோபு 16:19)

என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். நான் சதையோடு இருக்கும் போதே கடவுளைக் காண்பேன். நானே அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகிறது. (யோபு 19:25-27) அல்லேலூயா!

√√. தேவனே! என் ஆத்துமா கலங்கிப்போகாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும்.

** என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு நான் அவருக்கு நன்றி செலுத்துவேன். (சங் 42:5)

** நாள் தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன். எனக்கு வாழ்வழிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன். ஸ்தோத்திரம்!

** என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன். (சங் 42:8,11)

** கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் நெஞ்சம் கடவுள் மீது, உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன். (சங் 42:1-2) ஸ்தோத்திரம்!

√√ "அவன் உணர்வது தன் ஊனின் வலியையே; அவன் புலம்புவது தன் பொருட்டே என யோபு 14:22 ல் வாசிக்கிறேனே!
தேவனே! என் ஆத்துமா துக்கமடையாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும்.

√√ கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும் வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்கு புகலிடமாகக் கொண்டுள்ளேன். ஸ்தோத்திரம்!

** உன்னதரான கடவுளை நோக்கி எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன்.

** வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருளுவார்; என்னை நசுக்குவோரை இழிவுபடுத்துவார். ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா தொய்ந்து போகாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (சங் 57:6)

** நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; நான் மனம் ஒடிந்து போனேன்; என் பாதையில் குழி வெட்டினர்; அவர்களே அதில் விழுந்தனர். ஸ்தோத்திரம்!

** என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்.

** ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! ஸ்தோத்திரம்!

** கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக. ஸ்தோத்திரம் (சங் 57)

√√ தேவனே! என் ஆத்தும வியாகுலங்களை இயேசுவின் நாமத்தினால் நீக்கியருளும். (சங் 31:7)

** உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்; என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர். ஸ்தோத்திரம்!

** என் எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை; அகன்ற இடத்தில் என்னைக் காலூன்றி நிற்க வைத்தீர். உமக்கு ஸ்தோத்திரம்!

** அண்டவரே! நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நீரே என் கடவுள் என்று சொன்னேன். உமக்கு ஸ்தோத்திரம்!

** என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். ஸ்தோத்திரம்!

** உமது முகத்தின் ஒளி அடியேன் மேல் வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். ஸ்தோத்திரம்!

** அண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்; என்னை வெட்கமுற விடாதேயும்; பொல்லார் வெட்கிப் போவார்களாக! ஸ்தோத்திரம்!

** பொய் சொல்லும் வாய் அடைபட்டுப் போவதாக! செருக்கும் பழிப்புரையும் கொண்டு, நேர்மையாளருக்கு எதிராக இறுமாப்புடன் பேசும் நா கட்டுண்டு கிடப்பதாக! ஸ்தோத்திரம்!

** உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி. ஸ்தோத்திரம்!

** மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! ஸ்தோத்திரம்!

** ஆண்டவர் போற்றி! போற்றி! உமது பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம்!

** ஆண்டவரே! உமக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் எங்கள் உள்ளத்தில் வலிமையையும் உறுதியையும் கொண்டிருக்க அருள்செய்கிறீர். உமக்கு நன்றி! கோடாகோடி நன்றி! (சங் 31)

√√ தேவனே! என் ஆத்துமாவில் சஞ்சலத்தை நீக்க உதவியருளும். (சங் 13:2)

** எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்? நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது ; எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?

** என் கடவுளாகிய ஆண்டவரே! என்னைக் கண்ணோக்கி எனக்கு பதில் அளித்தருளும்; என் விழிகளுக்கு ஒளியூட்டும்.

** நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூறும். நான் ஆண்டவரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்! அல்லேலூயா! ஆமென்! (சங் 13)

√√ தேவனே! என் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்து போகாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (சங் 107:26)

** நேரிய பாதையில் எங்களை வழி நடதுபவரே! உமக்கு ஸ்தோத்திரம்!

** நீர் உம்முடைய வார்த்தையை அனுப்பி எங்களைக் குணப்படுத்தினீர்! உமக்கு ஸ்தோத்திரம்!

** அழிவினின்று எங்களை விடுவித்தீர்! உமக்கு ஸ்தோத்திரம்!

** பாலை நிலத்தை நீர்த் தடாகமாக மாற்றினீர்; வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகச் செய்தீர்! உமக்கு ஸ்தோத்திரம்!

