மனச்சாட்சி! ஐக்கியம்! ! உள்ளுணர்வு!!!
~~ “ஜெபித்து ஜெயம் பெற்ற ஆண்டவராகிய இயேசுவே! – ஸ்தோத்திரம். (மத் 26:36)
~~ “ஜெபிக்க கற்றுக் கொடுத்த ஆண்டவராகிய. இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். (மத் 6:9)
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே,பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா…
வரவேண்டும் வல்லவரே வரவேண்டும் நல்லவரே வரவேண்டும் வரவேண்டும் ..
தடைகள் நீக்கும் தயாபரரே உடையாய் வாருமையா ஒடுங்கிப்போன எங்கள் ஆவியை விரட்டி உற்சாகம் தாருமையா..
எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே நிரம்பி வழியணுமே மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும் பண்பாடி மகிழணுமே…
** “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக” (1 தெச 5:33)
** “கிறிஸ்துவின் வசனம் எனக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக.” (கொலோ 3:16)
** “தேவனே! என் ஆவியை உமது பரிசுத்த ஆவியினாலே, இயேசுவின்’ நாமத்தினால் பரிசுத்த மாக்கியருளும். (2 தெச 2:13)
** “தேவனே! என் ஆவி குற்ற மற்றதாயிருக்கும்படி இயேசுவின்’ நாமத்தினால் காத்தருளும்” (1தெச 5:23)
** “தேவனே! என் ஆவியை பொய்யின் ஆவிக்கு விலக்கிக் இயேசுவின்’ நாமத்தினால் காத்தருளும்” (1 Kings 22:22)
** “தேவனே! என் ஆவியை வேசித்தன ஆவி வழி தப்பி விடாதபடி விலக்கி இயேசுவின்’ நாமத்தின் நிமித்தம் காத்தருளும்.” (ஒசியா 4:12).
** “தேவனே! என் ஆவியை பொல்லாப்பு செய்யும் ஆவிக்கு விலக்கி இயேசுவின்’ நாமத்தின் நிமித்தம் காத்தருளும்.” (நியா 9:23)
** “தேவனே! என் ஆவியை பயமுள்ள ஆவிக்கு விலக்கி இயேசுவின்’ நாமத்தினாலே காத்தருளும்.” (2 தீமோ 1:7)
** “தேவனே! என் ஆவியில் சோர்ந்து போகாதபடி இயேசுவின்’ நாமத்தினால் பெலப்படுத்தியருளும்.” (ஏசா 19:3)
** “தேவனே! என் ஆவி மனோதுக்கத்தினாலே முறிந்து போகாத படி இயேசுவின்’ நாமத்தினால் காத்தருளும்.” (நீதி 15:13)
** “தேவனே என் ஆவியை கட்டுகளிலிருந்து இயேசுவின் நாமத்தினால் விடுவித்துக் காத்தருளும்.” (அப் 20:22)
** “தேவனே என் ஆவியை அடிமைத்தன ஆவிக்கு இயேசுவின்’ நாமத்தினால் விலக்கிக் காத்தருளும்.” (ரோமர் 8:15)
** “தேவனே என் ஆவியை பெலவீனப்படுத்தும் ஆவிக்கு விலக்கிக் காத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” “(லூக்கா 13: 11,16)
** “தேவனே என் ஆவியை கனநித்திரையின் ஆவிக்கு விலக்கிக் காத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” (ஏசா 29:10)
** “தேவனே என் ஆவியில் கலங்கிப் போகாதபடி காத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” (தானி 2:1)
** “தேவனே என் ஆவியில் கர்வத்தினாலே கடினமடையாதபடி பாதுகாத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” (தானி5:20)
** “தேவனே என் ஆவியில் சஞ்சலமடையாதபடி பாதுகாத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” (தானி 7:15)
** “தேவனே என் ஆவியில் வெறி கொண்டு உளராதபடி காத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” (ஒசியா 9:7)
** “தேவனே என் ஆவியில் தாறு மாறில்லாதபடி பாதுகாத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” (ஏசா 19:14)
** “தேவனே என் ஆவி முறிந்து விடாதபடி பாதுகாத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” (நீதி 17:22).
** “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப் பண்ணும்.” (நீதி 17:22)
** “தேவனே! என் ஆவி வஞ்சிக்கப் படாதபடி பாதுகாத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” (1 தீமோ4:1)
** “தேவனே என் ஆவி விசனப் படாதபடி பாதுகாத்தருளும் இயேசுவின்’ நாமத்தில்.” (சங் 106:33)
** “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவரே! மகத்துவமும் உன்னதமுமான வரே! பரிசுத்த ஸ்தலத்தில் வாசம்பண்ணுகிறவரே! நொறுங்குண்டு பணிந்த என் ஆவியை உயிர்பித்தருளும்.” (ஏசா 57:15)
** “தேவனே என் ஆவியை உலகத்தின் ஆவிக்கு விலக்கிக் காத்தருளும்.”
** “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப் பட்டவைகளை அறியும் படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.” (1கொரி2:12)
** “சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக்கண்டேன். உமமுடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.” (சங். 119:96)
** “கர்த்தர்: “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடு போராடுவதில்லை; அவன் மாம்சம் தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்” என்றிரே ஸ்தோத்திரம். (ஆதி 6:3 )
** “தேவனே என் ஆவி சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்து கொள்ள உதவியருளும். (1 யோவான் 4:6)
** “தேவனே! என் ஆவியை ஏரிச்சலின் ஆவிக்கு விலக்கிக் காத்தருளும்.” (எண் 5:14)
** “தேவனே! என் ஆவியை மற்ற வர்களோடு ஒருமனதைக் காத்திடும் சமாதனத்தின் ஆவியினால் நிரப்பிடும்.” (எபே 4:3).
** “தேவனே என் ஆவியில் கிறிஸ்துவிடமிருந்து ஊக்கம் பெற்றுள்ளேன் – ஸ்தோத்திரம். அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும், பரிவுள்ளமும், இரக்கமும் கொண்டுள்ளேன் – ஸ்தோத்திரம். கிறிஸ்துவுக்குள்ளான ஐய்கியத்தை, நாங்கள் ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரே மனத்த வராயிருந்து, உம் மகிழ்சியை நிறைவாக்க கிருபை செய்கிறீர் – ஸ்தோத்திரம். (பிலி 1:1,2)
** “தேவனே உமது பரிசுத்த ஆவியை அவித்துப் போடாதபடி என் ஆவியை காத்தருளும். பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலக கிருபை செய்யும் – ஸ்தோத்திரம்.
