Saturday, April 22, 2017

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்த வல்லமை

1. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமக்காக செய்த நன்மைகளை வேதவசனங்கள் சொல்கிற படி சாட்சியாக நாம் அறிக்கை செய்யும் போது, அத்தாட்சி அளிக்கும் போது நாம் சாத்தானை வெற்றி கொள்கிறோம்.
2. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் பிசாசின் கரங்களுக்கு நீங்கலாக்கி மீட்க்கப்பட்டு இருக்கிறென்.”

3. “கர்த்தராகிய இயேசு கிறித்துவின் இரத்தத்தினால் என்னுடைய எல்லாப் பாவங்களும் எனக்கு மன்னிக்கப்பட்டுள்ளது.”

4. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நான் என்னுடைய எல்லாப் பாவங்களுக்கும், அநியாயங்களுக்கும், மீறுதல்களுக்கும் நீங்கலாக்கி மீட்க்கப்பட்டு தொடர்ந்து சுத்திகரிக்கப்படுகிறேன்.”

5. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்த வல்லமை என்னை நிரபராதியாக, நீதிமானாக, ஒரு பாவமும் செய்யாதவனாக மாற்றியுள்ளது.”

6. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்னை மாசற்றதாக்குகிறது, புனிதப்படுத்துகிறது, பரிசுத்தமாக்குகிறது. தேவன் தங்கும் வாசஸ்தலமாக, பாத்திரமாக என்னை மாற்றுகிறது.”

7. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்தில், பிதாவின் சந்நிதியில் சேரும் சிலாக்கியத்தை, தைரியத்தை, பரிசுத்தத்தை, பாக்கியத்தை எனக்குத் தருகிறது.”

8. “புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எனக்காக பிதாவாகிய தேவனிடத்தில தெடர்ந்து நன்மையானவைகளைப் பரிந்து பேசுகிறது.”

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...