** நான் உமது பேரன்பை உணர்ந்து மக்கள் பேரவையில் உம்மைப் புகழ்வேன்; பெறியோர் மன்றத்தில் உம்மைப் போற்றுகிறேன்! நீர் நல்லவர்! என்றென்றும் உள்ளது உமது பேரன்பு. ஸ்தோத்திரம்! (சங் 107)

√√ தேவனே! என் ஆத்துமா என்னில் முறிந்துபோகாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (யோபு 30:16)

** எவரது குற்றம் மன்னிக்கப் பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர்.

** ஆண்டவர் எந்த மனிதரின் தீச் செயலை எண்ணவில்லையோ, எவரது மனதில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறு பெற்றவர். ஸ்தோத்திரம்!

** என் பாவத்தை உம்மிடம் அறிக்கை யிட்டேன்; என் தீச் செயலை நான் மறைத்ததில்லை; உம்மிடம் என் குற்றங்களை ஒப்புக்கொண்டேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். உமக்கு ஸ்தோத்திரம்! உமது பேரன்பு என்னை சூழ்ந்து நிற்க்கிறது. உமக்கு ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா சோர்ந்துபோகாதபடி இயேசுவின் நாமத்தினால் திடப்படுத்தி யருளும். (உன் 5:6) ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா மற்றவர்களுக்கு பொல்லாங்கு செய்யாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (ரோமர் 2:9)

√√ தேவனே! என் ஆத்துமா மற்றவர்களின் இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (ஆதி 49:6)

√√ தேவனே! என் ஆத்துமா அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (லேவி 20:6)

√√ தேவனே! என் ஆத்துமா குறிச் சொல்லுகிறவர்களை நாடாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (லேவி20:6)

√√ தேவனே! என் ஆத்துமாவைப் பகைக்கிறவர்களுக்கு விலக்கிக் இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (2 சாமு 5:8)

√√ தேவனே! என் ஆத்துமாவை முகாந்திரமில்லாமல் பகைக்கிறவர்களுக்கு விலக்கிக் இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (சங் 35:17)

** ஆண்டவரே, எனக்கெதிராய் வழக்காடுவோருடன் வழக்காடும்; என் மீது போர் தொடுப்போரோடு போர் புரியும். ஸ்தோத்திரம்!

** கேடகமும் படைக்கலமும் எடுத்துவாரும்; எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்.

** என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்; ஈட்டியையும் வேலையும் கையிலெடும்; நானே உன் மீட்பர் என்று என் உள்ளத்திற்குச் சொல்லும்.

** என் உயிரைக் குடிக்கத் தேடுவோர் மானக்கேடுற்று இழிவடையட்டும்; எனக்கு தீங்கிழைக்க நினைப்போர் புறமுதுகிட்டு ஒடட்டும்.

** ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டியடிக்க, காற்றில் பறக்கும் பதர் போல அவர்கள் சிதறட்டும்.

** ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட, அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும். ஸ்தோத்திரம்!

** ஏனெனில் காரணமின்றி எனக்குக் கண்ணி வைத்தனர்; காரணமின்றி எனக்குக் குழி தோண்டினர்.

** அவர்களுக்கு அழிவு எதிர் பாராமல் வரட்டும். அவர்கள் வைத்த கண்ணியில் அவர்களே சிக்கிக் கொள்ளட்டும்; அவர்கள் தோண்டிய குழியில் அவர்களே விழட்டும்.

** என் உள்ளம் ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்; அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.

** "ஆண்டவரே! உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளை யடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே " என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.

** மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்; திரளான மக்களிடையே உம்மைப் புகழுவேன். என் நா உம் நீதியை எடுத்துரைத்து, நாள் முழுதும் உம் புகழ் பாடும்.

√√ தேவனே! என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்களிடமிருந்து இயேசுவின் நாமத்தில் இரட்சித்தருளும். (சங் 74:19)

√√ தேவனே! என் ஆத்துமாவை துன்மார்க்கரின் கைகளுக்கு உம்முடைய பட்டயத்தினால் இயேசுவின் நாமத்தில் தப்புவித்தருளும். (சங் 17:13)

√√ தேவனே! என் ஆத்துமாவை சத்துருக்களின் கைகளுக்கு விலக்கிக் இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (சங் 25:20)

√√ தேவனே! என் ஆத்துமாவை சத்துருக்களின் நடுவிலிருந்து இயேசுவின் நாமத்தில் விடுவித்தருளும். (சங் 57:4)