** “தேவனே என் தோழியும், என் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு துரோகம் பண்ணாமல் என் ஆவியைக் குறிந்து எச்சரிக்கையாயிருக்க உதவியருளும். (மல் 2:15)
** “தேவனே என் ஆவி உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ண உதவியருளும். (1யோவான் 4:2)
** “அப்பா பிதாவே, என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்றோமே – உமக்கு நன்றி! கோடா கோடி நன்றி!! (ரோமர் 8:15)
** “தேவனே என் ஆவிக்குரிய கண்களைத் இயேசுவின்’ நாமத்தினால் திறந்தருளும். (மத் 12:12)
** “தேவனே! கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் எங்களை ஆசீர்வதித்திருக்கிறீர் – உமக்கு நன்றி! கோடா கோடி நன்றி!! (எபே 1:3)
** “எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே! மகிமையின் பிதாவே!! உம்மை நாங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை எங்களுக்குத் தாரும்.” ஸ்தோத்திரம்! (எபே 1:17)
** “பிதாவே! நீர் எங்களை அழைத்ததினாலே எங்களுக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களுக்கு நீர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும் நாங்கள் அறியும் படிக்கு எங்கள் அகக் கண்கள் ஓளி யூட்டப் பெறுவனவாக! உமக்கு நன்றி! (எபே 1:18)
** “பிதாவே! நீர் கிறிஸ்துவை மரித்தோரி லிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த உமது பலத்த சத்துவத்தின் வல்லமைப் படியே, விசுவாசிக்கிற வர்களாகிய எங்களிடத்தில் காண்பிக்கும் உம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்ன தென்று நாங்கள் அறியும் படிக்கு நீர் எங்களுக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைக் கொடுத்தருளும்.” (எபே 1:19)
** “ஆண்டவர் எத்துணை இனியவர்! ஸ்தோத்திரம். கடவுளால் தெரிந்து கொள்ளப் பட்ட உயர்மதிப் புள்ள உயிருள்ள கல்லாகிய அவருக்குள் நாங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குறிய இல்லமாக கட்டி எழுப்பப் படுவதற்காக ஸ்தோத்திரம்! (1 பேதுரு 2:4,5)
** “தேவனே! இயேசு கிறிஸ்து மூலமாய் உமக்குப் பிரியமான ஆவிக்குரிய பலிகளைச் செலுத்த கிருபை செய்யும். ஸ்தோத்திரம்! (1பேதுரு 2:5)
** “தேவனே என் ஆவியில் உமது பரிசுத்தாவியின் ஏவுதலினால் வழி நடக்க உதவி செய்யும். (லுக்கா 2:27; ரோமர் 1:9)
“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” ஸ்தோத்திரம். (அப் 1:8)
** “தேவனே என் ஆவியில் அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியை கட்டளை யிட்டீர் – உமக்கு நன்றி! (நெகே 9:20)
** “தேவனே என் ஆவியில் உமது சித்தத்தை அறிகிற பரிசுத்தாவியின் ஏவுதலைத் தந்தருளும்.” (அப் 21:4)
** “தேவனே என் ஆவி உமக்கு உரியவைகளைச் சிந்திக்க உவியருளும்.” ((ரோமர் 8:5)
“கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே – ஸ்தோத்திரம்.” (ரோமர் 8:2)
“இயேசுவே! உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையா யிருக்கிறது. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்.” (ஏசாயா 26:8,9)
** “தேவனே ஆவியினால் நிறைந்து சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும், உம்மைப் பாடிக் கீர்த்தனம் பண்ண இயேசுவின்’ நாமத்தினால் கிருபை செய்யும்.” (எபே 5:18,19)
** “நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன். நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். (1கொரி 14:15)
** “தேவனே என் ஆவி பரிசுத்த ஆவியால் நிறைந்து உம்மை ஸ்தோத்தரிக்க கிருபை செய்யும்.” (எபே 5:20)
** “தேவனே நான் தூய ஆவியினாலே உம்மை ஆராதனை செய்து கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்ட கிருபை செய்கிறீர். உமக்கு நன்றி! (பிலி 3:3)
** “தேவனே என் ஆவி பரிசுத்தாவியால் நிறைந்து ஆவியோடும், உண்மையோடும் உம்மை தொழுது கொள்ள இயேசுவின்’ நாமத்தினால் கிருபை செய்யும். (யோவான் 4:24)
** “எங்கள் உடல் நாங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட தூய ஆவி தங்கும் ஆலயம் – ஸ்தோத்திரம். இயேசுவே! நான் உமக்குச் சொந்தமானவன். என்னை விலை கொடுத்து மீட்டுள்ளீர். நாங்கள் எங்கள் சரீரத்தினாலும் எங்கள் ஆவியினாலும் உம்மை மகிமைப் படுத்த கிருபையருளும்.” (1 கொரி 6:20)
** “தேவனே என் ஆவி உமக்குள் மகிழ்ந்து களிகூர இயேசுவின் நாமத்தினால் கிருபையருளும்.”
** “நாங்கள் உம்முடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து எங்கள் இருதயத்தில் வாசமாயிருக்கவும், நாங்கள் அன்பிலே வேரூன்றி, நிலை பெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங் கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், நீர் உமது மகிமையினுடைய ஐசுவரியத்தின் படியே அநுக்கிரகம் பண்ண வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன். ” (எபே 3:16-19)
** “நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும், நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லமையான கடவுளுக்கே, திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாதுக! ஆமென்! ” (எபே 3:20,21)
** “தேவனே உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும். நீரே என் தேவன். உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக! ” (சங்143:11)
** “தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” “சங் 51:10)
** “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தந்து உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும் படி செய்யும்.” (சங் 51:12)
** “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது. சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ண கிருபையருளும். ” (மத் 26:41)
** “சேனைகளின் கர்த்தாவே உமது ஜனத்திற்கு நீர் மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியுமாகவும் இருக்கிறீர் – ஸ்தோத்திரம்
நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல் மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமாகவும் இருக்கிறீர்- ஸ்தோத்திரம்.”
நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல் மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமாகவும் இருக்கிறீர்- ஸ்தோத்திரம்.”
** “தேவனே என் ஆவியை உமது நியாயத்தின் ஆவியால் நிரப்பியருளும். (எசாயா 28:5-6)
** “இயேசுவே! உமது நாமத்தினி மித்தம் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தும் சத்திய ஆவியால் என் ஆவியை நிரப்பியருளும். ” (யோவான் 16:13)
** “தேற்றரவாளனே! இயேசுவின்’ நாமத்தினால் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்திர்ப்பைக் குறித்தும் என்னை கண்டித்து உணர்த்தும்.” (யோவான் 16:8)
** “இயேசுவே! எங்கள் ஞானமே! உமது பரிசுத்த ஆவியை அருளிச் செய்து, உம்முடைய வார்த்தையைத் தெரிவித்தருளும். ” (நீதி 1:23)
** “தேவனே! என் ஆவி, உமது வேதத்தை ஆராய்ச்சி செய்ய உதவியருளும். ” (சங் 77:6)
** “இயேசுவே! எங்கள் மேல் சுத்தமான ஜலத்தை தெளித்து, எங்கள் அசுத்தங்களை நீக்கி எங்களை சுத்தமாக்கும். எங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து எங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடும். கல்லான இருதயத்தை எங்கள் மாம்சத்தி லிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை கொடுத்து, எங்கள் உள்ளத்திலே உம் ஆவியை வைத்து, எங்களை உம் கட்டளைகளில் நடக்கவும், உம் நியாயங்களைக் கைக் கொள்ளவும், அவைகளின் படிச் செய்யவும் பண்ணும்.” (எசே 36:25-27)
** “இயேசுவே! நான் உமது ஆவியால் நிறைந்து எல்லா வற்றையும் ஆராய்ந்து நிதானிக்க உதவியருளும்.” (கொரி2:15)
** “தேவனே! இயேசுவின் நாமத்தின் நிமித்தம், என் ஆவி உமது பரிசுத்த ஆவியினால் உம்முடைய ஆழங்களை ஆராய்ந்தறிய உதவியருளும். (1 கொரி2:10)
~~ “ஆவிக்குரியவன் எல்லா வற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றெருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான் – ஸ்தோத்திரம். (1 கொரி2:15)
** “தேவனே! என் ஆவியை உம் விசுவாசத்தின் ஆவியால் நிரப்பியருளும். (2 கொரி 4:13)
“இருளிலிருந்து வெளிச்சத்தை பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்தி லுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார் – அல்லேலூயா! ஆமென்!! (2 கொரி 2:6)
** “இயேசுவே! என் ஆவியை உமது எளிமையுள்ள ஆவியினால் நிரப்பியருளும்.” (மத்தேயு 5:3)
~~ “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கிவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” – ஸ்தோத்திரம்
** “இயேசுவே என் ஆவியை உமது சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியினால் நிரப்பியருளும்.” (1 பேதுரு 3:4)
** “இயேசுவே! என் ஆவியை உமது அன்பின் ஆவியால் நிரப்பியருளும்.”
** “இயேசுவே! என் ஆவியை உமது பலங்கொண்ட ஆவியினால் நிரப்பியருளும். “
** “இயேசுவே! என் ஆவியை உமது தெளிந்த புத்தியுள்ள ஆவியினால் நிரப்பியருளும்.” (2 தீமோத்தேயு 1:7)
** “இயேசுவின்’ நாமத்தில், ஆண்டவரின் ஆவி எங்கள் மேல் தங்கியிருப்பாராக! ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு – இவற்றை ஆண்டவரின் ஆவி எங்களுக்கு அருளி, ஒவ்வொரு நாளும், இயேசுவின்’ நாமத்தில் எங்களை கரம் பிடித்து வழிநடத்துவாராக.”
நாங்கள் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்போம்.” (எசாயா 11:2-3)
நாங்கள் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்போம்.” (எசாயா 11:2-3)
~~ “கிருபையையும், ஞானத்தையும் எங்களுக்கு, அருளுபவரே” – ஸ்தோத்திரம்.