√√ தேவனே! என் ஆத்துமாவை சத்துருக்கள் பின்தொடராதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (சங் 143:3)

√√ தேவனே! என் ஆத்துமாவை பட்டயத்திற்கு இயேசுவின் நாமத்தில் தப்புவித்தருளும். (சங்22:20)

√√ தேவனே! என் ஆத்துமாவைப் பயங்கரங்கள் பின் தொடராதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (யோபு 30:15)

√√ தேவனே! என் ஆத்துமா அறுப்புண்டு போகாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (லேவி20:6)

√√ தேவனே! என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி இயேசுவின் நாமத்தினால் இரட்சித்தருளும்.(யோபு 33:28)

√√ தேவனே! என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்கு மீட்டுத் இயேசுவின் நாமத்தில் தப்புவித்தருளும். (சங்49:15)

√√ தேவனே! என் ஆத்துமா பாதாளத்திற்குச் செல்லாதபடி இயேசுவின் நாமத்தில் இரட்சித்தருளும். (யோபு 33:22)

√√ தேவனே! என் ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கி இயேசுவின்' நாமத்தில் காத்தருளும். (சங் 33:18)

** ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறு பெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். ஸ்தோத்திரம்!

உமக்கு அஞ்சி நடப்போரையும் உமது பேரன்புக்காக காத்திருப் போரையும் நீர் கண்ணோக்குகின்றீர். ஸ்தோத்திரம்!

நாங்கள் உம்மையே நம்பியிருக்கிறோம். நீரே எங்கள் துணை; நீரே எங்கள் கேடயம்.

உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால் உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக!

√√ தேவனே! என் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளும்படி இயேசுவின் நாமத்தில் இரங்கியருளும். (சங் 49:9, 34:22)

** கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து தூக்கி நிறுத்துவார் - அல்லேலூயா! ஆமென்!!

** என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்; என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும். நீதிமொழிக்குச் செவி சாய்ப்பதில் நான் கருத்தாய் உள்ளேன்; யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன். ஸ்தோத்திரம்!

** ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர் தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர் - ஸ்தோத்திரம்!

** ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன - ஸ்தோத்திரம்!

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் அண்டவர் அவர்களை விடுவிக்கின்றார் - ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா விற்குத் துணை செய்து இயேசுவின்' நாமத்தில் விடுவித்தருளும். (சங் 94:17)

** ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தை பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர் - அல்லேலூயா!

** என் அடி சறுக்குகின்றது என்று நான் சொன்னபோது ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று - உமக்கு ஸ்தோத்திரம்!

** என் மனதில் கவலைகள் பெருகும் போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது - உமக்கு ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமாவிற்குத் உம்முடைய நீதியைச் சரிகட்டாதபடி இயேசுவின் நாமத்தின் நிமித்தம் காத்தருளும். (ஏரே 4:31)

√√ தேவனே! என் ஆத்துமா பிழைக்கும்படி உமக்கு செவிகொடுக்க இயேசுவின் நாமத்தின் நிமித்தம் உதவியருளும். (ஏசா55:3)

** தாவீதுக்கு நீர் காட்டிய மாறாத பேரன்பை எங்களுக்கும் காட்டுகிறீர் - உமக்கு நன்றி!

** ஆண்டவரை காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள் என ஏசாயா 55:6ல் படிக்கிறேனே ஸ்தோத்திரம்!

மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து யிருப்பது போல உங்களுடைய வழி முறைகளைவிட என் வழி முறைகளும், உங்கள் எண்ணங்களை விட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன என வேதத்தில் (ஏசா 55:9) சொல்லியிருக்கிறீர் - ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா உம்மைவிட்டு பின்வாங்கிப் போகாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (எபி 10:38)

** என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன் என்ற உம் உடன்படிக்கையின் வார்த்தைக்காக (எபி 10:16) ஸ்தோத்திரம்!

** நேர்மையுடன் நடக்கும் என் அடியார் நம்பிக்கையினால் வாழ்வு அடைவார் என்ற வேத வசனத்துக்காக நன்றி ஆண்டவரே!

√√ தேவனே! என் ஆத்துமா உமக்கு முன்பாக சோர்ந்து போகாதபடி இயேசுவின் நாமத்தில் இரங்கியருளும். [ஏசா 57:16]

** என்றென்றும் நான் குற்றஞ்சாட்ட மாட்டேன்; எப்பொழுதும் சினம் கொண்டிருக்க மாட்டேன் என வேதத்தில் வாக்குபண்ணி யிருக்கிறீர் - உமக்கு நன்றி ஆண்டவரே!