** ” தேவனே! ஒருவனும் எதிர்த்து நிற்க கூடாத ஞானத்தையும், ஆவியையும், இயேசுவின்’ நாமத்தில் எங்களுக்கு அருளும்.” (அப்போ 6:10)
** “இயேசுவே! எங்களை புனிதமிகு கடவுள் ஆவியால் நிரப்பும். வியத்தகு விவேகமும், அறிவும் உடையவர்களாய் திகழ, கனவுகளுக்கு விளக்கம் கூறும் அறிவாற்றல் படைத்தவர்களாக திகழ, கருகலானவைகளைத் தெளிவிக்கிறவர்களாய் திகழ, தானியேலுக்கு அருளிய விசேஷித்த ஆவியை! எங்களுக்கும் அருளும்.” (தானி 6:10)
** “தேவனே! இயேசுவின்’ நாமத்தில் எங்கள் ஆவியை உமது வைராக்கியத்தால் நிரப்பும்.” (அப்போ 17:16)
**”எங்களில் வாசமாயிருக்கிற ஆவியானவரே! நீர் எங்களிடத்தில் வைராக்கிய வாஞ்சையாய் இருக்கிறீர் என வேத வசனம் சொல்லுகிறததே – உமக்கு நன்றி! கோடா கோடி நன்றி!! தாழ்மையுள்ளவனுக்கு அதிகமான கிருபை அளிக்கிறீர்! உமக்கு நன்றி! (யாக்கோபு 4:6)
** “இயேசுவே! நாங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே மனத்தோடு நற்செய்தியில் உள்ள நம்பிக்கைக்காக போராடி, எதிரிகள் முன் சற்றும் மருளாமல் இருப்பது தேவனுடைய செயலே – ஸ்தோத்திரம்!
** “தேவனே! யோவான் ஸ்நானகனுக்கு, வளர்ந்து, ஆவியிலே பெலன் கொள்ள கிருபை செய்தீரே, நாங்களும் அப்படியே ஆவியிலே பலங்கொண்டு வளர இயேசுவின்’ நாமத்தினால் கிருபை செய்யும்!
** “இயேசுவே! உயிர்ப்பிக்கிர ஆவியானவரே! எங்கள் தகுதி உம்மாலே உண்டாயிருக்கிறது. புது உடன்படிக்கையின் ஊழியக்காரனாயிருக்கும்படி தகுதியுள்ளவர்களாக்கினீர்! உம்மைத் துதிக்கிறேன்.”
** “தேவனே! என்னை காலுன்றி நிற்க செய்யும் உமது ஆவியால் நிரப்பும். எசேக்கியேலோடு பேசினீரே – என்னோடும் பேசும்.”
** “சேனைகளின் கர்த்தாவே! எங்கள் மேலும், எங்கள் சந்ததியின் மேலும், எங்கள் திருச்சபையின் மேலும் கிருபையின் ஆவியையும், விண்ணப்பத்தின் ஆவியயையும் ஊற்றியருளும். ” (சகரியா 12:10)
~~ “கிறிஸ்து எங்ளுக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலை கொண்டிருப்போம்.” (கலா 6:1)
** “கிறிஸ்து இயேசுவே! நாங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிற வைகளைச் செய்யும் படி ஆவியினால் நடத்தப்பட எங்கள் ஆவியோடு உமது கிருபை இருக்க அருள்செய்யும். ஆவிக்கேற்ற படி நடப்போம். மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்போம். ” (கலா 5:16-18)
~~ “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.” ஸ்தோத்திரம். (கலா 5:24)
~~ “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருப்போம்.” ஸ்தோத்திரம். ” (கலா 5:26)
~~ “நானோ நம்முடைய கர்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறோன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறை யுண்டிருக்கிறது, நானும் உலகத்திகுச் சிலுவையில் அறை யுண்டிருக்கிறேன். ” (கலா 6:14)
** “பிதாவே! என் ஆவியை உமது பரிசுத்த ஆவியினால் அளவில்லாமல் நிரப்பியருளும். தேவ ஆவி புறாவைப் போல இறங்கி என்மேல் வருகிறதைக் காண கிருபைருளும்.” (மத் 3:16)
~~ “பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர் களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா! என வேதம் சொல்லுகிறததே – ஸ்தோத்திரம். (லூக்கா 11:13)
“தேவனே! நான் உம்முடைய வார்த்தையைப்பேச உமது ஆவியை இயேசுவின்’ நாமத்தில் அளவில்லாமல் கொடும்.” (யோவான் 3:34)
** “தேவனே! உமது குமாரனாகிய கிறிஸ்துவின் ஆவியினால் என்னை நிரப்பி மாம்சத்திற்குட் பட்டவனாயிராமல் ஆவிக்குட்பட்டவனாயிருக்க அருள் செய்யும்.” (ரோமர் 8:9)
~~ “இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி எங்களுள் குடி கொண்டு, கிறிஸ்துவை உயிர்த் தெழச்செய்த அவரே எங்களுக்குள் குடி கொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய எங்கள் உடல்களையும் உயிர் பெறச்செய்வார் – ஆமென்! அல்லேலூயா!! (ரோமர் 8:11)
★★ “எங்கள் சரீரம், நாங்கள் தேவனாலே பெற்றும் எங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாய் இருக்கிறது. நாங்கள் எங்களுடையவர்களல்ல. கிரயத்துக்கு கொள்ளப்பட்டுள்ளோம். ஆகையால் நாங்கள் தேவனுடையவர்கள். எங்கள் சரீரத்தினாலும் எங்கள் ஆவியினாலும், தேவனை மகிமைப்படுத்துகிறோம்.”
** “தேவனுடைய ஆவியாகிய, மகிமையுள்ள ஆவியானவர், இயேசுவின் நாமத்தின் நிமித்தம் எங்களில் தங்கியிருக்க கிருபை அருளும்.” (1 பேதுரு 4:14)
** “தேவனே! என் ஆவியில் உமது பரிசுத்த ஆவியானவர் அசைவாட கிருபை அருளும்.” (ஆதி 1:2)
** “நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும் படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றுள்ளோம்! ஆமென்! அல்லேலூயா!! (1 கொரி3:12)
** “கிதியோன் மேல் இறங்கின கர்தருடைய ஆவியானவரே! என் ஆவியின் மேல் இறங்கி என்னையும் பலப்படுத்தும்.” (நியா 6:34))
** “என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தரென்று அறிந்துகொள்வீர்கள்” என்ற உமது வார்த்தைக்காக நன்றி! (எசே 37:14)
** “தேவனே என் ஆவியில் உமது பரிசுத்த ஆவியை பிரவேசிக்கப் பண்ணியருளும்.” (எசே 37:5)
** “தேவனே! என் ஆவியை உமது பரிபூரண ஆவியினால், விசேஷித்த கிருபையினால் நிரப்பியருளும்.” (மல் 2:15; தானி 5:12)
** “நான் கர்த்தரோடிசைந்திருக் கிறேன், அவருடனே ஒரே ஆவியா யிருக்கிறேன் – ஸ்தோத்திரம். (1 கொரி 6:17)
** “தேவனே! என் ஆவி உமது பரிசுத்த ஆவியின் முதற்பலனைப் பெற்றுக்கொள்ள உதவிருளும்.” (ரோமர் 8:23)
** "தேவனே! ஆவியின் கனியாகிய, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொருமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், இவைகளால் என்னை நிரப்பியருளும். " "(கலா 5:22-23)
** "அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள். தீர்கதரிசனஞ் சொல்லுகிறவன் சபைக்கு பக்திவிருந்தியுண்டாகப் பேசுகிறான். தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் மேன்மையுள்ளவன். வரங்களில் தேறும்படி நாடுங்கள்." என்ற உம் வார்த்தைக்காக ஸ்தோத்திரம்." (1 கொரி 14:1)
** "எலியாவின் ஆவியின் வரம் எலிசாவுக்கு இரட்டிப்பாக கிடைத்ததே! எலியாவின் ஆவி, எலிசாமேல் மேல் இரங்கினதே! - ஸ்தோத்திரம்! தேவனே! என் ஆவியை உமது ஆவியால் இரட்டிப்பான வரங்களினால் நிரப்பியருளும். "(கொரி 2:9-15)
** "தேவனே! என் ஆவியை உமது ஆவிக்குரிய இரட்டிப்பான வரங்களால் நிரப்பியருளும். "
** "அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியானவர் ஒருவரே. திருத் தொண்டுகள் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்." ஸ்தோத்திரம்!
** "தூய ஆவியானவரே! ஞானம் நிறைந்த சொல் வளத்தை, எனக்கு வரமாக அருளிச்செய்யும்." (1 கொரி12:8)
** "தூய ஆவியானவரே! அறிவுசெறிந்த சொல்வளத்தை எனக்கு வரமாக அருளிச்செய்யும்."
** "தூய ஆவியானவரே! நம்பிக்கை வரத்தை எனக்கு அருளிச்செய்யும்."
** "தூயஆவியானவரே! பிணிதீர்க்கும் அருள் கொடையை எனக்கு அருளிச்செய்யும்."
** "தூய ஆவியானவரே! வல்ல செயல் செய்யும் ஆற்றலையும், இறைவாக்குரைக்கும் ஆற்றலையும், எனக்கு அருளும்."
** "தூய ஆவியானவரே! ஆவிகுரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும், எனக்கு அருளும்."
** "தூய ஆவியானவரே! பல்வகை பரவசப்பேச்சு பேசும் ஆற்றலையும், அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும், எனக்கு அருளும்."
** "தூய ஆவியானவரே! தினம் தினம் உம் விருப்பங்களைக் குறித்த புதிய, புதிய வெளிப்பாடுகளை உமது அடியானுக்கு அருளுவீராக."
** "தூய ஆவியானவரே! மனப்பூர்வமாய் தேவ சித்தத்தின்படி, நல் மனதோடே, ஊழியம் செய்ய என்னை வழிநடத்தும்." (எபே 6:6,8)
** "தூயஆவியின் துணை கொண்டு எல்லா வேண்டல்களையும், மன்றாட்டுகளையும் செய்ய கிருபை செய்யும். இதில் உறுதியாய் நிலைத்திருக்க, விழிப்பாயிருக்க அருள்செய்யும்." (எபே 6:18)
** "நற்செய்தியின் தூதுவன், பேசவேண்டியமுறையில் அதைத் துணிவுடன் எடுத்துக்கூற, மறைபொருளைத் தெரியப்படுத்த வார்த்தைகளை தூய ஆவியானவர் அருளிச்செய்ய வேண்டும் என மன்றாடுகிறேன்."
** "நான் பரவச நிலையில் இறைவனிடம் வேண்டும் போது என்னிடம் செயலாற்றும் தூய ஆவியானவரே இறை வேண்டல் செய்கிறார்." - ஸ்தோத்திரம்
** "தேவனே! என் ஆவி உம்மிடம் அந்நியபாஷையில் விண்ணப்பம் பண்ண, இரகசியங்களைப்பேச அருள் செய்யும்." (1 கொரி 14:2,14)
** "நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன். நான் ஆவியோடும் பாடுவேன்; கருத்தோடும் பாடுவேன்." - ஸ்தோத்திரம் (1 கொரி 14:15)
** "நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருளுவேன். உங்கள் புதல்வரும், புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும், உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள். அந்நாள்களில் உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியை பொழிந்தருளுவேன். இன்னும் விண்ணிலும், மண்ணிலும் வியத்தகு செயல்களை செய்து காட்டுவேன்." என்ற உம் வாக்குக்காக ஸ்தோத்திரம் (யோவேல் 2:28-30)
** "தேவனே! என் ஆவி உமது பரிசுத்த ஆவியால் தரிசனங்களையும், சொப்பனங்களையும் காண கிருபை யருளும்." (யோவேல் 2:28)
** "தேவனே! என் ஆவியை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பி எதிர் காலத்தைக் குறித்த வெளிப்பாட்டைத் தந்தருளும்." (அப்போ 11:28)
** "தேவனே! என் ஆவியை உமது பரிசுத்த ஆவியால் நிரப்பி சிக்கலான காரியங்களைத் தீர்க்க கிருபையருளும்." (தானி 5:12)
** "தேவனே! என் ஆவியை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பி ஜனங்களின் பாரங்களைச் சுமக்க கிருபையருளும். " (எண் 11:17)
** "பிதாவே! இதோ நான் தெரிந்து கொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர் மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். அவர் நியாயத்திற்கு ஜெயம்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின் மேல் புற ஜாதியார் நம்பிக்கையா யிருப்பார்கள்." என வேதவசனம் சொல்லுகிறதே! ஸ்தோத்திரம்.
~~ "பிதாவே! உமது ஆவியை எங்கள் மேல் அமரப்பண்ணும். மற்றவர்களுக்கு நியாயத்தை அறிவிக்க எங்களையும் பயன்படுத்தும். மக்கள் இயேசுவின் நாமத்தின் மேல் நம்பிக்கையாயிருக்க, நாங்கள் உமக்கு சாட்சியாக வாழ கிருபை யருளும். " (மத்தேயு 12:18-21)
** "தேவனே! இயேசுவின்' நாமத்தில் என் ஆவியை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பி மற்றவர்களுக்கு புத்திசொல்ல உதவியருளும். தேவ பயத்தோடு வாழ, கிறிஸ்துவுக்கு கீழ்படிந்து வாழ உதவியருளும்" (எபே 5:19-21)
~~ "நாங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல வல்லவர்களுமாயிருக்கிறோம் என்ற உம் வார்தைக்காக - ஸ்தோத்திரம்! "
~~ "தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமைக்காக, ஆறுதலுக்காக, நம்பிக்கைக்காக - ஸ்தோத்திரம்."
~~ "பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவனே உமக்கு நன்றி! கோடாகோடி நன்றி!"
~~ "பரிசுத்த ஆவியின் பலத்தினாலே எங்களுக்கு நம்பிக்கை பெருகும் படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் எங்களை நிரப்புவாராக! ஆமென்! " (ரோமர் 15:13)
** "புறஜாதியாரை வார்த்தையினாலும், செய்கையினாலும் கீழ்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக் கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறென்றையும் சொல்ல நான் துணிவதில்லை. ஸ்தோத்திரம்! "
** "தேவனே! என் ஆவியை உமது பரிசுத்த ஆவியால் நிரப்பி புறஜாதியாரை கீழ்படியப்பண்ண கிருபையருளும். " ரோமர் 15:18)
** "தேவனே! என் ஆவியில் ஊழியத்திற்குச் செல்ல வேண்டிய இடத்தை நிருணயிக்க உதவியருளும்." (அப் 19:21)
** "தேவனே! உமது பரிசுத்த ஆவியால் பிசாசுகளைத் துரத்த கிருபையருளும்." (மத் 12:24)
** "தேவனே! நீர் என் ஜெபத்தைக் கேட்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம்."
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே...
இந்நாளிலே உம்சித்தம் போல் நடத்திச்செல்லுமையா ஆவியானவரே! ஆவியானவரே! பரிசுத்த ஆவியானவரே...
இந்நாளிலே உம்சித்தம் போல் நடத்திச்செல்லுமையா ஆவியானவரே! ஆவியானவரே! பரிசுத்த ஆவியானவரே...
எப்படி நான் ஜெபிக்கவேண்டும் எதற்காக ஜெபிக்கவேண்டும் கற்றுத் தாரும் ஆவியானவரே... வேதவசனம் புரிந்துகொண்டு விளக்கங்களை அறிந்திட... வெளிச்சம் தாரும் ஆவியானவரே
எங்கு செல்லவேண்டும் என்ன சொல்ல வேண்டும் வழிநடத்தும் ஆவியானவரே.
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தும் ஆவியானவரே.
•• "நாங்கள் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாகயிருக்க கிருபையருளும்." [1தீமோ 4:12]
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தும் ஆவியானவரே.
•• "நாங்கள் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாகயிருக்க கிருபையருளும்." [1தீமோ 4:12]
மனச்சாட்சி
•• "கிறிஸ்து இயேசு என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்." ஆமென். (ரோமர் 9:5) அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை." (ரோமர் 9:33)
(1). கிறிஸ்துவுக்குள் உண்மையைச்சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியா யிருக்கிறது. (ரோமர் 9:2)
(2). பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே! எனது மனச்சாட்சியை உம்முடைய பாதத்தில் அர்ப்பணித்து ஜெபிக்கிறேன்!!