√√ தேவனே! என் ஆத்துமாவை இயேசுவின் நாமத்தில் இளைப்பாறப்பண்ணியருளும். (சங் 106:5)

** நான் உம்முடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கிறேன். முறுமுறுக்க மாட்டேன். உமது குரலுக்குச் செவி கொடுப்பேன். என் செயல்களால் என்னை கறைப்படுத்த மாட்டேன். நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றி சிந்திப்பேன். உம் மாபெரும் பேரன்பை நினைவில் கொள்வேன். உம்மை புகழ்ந்து பாடுவேன். நான் உம் திருப்பெயருக்கு நன்றி செலுத்துவேன். என்றென்று உள்ளது உமது பேரன்பு - ஸ்தோத்திரம்!

** நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறு பெற்றோர். ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமாவை ஜாக்கிரதையோடு காத்துக் கொள்ள இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (நீதி 13:4, 16:17)

** ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதல் ஞானத்தை தரும் பயிர்ச்சி; மேன்மையை அடைய தாழ்மையே வழி என்ற உம் வசனத்தை நான் நம்பி கைக் கொள்ளுகிறேன்.

** நல்லோர் தம் சொற்க்களின் பலனான நல்லுணவை உண்கிறார்; நாவைக்காப்போர் தன் உயிரையே காத்துக் கொள்கிறார். ஸ்தோத்திரம்!

** நேர்மையாய் நடப்போரை நீதி பாதுகாக்கும். கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.

** கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும். நல்லவரது சொத்து அவருடைய வழி மரபினரைச் சேரும். பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும் என வேதத்தில் படிக்கிறேனே! ஸ்தோத்திரம்!

** உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடல் சிலிர்க்கின்றது; உம் நீதித் தீர்ப்புகளை முன்னிட்டு நான் அஞ்சி நடுங்குகின்றேன். ஸ்தோத்திரம்!

உமக்கு அஞ்சி நடப்போர்க்கு அளித்த வாக்குறுதியை உம் ஊழியனுக்கும் நிறைவேற்றி யருளும்! ஸ்தோத்திரம்!

உமக்கு அஞ்சி நடப்போர் யாவருக்கும் உம் நியமங்களைக் கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன். ஸ்தோத்திரம்!

உமக்கு அஞ்சிநடப்போர், உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய அறிவுடையோர் என் பக்கம் திரும்புவார்களாக! ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா உம்மை நம்பியிருக்க இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (சங் 11:1)

** ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார். அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரை சோதித்தறிகின்றன. அவர் நேர்மையாளரை சோதித்தறிகின்றார். ஸ்தோத்திரம்!

** நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர் தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர் என வேதத்தில் நான் படிக்கிறேனே! ஸ்தோத்திரம்!

** ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். ஸ்தோத்திரம்!
** என் உள்ளம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஸ்தோத்திரம்!

** உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு - ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (சங் 3:2)

√√ தேவனே! என் ஆத்துமா உம்மை சிநேகிக்கும் கிருபையை இயேசுவின் நாமத்தில் தந்தருளும். (நீதி 19:8)

√√ தேவனே! என் ஆத்துமா உம்மையே நோக்கிப்பார்க்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (1 பேதுரு 4:19)

√√ தேவனே! என் ஆத்துமா உம்மையே நோக்கி அமர்ந்திருக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (சங் 62:1)

√√ தேவனே! என் ஆத்துமாவை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்க இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (1 பேதுரு 4:19)

√√ தேவனே! என் ஆத்துமாவை உமக்கு முன்பாக தாழ்மைப்படுத்த இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (லேவி 16:29)

√√ தேவனே! என் ஆத்துமா எப்பொழுதும் உம்மையே வாஞ்சித்துக் கதர இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (சங் 42:1; ஏசா 26:9)

√√ தேவனே! என் ஆத்துமா எப்பொழுதும் உம்மையே அண்டிக் கொள்ள இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (சங் 57:1)

** இடர் நீங்கும் வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.

** உன்னதராகிய கடவுளே! எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனே! உம்மை நோக்கியே நான் மன்றாடுகின்றேன்.

** வானகத்தினின்று நீர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருளும். உமது பேரன்பையும் வாக்கு பிறழாமையையும் வெளிப்படுத்தும். என் பாதையில் குழி வெட்டினர்; அவர்களே அதில் விழுந்தனர்.