(3). நீங்கள் சோதனைக்குட்படாத படிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்று கூறிய ஆண்டவராகிய இயேசுவே! உம்மை போற்றுகிறேன். (மத்26:41) ஆண்டவரே பரிசுத்த ஆவிக்குள் என்னைத்தாழ்த்தி, விசுவாசத்தோடு, விழித்திருந்து ஜெபிக்க கிருபை செய்யும். (யூதா 20; 2 நாளா 7:14; மத் 21:22)
(4). தேவனே! என் மனச்சாட்சியில் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடி காத்தருளும். நான் சகோதரருக்கு இடறலாக அவர்களுடைய மனச்சாட்சியை புண்படுத்தாதபடி என்னைக் காத்தருளும். (1 கொரி 8:12)
(5). தேவனே! என் மனச்சாட்சி பாவத்தினால் கடிந்து கொள்ளப்பட உதவியருளும். (யோவான் 8:9)
(6). தேவனே! என் மனச்சாட்சியில் பாவங்களை உணரத்தக்க கிருபையருளும். (எபி 10:2)
•• "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்த சித்தத்தின்படி நாம் பரிசுத்தராக்கப்பட்டிருக்கிறோம்." - ஸ்தோத்திரம்.
•• "பரிசுத்தமாக்கப்படுகிறவர் களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்." ஸ்தோத்திரம்.
•• "நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் - என்று சொன்னீரே ஸ்தோத்திரம்.
•• "அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்று சொன்னீரே ஸ்தோத்திரம்.
(7). தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும், விசுவாசமும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டர்களுக்கு உண்டாகும் படி உமது வார்த்தையை வெளிப்படுத்தினீரே - உமக்கு ஸ்தோத்திரம். (தீத்து 1:3)
(8). "கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக் காரனுக்கேற்ற விதமாய், குற்றம்சாட்டப்படாத வனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்தி சொல்லவும், எதிர் பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும், வல்லவனா யிருககும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய் பற்றிக் கொள்ளுகிற வனுமானுமாயிருக்கவேண்டும்." என்று நீர் உம்முடைய வசனத்திலே சொல்லியிருக்கிறீர் - ஸ்தோத்திரம். (தீத்து 1:7-9)
(9) விசுவாசத்திலே ஆரோக்கிய முள்ளவனாயிருக்கும் படி உம்முடைய உண்மையின் படி எங்களுக்கு அருள்செய்யும். (தீத்து 1-14) சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கிறது - ஸ்தோத்திரம்.
(10) தேவனே! என் மனச்சாட்சியில் அசுத்தமில்லாதபடி காத்தருளும். (தீத்து1:15) "அசுத்தமுள்ளவர்களுக்கும், அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும், மனச்சாட்சியும் அசுத்தமா யிருக்கும். அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோ மென்று அறிக்கை பண்ணுகிறார்கள். கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படதக்கவர்களும், கீழ்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்." என்று உம்முடைய வசனம் எச்சரிக்கிதே - ஸ்தோத்திரம்
(11). நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜூவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு எங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம். ஸ்தோத்திரம்.
~~ "அழைக்கப்பட்டவர்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிற இயேசுவே! உமக்கு ஸ்தோத்திரம்
(12) தேவனே! என் மனச்சாட்சி அசுசிப்படாதபடி பரிசுத்தமாய் காத்தருளும். (1 கொரி8:7)
(13). "பிதாவாகிய தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." ஸ்தோத்திரம்.
(14). தேவனே! என் மனசாட்சி மாயம் செய்யாதபடி காத்தருளும். (1தீமோத்தேயு 4:1)
~~ "தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்கு பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ள தாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. (1 தீமோ 4:8)
(15). தேவனே! என்மனச்சாட்சி பலவீனமடையாதபடி காத்தருளும். (1 கொரி 8:7)
(16). "நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரை வழியாய்ப் புதிதும் ஜுவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணி வைத்துள்ளார்.
~~ அந்த மார்க்கத்தின் வழியாய் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது.
~~ தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறார்.
~~ ஆதலால் துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் அவரை அணுகிச் செல்வோம். நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாகயிருப்போம். வாக்குத்தத்தம் பண்ணிணவர் உண்மையுள்ளவர்.
~~ அன்பு செலுத்தவும், நற்செயல்கள் புரியவும ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக்கருத்தா யிருப்போமாக.
~~ நம் சபை கூட்டங்களில் கலந்து கொண்டு ஒன்றுகூடி ஒருவருக் கொருவர் ஊக்கமூட்டுவோமாக.
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். ஆமென்! அல்லேலுயா!! (எபிரெயர் 10:19-25)
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். ஆமென்! அல்லேலுயா!! (எபிரெயர் 10:19-25)
(17). தேவனே! என் மனச்சாட்சி வஞ்சக ஆவிகளுக்கு செவிகொடாதபடி காத்தருளும். (1 தீமோத்தேயு 4:1)
(18). தேவனே! என் மனச்சாட்சி பிசாசுகளின் உபதேசங்களுக்கு செவிகொடாதபடி காத்தருளும்.
(19). நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனா யிருக்கப்பிரயாசப்படுகிறேன். ஆண்டவரே! இயேசுவின்' நாம்த்தினால் என்னைக் காத்தருளும். (அப் 24:16)
(20). தேவனே! என் மனச்சாட்சியின் நிமித்தம் அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படிய உதவியருளும். (ரோமர் 13:5)
(21). தேவனே! என் மனச்சாட்சியின் நிமித்தம் எஜமானர்களுக்கு கீழ்ப்படிய உதவியருளும்.
(22). தேவனே! நான் ஒளியின் ஆயுதங்களைத்தரித்துக்கொண்டு பகலில் நடக்கிறவர்களைப்போல சீராக நடக்க அருள்செய்யும். தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க மாட்டேன். (ரோமர் 13:12-14)
(23). தேவனே! என் மனச்சாட்சி உமது விசுவாசத்தை விட்டு விலகிப்போகாதபடி காத்தருளும்.
(24). தேவனே! சுத்த மனச்சாட்சி யோடே விசுவாசத்தின் இரகசியத்தை காத்துக்கொள்ள கிருபையருளும். (1 தீமோ 3:9)
(25). தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.
(26). தேவனே! சுத்த மனச்சாட்சியோடு உம்மை ஆராதிக்க கிருபையருளும்.
(27). தேவனே! என் மனச்சாட்சி உம்மேல் பற்றுதலாயிருக்க கிருபையருளும். உபத்திரவங்களை பொறுமையோடு சகிக்க உமக்கு பிரிதியாக நடக்க உதவிசெய்யும்.
கிறிஸ்துவும் எங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச்சென்றுள்ளார். எனவே நாங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றவே அழைக்கப்பட்டுள்ளோம். (1 பேதுரு 2:21)
கிறிஸ்துவும் எங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச்சென்றுள்ளார். எனவே நாங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றவே அழைக்கப்பட்டுள்ளோம். (1 பேதுரு 2:21)
(28). எப்பொழுதும் கடவுள் முன்னிலையில் என் மனச்சான்றுக்கிசைய நேர்மையாக வாழ எனக்கு உதவிசெய்யும். (அப் 23:1)
(29). தேவனே! நல்மனச்சாட்சியை உம்முடைய அன்பினால் காத்துக்கொள்ள கிருபையருளும். (1 கொரி10:29)
(30). தேவனே! என் மனச்சாட்சியில் உண்மையாயிருக்க உதவியருளும். (ரோமர் 9:2)
(31). தேவனே! என் மனசாட்சி பரிசுத்த ஆவிக்குள் சாட்சியிடும் தைரியத்தை தந்தருளும். (ரோமர் 9:2)
(32). தேவனே! என் மனச்சாட்சியில் உமக்கு முன்பாக உத்தமனென்று விளங்கப்பண்ண உதவியருளும். (2 கொரி4:2)
(33). தேவனே! என் மனச்சாட்சி உமக்குள் பூரணப்பட்டிருக்க உதவியருளும். (எபி 9:9)
(34). தேவனே! நீர் என் ஜெபத்தைக்கேட்டதற்காக உமக்கு நன்றி.