** என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய அறிவை ஏற்றுக் கொள்ள இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (நீதி 19:2)

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய புத்திமதியை ஏற்றுக்கொள்ள உதவியருளும். (நீதி 15:32)

** ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதல் ஞானத்தை தரும் பயிற்சி; மேன்மை அடையத் தாழ்மையே வழி. ஸ்தோத்திரம்!

** "எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையில் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்." என்ற உம் வார்த்தைக்காக ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய ஞானத்தை அறிந்து கொள்ள இயேசுவின் நாமத்தில் கிருபையருளும்.

தேவனே! என் ஆத்துமா ஞானமுள்ளதாயிருக்க இயேசுவின் நாமத்தில் கிருபை யருளும்.

**ஞானத்தை தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்; மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்; வெள்ளியை விட ஞானமே மிகுநலம் தருவது; பொன்னை விட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது. ஸ்தோத்திரம்!

** ஞானம் பவளத்தைவிட விலை மதிப்புள்ளது; உன் அரும் பொருள் எதுவும் அதற்கு நிகராகாது.

** அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது; அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது.

** அதன் வழிகள் இன்பம் தரும் வழிகள்; அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை.

** தன்னை அடைந்தோருக்கு அது வாழ்வென்னும் கனி தரும் மரமாகும்; அதனைப் பற்றிக் கொள்வோர் நற்பேறு பெற்றோர். (நீதி 3:13-18) என உம் வார்த்தையில் நீர் சொல்லியுள்ளீர். ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமாவை உம்முடைய வசத்திற்கு அர்ப்பணிக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும்.

√√ தேவனே! என் ஆத்துமாவை உம்முடைய வேதவசனத்தால் இயேசுவின் நாமத்தில் உயிர்பித்தருளும்.

** ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கிறது.

** ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.

** ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.

** அவை பொன்னிலும், பசும் பொன்னிலும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை.

** அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவற்றை கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு (சங் 19:7-11) என வேதம் போதிக்கின்றதே! ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா உம் வார்த்தைகளை சாந்தமாய் ஏற்றுக்கொள்ள இயேசுவின் நாமத்தில் கிருபையருளும்.

** நிறைவான விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தை கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்து விடுவதில்லை; அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறு பெறுவார்கள். (யாக்கோபு 1:21,25) ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ள இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (நீதி 19:16)

** ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது. (நீதி 19:23) ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய கட்டளைகளை பின்பற்ற இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (லேவி 26:43)

** நானே உன் கடவுளாகிய ஆண்டவர்! என் ஒய்வுநாள்களைக் கடைபிடித்து, என் தூயகத்திற்கு அஞ்சி வாழ்வீர்களாக! நானே ஆண்டவர்!

** நீங்கள் என் நியமங்களைக் கவனமாய்க் கைக்கொண்டு, கட்டளைகளை நிறைவேற்றி அவற்றிற்கேற்ப நடந்தால், ஏற்ற காலத்தில் மழையை நான் பெய்யச் செய்வேன். வயல் தன் பலனைத் தரும்; நிலத்தின் மரங்கள் தங்கள் கனியைத்தரும். கதிர் அறுப்பு திராட்சைப்பழ அறுவடைவரை இருக்கும். பழ அறுவடை பயிர் விதைப்புவரை வரும்; நீங்கள் விரும்புவனவற்றை உண்டு நாட்டில் நலமாய் வாழ்வீர்கள்.

* நாட்டிற்கு அமைதியை அருளுவேன். அச்சுறுத்துவாரின்றிப் படுத்துக் கொள்வீர்கள். நாட்டில் இராதபடி கொடிய விலங்குகளை ஒழிப்பேன். வாள் உங்கள் நாட்டில் உலாவுவதில்லை.

** உங்கள் எதிரிகளை துரத்தியடிப்பீர்கள்; அவர்கள் உங்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வர்.

** உங்களில் ஐந்து பேர் நூறு பேறையும், நூறு பேர் பதினாயிரம் பேரையும் துரத்துவீர்கள்; உங்கள் எதிரிகள் உங்கள் முன் வாளால் வெட்டுண்டு அழிவர்.

** நான் உங்களுக்குக் கருணைக்கண் காட்டி, உங்களை பலுகவும் பெருகவும் செய்து, உங்களிடமிருக்கும் என் உடன்படிக்கையை நிலைபடுத்துவேன்.

** என் உறைவிடத்தை உங்கள் நடுவில் நிறுவுவேன். நான் உங்களை வெறுப்பதில்லை. உங்கள் நடுவே நான் உலாவுவேன். நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள். (லேவி 26:1-11) என்ற உம்முடைய வாக்குறுதிக்காக நன்றி ஆண்டவரே! கோடாகோடி நன்றி!

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய சாட்சிகளைக் கைக் கொள்ள இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (சங் 119:129)

√√ தேவன் தந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனதோடு உம்மைத் தேடுவோர் பேறுபெற்றோர்; அநீதி செய்யாமல் உமது வழியில் நடப்போர் பேறுபெற்றோர். (சங் 119:2-3) ஸ்தோத்திரம்!

** உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; தன்னலத்தை நாட விடாதேயும். (119:36) ஸ்தோத்திரம்!

** பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்கு முறைகளின் படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். (சங்119:14) ஸ்தோத்திரம்!

** பழிச்சொல்லையும், இழிவையும் என்னிடமிருந்து அகற்றியருளும்; ஏனெனில், உம் ஒழுங்கு முறைகளை நான் கடைப் பிடித்துள்ளேன். (119:22) ஸ்தோத்திரம்!

** உம் ஒழுங்கு முறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். (119:24) ஸ்தோத்திரம்!

** உம் ஒழுங்கு முறைகளை நான் உறுதியாய்ப் பற்றிக் கொண்டுளேன; ஆண்டவரே! என்னை வெட்கமடைய விடாதேயும். (119:31) ஸ்தோத்திரம்!

** உம் ஒழுங்கு முறைகளைப் பற்றி நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்; வெடகமுறமாட்டேன். (119:46) ஸ்தோத்திரம்!

** உமக்கு அஞ்சி நடப்போர், ஒழுங்குமுறைகளைப்பற்றிய அறிவுடையோர் என் பக்கம் திரும்புவார்களாக! (119:79) ஸ்தோத்திரம்!

** உமது பேரன்புக்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும்; நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்கு முறைகளை நான் கடைபிடிப்பேன். ஸ்தோத்திரம்!

** உம் ஒழுங்கு முறைகளின் படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில் அவை உமக்கு ஊழியம் செய்கின்றன். (119:88,91) ஸ்தோத்திரம்!

** தீயோர் என்னை அழிக்க காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்கு முறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன். (119:95) ஸ்தோத்திரம்!

** உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என்னைக் காத்தருளும்; உம் ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன். (119:146) ஸ்தோத்திரம்!

** ஆண்டவரே நீர் என் அருகில் இருக்கின்றீர்; உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை. அவற்றை நீர் எக்காலத்திற்குமாக ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த ஒழுங்குமுறைகளினின்று முன்பே நான் அறிந்திருக்கின்றேன். (119:151,152) ஸ்தோத்திரம்!

** உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்து வருகின்றேன்; நான் அவற்றின் மீது பற்றுக் கொண்டுள்ளேன். (119:167) ஸ்தோத்திரம்!

** எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளவனாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன். (119:99) ஸ்தோத்திரம்!

** உம் ஒழுங்கு முறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன. (119:111) ஸ்தோத்திரம்!

** பூவுலகின் பொல்லார் அனைவரையும் நீர் களிம்பெனக் கருதுகின்றீர்; ஆகவே நான் உம் ஒழுங்கு முறைகள்மீது பற்றுக் கொண்டுள்ளேன். (119:119) ஸ்தோத்திரம்!

** உம் ஒழுங்குமுறைகள் எக்காலமும் நீதியுள்ளவை; நான் வாழுமாறு எனக்கு நுண்ணறிவு புகட்டும். (119:144) ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமாவைத் தேற்றி நீதியின் பாதைகளில் இயேசுவின் நாமத்தில் நடத்தியருளும். ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா உமது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக் கொள்ள இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் முழு ஆத்துமாவோடு உம்மைத் தேட இயேசுவின் நாமத்தின் நிமித்தம் கிருபை செய்யும். (2 நாளா 15:12)

√√ தேவனே! என் ஆத்துமா எப்பொழுதும் உம்மை மகிமைப்படுத்த இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (லூக்கா 1:44)

√√ தேவனே! என் ஆத்துமா உம்மைத் துதிக்கும் படி காவலுக்கு நீங்கலாக்கி இயேசுவின் நாமத்தில் விடுவித்தருளும். (சங் 142:7)