~~"மனச்சாட்சியை சுத்திகரித்திடும்
நம் இயேசுவின் இரத்தமே! மனவேதனை நீக்கிடுமே சாபமெல்லாம் போக்கிடுமே! ..."
நம் இயேசுவின் இரத்தமே! மனவேதனை நீக்கிடுமே சாபமெல்லாம் போக்கிடுமே! ..."
"இயேசு இரத்தமே! இரத்தமே! இரத்தமே! விலையேறப்பெற்ற இரத்தமே! குற்றமில்லா பரிசுத்த இரத்தமே! "
ஐக்கியம்!/நட்புறவு!
(1). ஜுவவார்த்தைக்காக உமக்கு ஸ்தோத்திரம்! எங்கள் மகிழ்ச்சி நிறைவாயிருப்பதற்காக உமக்கு நன்றி! எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து வோடும் இருக்கிறது. ஸ்தோத்திரம்
~~ கடவுள் ஒளியாயிருக்கிறார். அவரிடம் இருள் என்பதேயில்லை. அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.
~~ அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைத் தூய்மைப்படுத்தும்.
~~ நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மை தூய்மைப் படுத்துவார். அவர் நம்பிக்கைக்குரியவர்! நேர்மையுள்ளவர்.
~~ நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
~~ நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
~~ ஆண்டவருடைய கட்டளைகளை, வார்த்தைகளை கடைபிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் என அதனால் அறிந்திருக்கிறோம்.
~~ அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்.
~~ இருள் நீங்கிப்போகிறது. மெய்யான ஒளி இப்போது பிரகாசிக்கிறது. தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்.
~~ உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (1யோவான் 1,2)
(2). பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே! உம்மோடு கூட நல்ல ஐக்கியம் உண்டாகும் படி அர்ப்பணித்து ஜெபிக்கிறேன்.
~~ கிறிஸ்து இயேசு வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட இறை யருளுக்காக கவுளுக்கு நன்றி!
~~ நாங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல் வன்மையும் நிறையறிவும் பெற்று எல்லா வகையிலும் செல்வர்களானோம். அல்லேலுயா!
~~ கிறிஸ்துவைப்பற்றிய சான்று எங்களால் உறுதிபடுத்தப் பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்கு காத்திருக்கும் எங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே யில்லை - அல்லேலுயா! (1 கொரிந்தியர் 1:4-31)
~~ ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளிலே நாங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க கடவுள் எங்களை இறுதிவரை உறுதிபடுத்துவாராக! ஆமென்! அல்லேலுயா!!
(3). கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற எங்களை அவர் அழைத்துள்ளார். அல்லேலுயா!
~~ நாங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருக்க, ஒரே மனமும், ஒரே நோக்கமும் கொண்டிருக்க எங்களுக்கு உதவி செய்யும்.
~~ சிலுவையைப்பற்றிய செய்தி மீட்பு பெறும் நமக்கு கடவுளின் வல்லமையாயிருக்கிறிது. அல்லேலுயா!
~~ எங்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும், ஞானமுமாயிருக்கிறார். அல்லேலுயா!
~~ கடவுளால் தான் நாங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப் பட்டிருக்கிறோம். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை எற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். நாங்கள் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டுகிறோம். அல்லேலுயா!
(4). தேவனே! கிறிஸ்துவுக்குள் ஆவியின் ஐக்கியத்தை தந்தருளும். (பிலி 2:1)
~~ கிறிஸ்துவிடமிருந்து நாங்கள் ஊக்கம் பெற்றுள்ளோம். அன்பினால் ஆறுதலும், தூயஆவியினால் தோழமையும், பரிவுள்ளமும், இரக்கமும் கொண்டுள்ளொம். நாங்கள் ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரேஉள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து ஒரே மனத்தவராயிருந்து கடவுளின் மகிழ்ச்சியை நிறைவாக்கிறோம். அல்லேலுயா!
(5). தேவனே! உமது குமாரனாகிய கிறிஸ்துவின் பாடுகளை அறிவதன் மூலம் உம்மோடு கூட நல்ல ஐக்கியத்தை தந்தருளும். (பிலி 3:10)
~~ என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். (பிலி 3:8)
(6). தேவனே! உமது பரிசுத்த ஆவியோடு ஐக்கியப்பட்டிருக்க கிருபையருளும்.
~~ ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் எங்கள் அனைவரோடும் இருப்பதாக. (2 கொரி13:14)
(7). தேவனே! உமது சத்தியத்தின் படி நடந்து மற்றவர்களோடு ஐக்கியத்தை காத்துக்கொள்ள கிருபையருளும். (1 யோவா1:6)
(8). தேவனே! ஒருவரோடொருவர் ஐக்கியத்தை காத்துக்கொள்ள கிருபையருளும். (1யோவா 1:7)
(9). தேவனே! மற்றவர்களோடு அந்நியோந்நிய ஐக்கியத்தை காத்துக்கொள்ள கிருபையருளும். (கலா 2:9)
(10). தேவனே! என் குடும்பத்தாரோடு அந்நியோந்நிய ஐக்கியத்தைக் காத்துக்கொள்ள கிருபையருளும். (கலா 2:9)
(11). தேவனே! என் உறவினர்களோடு அந்நியோந்நிய ஐக்கியத்தைக் காத்துக்கொள்ள கிருபையருளும். (கலா2:9)
(12). தேவனே! என் சபை போதகருடன், மற்ற ஊழியர்களுடன், என் சபை விசுவாசிகளுடன், பிற சபை விசுவாசிகளுடன் நல்ல ஐக்கியத்தை தந்தருளும்.
சுத்த ஆவி, என்னில் தங்கும்,
நானும் சுத்தன் ஆகவே
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்
உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும்,
வாசம் பண்ணும் நித்தமும்.
நானும் சுத்தன் ஆகவே
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்
உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும்,
வாசம் பண்ணும் நித்தமும்.
சத்திய ஆவி, என்னில் தங்கும்
நானும் சத்தியன் ஆகவே
தெய்வ பக்தி என்னில் முற்றும்
வளர்ந்தேறச்செய்யுமே
நீர் என்னில் பிரவேசியும்,
ஆண்டுகொள்ளும் நித்தமும்.
நானும் சத்தியன் ஆகவே
தெய்வ பக்தி என்னில் முற்றும்
வளர்ந்தேறச்செய்யுமே
நீர் என்னில் பிரவேசியும்,
ஆண்டுகொள்ளும் நித்தமும்.
நேச ஆவி, என்னில் தங்கும்
நானும் நேசன் ஆகவே
துர்ச்சுபாவம் போகப்பண்ணும்
அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும்,
மென்மேலும் வளர்த்திடும்.
நானும் நேசன் ஆகவே
துர்ச்சுபாவம் போகப்பண்ணும்
அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும்,
மென்மேலும் வளர்த்திடும்.
வல்ல ஆவி என்னில் தங்கும்
நானும் வல்லோன் ஆகவே
சாத்தான் என்னை தூண்டிவிடும்
போது ஜெயம் கொள்ளவே
நீர் பக்கத்தில் இரும்,
என்னைப் பலப்படுத்தும்.
நானும் வல்லோன் ஆகவே
சாத்தான் என்னை தூண்டிவிடும்
போது ஜெயம் கொள்ளவே
நீர் பக்கத்தில் இரும்,
என்னைப் பலப்படுத்தும்.
நல்ல ஆவி, என்னில் தங்கும்
நானும் நல்லோன் ஆகவே
பகை, மேட்டிமை, விரோதம்,
மற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன்,
என்னை சீர்படுத்துமேன்.
நானும் நல்லோன் ஆகவே
பகை, மேட்டிமை, விரோதம்,
மற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன்,
என்னை சீர்படுத்துமேன்.
தெய்வ ஆவி, என்னில் தங்கும்
நானும் உம்மில் தங்கவே
மோட்சபாதையில் நடத்தும்,
இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்
என்னை முற்றும் இரட்சியும்.
நானும் உம்மில் தங்கவே
மோட்சபாதையில் நடத்தும்,
இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்
என்னை முற்றும் இரட்சியும்.
உள்ளுணர்வு
~~ ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் மணிமுடி; அது அமைதியைப் பொழிந்து, உடல் நலனைக் கொழிக்கச் செய்கிறது. ஸ்தோத்திரம்.