√√ தேவனே! என் ஆத்துமா எப்பொழுதும் உம்மைத் துதிக்க இயேசுவின் நாமத்தில் கிருபையருளும்.(சங்119:175)

√√ தேவனே! என் ஆத்துமா எப்பொழுதும் உம்மை ஸ்தோத்தரிக்க இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (சங்103:1)

√√ தேவனே! என் ஆத்துமா உம்மைத் தொழுதுகொள்ள இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (சங்116:4)

√√ தேவனே! என் முழு ஆத்துமாவோடு உம்மைச் சேவிக்க இயேசுவின் நாமத்தில் கிருபையருளும்.(யோசு22:5)

√√ தேவனே! என் ஆத்துமா உமக்குள் மேன்மைபாராட்ட இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (சங்34:2)

√√ தேவனே! என் ஆத்துமா உமக்குள் களிகூரும்படி இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (ஏசா 61:10)

√√ தேவனே! என் ஆத்துமா உம்மோடு இசைந்திருக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (1 சாமு 18:1)

√√ தேவனே! என் ஆத்துமாவை உற்சாக்த்தினால் இயேசுவின் நாமத்தில் நிரப்பியருளும். [நீதி 13:4]

√√ தேவனே! என் ஆத்துமாவை மகிழ்ச்சியால் இயேசுவின் நாமத்தில் நிரப்பியருளும். [சங்86:4]

√√ தேவனே! என் ஆத்துமாவை உமது சமாதானத்தினால் இயேசுவின் நாமத்தில் நிரப்பியருளும். [சங்55:18]

√√ தேவனே! என் ஆத்துமாவை இயேசுவின் நாமத்தில் ஆறுதலடையச் செய்தருளும் (சங்:77:2)

√√ தேவனே! என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை இயேசுவின் நாமத்தில் தைரியப்படுத்தியருளும். (சங் 138:3)

√√ தேவனே! பசியுள்ள என் ஆத்துமாவை நன்மைகளினால் இயேசுவின் நாமத்தில் நிரப்பியருளும். (சங் 25:13, 107:8)

√√ தேவனே! என் ஆத்துமா செம்மையானதாக யிருக்க இயேசுவின் நாமத்தில் கிருபை செய்யும். (அப 2:4)

√√ தேவனே! என் ஆத்துமா எளியவர்களுக்காக வியாகுலப்பட இயேசுவின் நாமத்தில் கிருபை யருளும். (யோபு 30:25)

√√ தேவனே! பரிசுத்தவான்களோடு இசைந்திருக்க இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (1 சாமு18:1)

√√ தேவனே! என் ஆத்துமா தேவ ஊழியர்களுக்கு கீழ்படிந்து நடக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (எபி13:17)

√√ தேவனே! என் முழு ஆத்துமாவோடு மற்றவர்களை ஆசீர்வதிக்க இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (ஆதி 27:19)

√√ தேவனே! என் ஆத்துமாவை நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போல நிரப்பி என்னை இயேசுவின் நாமத்தினால் ஆசீர்வதித்தருளும். (ஏரே 31:12)

√√ தேவனே! என் ஆத்துமாவை இயேசுவின் நாமத்தில் சம்பூரணமடையப்பண்ணி யருளும். (ஏரே 31:25)

√√ தேவனே! என் ஆத்துமா வாழ்திருக்கும்படி இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதியும். (3 யோவான் 1:2)

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய ஆலயப்பிரகாரங்களின் மேல் வாஞ்சையாயிருக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (சங் 84:2)

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய சமுகத்தில் எப்பொழுதும் காத்திருக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (சங் 130:6)

√√ தேவனே! என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல அடக்கி இயேசுவின் நாமத்தில் அமரப்பண்ணியருளும். (சங் 131:2)

** ஆண்டவரே என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவ தில்லை. ஸ்தோத்திரம்!

** மாறாக என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய் மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. நான் எப்பொழுதும் உம்மையே நம்பி இருக்கிறேன். ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா உம்முடைய சமுகத்தில் உபவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் காத்திருக்க உதவியருளும். (சங் 35:13; ஏசா 58:5)

** கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும் உமக்கு பிரியமான நோன்பு! ஸ்தோத்திரம்!

** பசித்தோர்க்கு எங்கள் உணவை பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை எங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக்கொடுப்பதும், எங்கள் இனத்தாருக்கு எங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் நீர் விரும்பும் நோன்பு! ஸ்தோத்திரம்!

** நான் மன்றாடும் போது எனக்கு பதில் அளிப்பவரே;
நான் கூக்குரல் இடும்போது "இதோ நான்" என மறு மொழி தருபவரே;
தொடர்ந்து என்னை வழி நடத்துபவரே;
வறண்ட சூழலில் எனக்கு நிறைவளிப்பவரே;
என் எலும்புகளை வலிமை யாக்குபவரே;
நீர் பாய்ந்த தோட்டத்தைப்போலும், ஒரு போதும் வற்றாத நீரூற்று போலும் எங்களை இருக்கச் செய்பவரே - உமக்கு ஸ்தோத்திரம்!

√√ தேவனே! என் ஆத்துமா பிறருக்காக உம்முடைய சமுகத்தில் உபவாசத்தோடு காத்திருக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (சங் 35:13)

** எங்கள் ஒளியை விடியல் போல எழச்செய்பவரே! எங்கள் வாழ்வை நலமான வாழ்வாக துளிர்க்கச் செய்பவரே! ஸ்தோத்திரம்!

** உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும்; மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச்செய்வேன் என்றவரே - உமக்கு நன்றி! கோடா கோடி நன்றி!!

√√ தேவனே! என் ஆத்துமாவில் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தை இயேசுவின் நாமத்தில் தந்தருளும்.

√√ தேவனே! என் ஆத்துமாவை மரணத்திலூற்றி அழிந்து போகும் ஜனங்களுக்காக ஜெபிக்க இயேசுவின் நாமத்தில் கிருபை யருளும். (நீதி 11:30)

√√ தேவனே! என் ஆத்துமா துன்மார்க்கனை இயேசுவின் நாமத்தில் எச்சரிக்க கிருபையருளும். (எசே 33:9)

√√ தேவனே! என் ஆத்துமாவில் உதாரகுணத்தை இயேசுவின் நாமத்தின் நிமித்தம் தந்தருளும். (நீதி 11:25)

√√ தேவனே! நீர் என் ஜெபத்தைக் கேட்பதற்காக ஸ்தோத்திரம்!

~~ என் ஆத்தும நேச மேய்ப்பரே!
என் உள்ளத்தின் ஆனந்தமே!
இன்னும் உம்மைக் கிட்டி சேர நான் வாஞ்சையோடு சமீபிக்கிறேன் ...

பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போது ஆண்டவா! பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்...

~~ ஆராய்ந்துமுடியாத பெரிய காரியங்களைச் செய்கிறவரே! ஸ்தோத்திரம்!

~~ அக்கிரமத்தை விட்டு திரும்பும்படி கடிந்து கொள்கிறவரே! ஸ்தோத்திரம்!

~~ மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடுகிறவரே! ஸ்தோத்திரம்!

~~ தமது சத்தத்தை ஆச்சரியமாய்க் குமுறப் பண்ணுகிறவரே! உம்மைத் துதிக்கிறேன்!

~~ தம்முடைய சுவாசத்தினால் குளிரை உண்டுபண்ணுகிறவரே! உம்மைத் துதிக்கிறேன்!

~~ அந்தகரணங்களில் ஞானத்தை தெரியப் பண்ணுகிறவரே! உம்மைத் துதிக்கிறேன்!

~~ உம்மைத் தொழுந்து கொள்ளும் போதெல்லாம் சமீபமாயிருக்கிறவரே! உம்மைத் துதிக்கிறேன்!

~~ வார்த்தைகளையும், பிரமானங்களையும் அனுப்புகிறவரே! உம்மைத் தொழுது கொள்ளுகிறேன்.

~~ முழங்கால்களை உமக்கு முன்பாக முடங்கச் செய்கிறவரே! உம்மைத் தொழுது கொள்ளுகிறேன்.

~~ எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியே! உம்மை ஆராதனை செய்கிறேன்!

~~ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியே! உம்மை ஆராதனை செய்கிறேன்!

~~ அதிகாலையில் தம் கிருபையை கேட்க்கப் பண்ணுகிறவரே! உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்!

~~ இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்குகிறவரே! உம்மையே நோக்கிப்பார்க்கிறேன்!

~~ எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றுகிறவரே! உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்!

~~ ஊழியர்களை அக்கினி ஜீவாலைகளாய் மாற்றுகிறவரே! உம்மைத் துதிக்கிறேன்!

~~ தம்மை நம்புகிறவர்கள் மேல் குற்றஞ்சுமராதபடி காக்கிறவரே! ஸ்தோத்திரம்!

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...