~~ ஆண்டவரே அதனைக் கணக்கிட்டார்; அறிவாற்றலையும், நுண்ணறிவையும் மனிதருக்கு மழையெனப் பொழிந்திட்டார்; அதை உறுதியாய் பற்றிக் கொண்டோரை மாட்சியால் உயர்த்திட்டார். ஸ்தோத்திரம்.
~~ ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது; மகிழ்வையும், அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் வழங்குகிறது. ஸ்தோத்திரம்.
~~ ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு; அது தன் கனிகளால் மனிதருக்கு களிப்பூட்டுகிறது. ஸ்தோத்திரம்.
~~ அது அவர்கள் இல்லம் முழுவதையும் விரும்பத்தக்க நலன்களால் நிரப்பிவிடும் ; தன் விளைச்சலால் அவர்களின் களஞ்சியங்களை நிறைத்திடும். ஸ்தோத்திரம். (சீராக் 1:11-21)
~~ தேவனே! உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடல் சிலிர்க்கின்றது; உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அஞ்சி நடுங்குகின்றேன்.
(1). "சர்வ வல்லவருடைய சுவாசமே அவர்களை உணவுள்ளவர்களாக்கும்." (யோபு 32:8) என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம்.
•• "தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வ வல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர் கொடுத்தது. நான் தேவனால் உண்டானவன்." (யோபு 33:4,6)
•• "பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே! என் உள்ளுணர்வுகள் உம்முடைய உணர்வுகளாக மாறும் படி அர்ப்பணித்து ஜெபிக்கிறேன்!"
(2). பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே! தேவனே! என் பாவங்களைக் குறித்த உணர்வைத் தந்தருளும்.
√ தேவனே! என் பாவங்களி லிருந்து மனந்திரும்பும் உணர்வைத் தந்தருளும். (1 இரா 8:47)
(3). தன் பிழைகளை உணருகிற வன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.
√ துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக் காரும். அவைகள் என்னை ஆண்டு கொள்ள ஒட்டாதிரும். அப்பொழுது நான் உத்தமனாகி பெரும் பாதகத்துக்கு நீங்கலா யிருப்பேன்.
√ என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே! என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமூகத்தில் பீரிதியாயிருப்பதாக.
√ தேவனுடைய நாமம் எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக - ஸ்தோத்திரம்
(4). தேவனே! பொல்லாப்பு செய்யும் உணர்விலிருந்து விலக்கி எங்களைக் காத்தருளும். (எரேமியா 4:22)
(5). தேவனே! உமக்குப் பயப்படும் உணர்வைத் தந்தருளும். (சங்94:8)
(6). தேவனே! உம்மைத் தேடுகிற உணர்வைத் தந்தருளும். (சங் 14:2)
(7). தேவனே! உம்மை அறியக் கூடிய உணர்வைத் தந்தருளும். (எசாயா 1:3)
(8). தேவனே! உம்முடைய உணர்வுகளால் எப்பொழுதும் நிரம்பியிருக்க கிருபை யருளும்.
(9). நாக்கு உணவைச் சுவைத்து அறிவது போல, காது சொற்களைப் பகுத்துணர்கின்றது -ஸ்தோத்திரம். (யோபு 34:2)
[10] தேவனே! உம்முடைய வார்த்தைகளின் சத்தத்திற்கு செவி கொடுக்கும் உணர்வைத் தந்தருளும். (யோபு 34:16)
~~ உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இருதயத்தில் இருத்தி யுள்ளேன். (சங் 119:11)
~~ உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்க மாட்டேன். (சங் 119:16)
~~ உம் அடியானுக்கு நன்மை செய்யும்.நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.
•• அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவை சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்று உம் வார்த்தை எச்சரிக்கிறதே - ஸ்தோத்திரம். (உபாகமம் 32:28,29)
√ உம்மை நோக்கி வேண்டுதல் செய்து என் முழு இருதயத்தோ டும், என் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்ப அருள் செய்யும். என்னை மன்னித்து இரக்கத்தை எனக்கு கிடைக்கப் பண்ணுவீராக!
√ நாங்கள் உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்திரமுமாய் இருக்கிறோமே! ஸ்தோத்திரம்.
√ உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனத்தின் வேண்டுதலுக் கும் திறந்திருப்பதாக!
•• "தாம் வாக்குத்தத்தம் பண்ணின படியெல்லாம் தம்முடைய ஜனமாகிய எங்களுக்கு இளைப்பாறுதல் அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
√ மோசேயைக் கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப் போகவில்லை. ஸ்தோத்திரம்!
•• எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களைக் கைவிடாமலும், எங்களை நெகிழவிடாமலும் அவர் எங்கள் பிதாக்களோடு இருந்தது போல எங்களோடும் இருந்து, நாங்கள் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும், அவர் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், கைக் கொள்ளுகிறதற்கும் எங்களுடைய இருதயத்தை அவரிடத்தில் சாயப்பண்ணு வாராக!
•• நாங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, எங்களுடைய இருதயம் எங்கள் தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக் கடவது. ஆமென்! அல்லேலுயா!!
[11] கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு நாங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு கிருபை செய்யும்.
~~ கடவுளின் மாட்சிக்காகவும், புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர கிருபை செய்யும். (பிலி 1:8,9)
~~ தேவனே! உம் வாக்கின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.
~~ தேவனே! உமது வாக்கின்படி என்னைத் திடப்படுத்தும்.
~~ தேவனே! உம் திருச்சட்டத்தின் படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.
(சங் 119:25,28,34)
(சங் 119:25,28,34)
~~ தேவனே! உம் கைகளே என்னை உருவாக்கின; என்னை வடிமைத்தன; உம் கட்டளைகளை நான் கற்றுக் கொள்ள எனக்கு மெய்யுணர்வு தாரும். (சங் 119:73)
~~ தேவனே! உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவுகூறும்; அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர். ஸ்தோத்திரம்.
~~ தேவனே! நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. (சங் 119:72)
~~ ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்; அவர்கள் வழி மரபினரும் அதனை உரிமை யாக்கிக்கொள்வர். அது அவர்களை மகிழ்விக்கும்; அவர்களுக்கு தன் இரகசியங் களை வெளிப்படுத்தும். ஸ்தோத்திரம்.
~~ ஞானம் பேச்சிலே பலப்படும்; நற்பயிற்சி வாய்மொழியால் வெளிப்படும். ஸ்தோத்திரம்.
தேவனே! உமது பேரன்புக்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும், நீர் திருவாய் மலர்ந்த ஒழுங்கு முறைகளை நான் கடைப் பிடிப்பேன். (சங் 119: )
~~ தேவனே! எங்கள் இருதயத்தாலும் எங்கள் உள்ளத்தாலும் உம்மையே நாடுகிறோம். நாங்கள் உமது திருச்சட்டத்தைக் கடைபிடிப்போம்.
~~ எங்களுக்கு வேண்டிய அறிவையும் விவேகத்தையும் தந்தருள்வீராக ஸ்தோத்திரம்.
~~ எங்களுக்கு வேண்டிய அறிவையும் விவேகத்தையும் தந்தருள்வீராக ஸ்தோத்திரம்.
~~ திடன் கொள்! உறுதியாய்யிரு! அஞ்சாதே! கலங்காதே! எழு! செயல்படு! ஆண்டவர் உன்னோடு இருப்பார்! எத்திக்கிலும் உங்களுக்கு அமைதியைத் தந்துள்ளார்- என்ற உம் வார்த்தைக்காக ஸ்தோத்திரம். (1நாளா22:12 )
~~ நன்மதியையும், அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும். (சங்119:66)
~~ ஆண்டவரே! என்றென்றைக் கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப்போல அது நிலைத்துள்ளது.
~~ தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப்பிறழாமை நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச்செய்தீர், அது நிலை பெற்றுள்ளது.
~~ உம் ஒழுங்குமுறைகளின் படியே அனைத்தும் இன்றுவரை நிலைத் துள்ளன; ஏனெனில் அவை உமக்கு ஊழியம் செய்கின்றன.(சங்119:89,90,91)
~~ ஆண்டவரே! நான் உமது திருச் சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.
[] என் எதிரிகளைவிட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை; ஏனெனில் என்றென்றும் அது என்னோடு உள்ளது.
[] எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேக முள்ளவனாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்கு முறைகளையே நான் சிந்திக்கின்றேன்.
[] முதியோர்களைவிட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில் உம் நியமங்களைக் கடைபிடிக்கின்றேன்.
[] உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவே பொய்வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்.
~~ உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
~~ என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே.
~~ உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது.
~~ ஆண்டவருடைய கட்டளைகளை எப்போதும் உள்ளத்தில் இருத்து. அவரே உன் உள்ளத்திற்குத் தெளிவூட்டுவார்; நீ விரும்பும் ஞானத்தை உனக்கருளுவார் - என உம் வார்த்தை சொல்லுகிறதே - ஸ்தோத்திரம்
~~ என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும். என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும். ஸ்தோத்திரம். (சங் 49:3)
[] தேவனே! எனக்காக வழக்காடி என்னை மீட்டருளும்; உமது வாக்குக்கேற்றபடி என் உயிரைக் காத்தருளும். (சங் 119:154)
~~ கடவுள் என்னுயிரை மீட்பது உருதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து தூக்கி நிறுத்துவார். அல்லேலூயா!
[] தேவனே! உம்முடைய யோசனைகளைக் கேட்க்கும் உண்ர்வைத் தந்தருளும். (உபா 32:28)
[] தேவனே! உம்முடைய ஆலோசனைகளைக் கேட்கும் உணர்வைத் தந்தருளும். (உபா 32:28)
[] தேவனே! உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்! தீயது எதுவும் என்னை மேற்கொள்ளவிடாதேயும்! ஸ்தோத்திரம்.
[] தேவனே! உம் ஒழுங்குமுறைகள் எக்காலமும் நீதியுள்ளவை; நான் வாழுமாறு எனக்கு நுண்ணறிவு புகட்டும். உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன். (சங் 119:144)
[] தேவனே! உம்முடைய வார்த்தையின் இரகசியத்தைக் குறித்த உணர்வைத் தந்தருளும். (மாற்கு 7:18)
[] தேவனே! நீரே என்னை படைத்தவர், உருவாக்கியவர் என்னும் உணர்வைத் தந்தருளும். (எசாயா 27:11)
[] தேவனே! நீரே எனக்கு இரங்கி என் மீது இரக்கம் காட்டுகிறவர் என்னும் உணர்வைத் தந்தருளும். (எசா27:11)
[] தேவனே! நீர் எனக்கு ஆதிமுதல் செய்துவரும் நன்மைகளைக் கேட்கும் உணர்வைத் தந்தருளும். (எசாயா 64:4)
[] தம்மை நம்பியிருப்போருக் காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்?
மகிழ்சியுடன் நேர்மையைக் கடைபிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர் - உமக்கு நன்றி!
ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே - உம்மைத் துதிக்கிறோம்.
அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன் - என்ற உம் வார்த்தைக்காக நன்றி! கோடாகோடி நன்றி!! (எசா 65:24)
[] தேவனே! மற்றவர்களுக்கு நன்மை செய்யும் உணர்வினால் என்னை நிரப்பும். எங்களுக்கு அறிவையும், உய்த்துணரும் ஆற்றலையும் அருளிச்செய்யும். (எரே 4:22)
[] தேவனே! உம்முடைய கிருபை களைக் காத்துக் கொள்ளும் உண்ர்வைத் தந்தருளும். (எசா 27:11)
[] தேவனே! உமக்குரிய இரகசியத்தை அறிகிற உணர்வைத் தந்தருளும். (கொலோ 2:2)
√ கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ அருள் செய்தீரே - உமக்கு நன்றி!
√ இறைமக்களுக்கான ஒளிமய மான உரிமைப்பேற்றில் பங்கு பெற எங்களை தகுதி யுள்ளவர்களாக்கினீர் - உமக்கு நன்றி!
√ தந்தையே! இருளின் அதிகாரத்தி லிருந்து எங்களை விடுவித்தீரே; உம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட் படுத்தினீரே - உமக்கு நன்றி!
√ நாங்கள் முழு ஞானத்தையும், ஆவிக்குரிய அறிவுத் திறனையும் பெற்று கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடைய கிருபை செய்யும்.
√ நாங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடைய வர்களாய் நடந்து கொள்ள கிருபை செய்யும்.
√ நாங்கள் பயன் தரும் நற் செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளர கிருபை செய்யும்.
√ நாங்கள் முழு மனஉறுதி யோடும், பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் எங்களுக்கு வலுவூட்டுவாராக! ஆமென்! அல்லேலூயா!! தந்தையே! உமக்கு நன்றி! கோடாகோடி நன்றி!
~~ ஞானமும், அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன! கிறிஸ்துவே உண்மை - ஆமென்! அல்லேலூயா!!
√ நாங்கள் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ, அவரில் வேரூன்றியவர்களாகவும், அவர் மீது கட்டியெழுப்பப் பட்டவர்களாக வும் திகழ, விசுவாசத்தில் உறுதியாய் நிற்க, நன்றி மிக்கவர்களாய் திகழ உதவி செய்யும்.
~~ "இறைதன்மையின் முழு நிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடி கொண்டிருக்கிறது. அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள் " என வேதம் சொல்லுகிறதே! ஸ்தோத்திரம்!
[] இயேசுவே! நீர் எப்பொழுதும் என்னோடு கூட இருக்கிறீர் என்னும் உணர்வைத் தந்தருளும். (மாற்கு 8:17)
[] தேவனே! என் ஜனம் உம்மை அறிய வேண்டும் என்னும் உணர்வைத்தந்தருளும். (எசாயா 27:11)
[] தேவனே! உம்முடைய மகிமையான ஊழியத்தைச் செய்யும் உணர்வைத் தந்தருளும். (2 நாளா 30:22)
இயேசு ராஜா உம் இதய துடிப்பை அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும். உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற கிருபையைத் தாரும்.
ஒரு வாழ்வு அது உமக்காக உணர்வெல்லாம் உமக்காக உள்ளமெல்லாம் உமக்காக....
உம் இருதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும். உம்சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும்....
அழிந்துபோகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும்.
ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்...
ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்...
உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்.
உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்...
உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்...
அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும்.
அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்...
அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்...
[1] பரலோக பிதாவே! உம்மைத் துதிக்கிறேன்! ஸ்தோத்தரிக்கிறேன்!
[2] என்னை மீட்டெடுத்த தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவே!
[3] எனக்குள்ளே வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவரே!
[4] நீதியைப்பேசி யதார்த்தமான வைகளை அறிவிக்கிறவரே!
[5] தமது மகிமையை வேறோருவனுக்கும் கொடாதவரே!
[6] தமது கரத்தினால் பூமியை அஸ்திபாரப்படுத்துறவரே!
[6] தமது கரத்தினால் பூமியை அஸ்திபாரப்படுத்துறவரே!
[7] வேதத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபித்தவரே!
[8] கட்டுக்கதைகாரரின் குறிகளை அபத்தமாக்குகிறவரே!
[9] சத்தியமும், உறுதியுமான ஆலோசனைகளை உடையவரே!
[10] வைராக்கியத்தை சால்வையாக போர்த்துக் கொண்டவரே!
[11] நீதியையும், துதியையும் முளைக்கப்பண்ணுகிறவரே!
[12] தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்கிறவரே!
[13] தீயோர், நல்லோர்மேல் சூரியனை உதிக்கப்பண்ணுகிற வரே!
[14] பூமியிலே நியாயத்தையும், நீதியையும் நடப்பிக்கிறவரே!
[15] ஜனங்களை மந்தையைப் போல் பெருகப்பண்ணுகிறவரே!
[16] மனுஷருடைய இராஜ்யத்தில் ஆளுகைச் செய்கிறவரே!
[17] வானத்திலும், பூமியிலும் அற்புதங்களைச் செய்கிறவரே!
[18] மனுஷனுடைய நினைவு களை வெளிப்படுத்துகிறவரே!
[19] பூமியின் உயர்ந்த ஸ்தானங் களின் மேல் உலாவுகிறவரே!
[20] பூமியிலுள்ள தேவர்களை மெலிந்துபோகப் பண்ணுகிறவரே!
No comments:
Post a Comment