Saturday, April 22, 2017

அளவற்ற அன்பு / என்னுடைய மதிப்பு:

அளவற்ற அன்பு

தேவனுடைய தன்மையே அன்பாகும்.  தேவன் மிகவும் பெரியவராக இருக்கிறார்.  அவருடைய அன்பு பரந்து விரிந்தது.  எல்லையற்றது.  அளவிடமுடியாதது.

என்னுடைய மதிப்பு:

நான் தேவனுக்கும், மக்களுக்கும் மதிப்புள்ளவன்.
ஏனெனில் நான் இயேசுவின் சாயலுக்கேற்ப படைக்கப்பட்டிருக்கிறேன்.
நான் இன்றியமையாதவன். ஏனெனில் தேவனின் திட்டம் என்னில் அடங்கியிருக்கிறது.
தேவனிடத்திலிருந்து சிறந்ததைப் பெறுவதும், அவருடைய ஜக்கியத்தை அனுபவிப்பதும், என்னுடைய நன்மைக்காகவும், பிறருடைய நன்மைக்காகவும், அவருடைய செல்வத்தையும், அதிகாரத்தையும் உபயோகப்படுத்துவது என்னுடைய பிறப்புரிமையாயிருக்கிறது.
நான் ஜீவனுக்காகவும், அன்புக்காகவும், வல்லமைக்காகவும், செழிப்புக்காகவும், வெற்றிக்காகவும், கெளரவத்துக்காகவும், படைக்கப்பட்டிருக்கிறேன்.
மகத்துவத்தின் விதைகள் என்னில் இருக்கின்றன. தேவன் அடையாளமில்லாத ஒருவராக என்னைப் படைக்கவில்லை.
ஆனால் அடையாளமுள்ள ஒரு நபராக என்னைப் படைத்தார்.
தேவன் என்னை அவருடைய வாழ்க்கை முறைக்காக வடிவமைத்ததால், என்னுடைய சுயமதிப்பை நான் அறிந்து கொள்ளுகிறேன்.
அவருடைய பிள்ளையான எனக்கு அவர் வாழ்க்கையின் சிறப்பை எனக்காகத் திட்டமிட்டார் என்பதையும் நான் அறிந்து கொள்ளுகிறேன்.
தேவன், அவருடைய சாயலில் என்னைப் படைத்ததையும், மிக மதிப்பளிப்பதையும் நான் எந்த சூழ்நிலையிலும் குறைவாகவோ, இழிவாகவோ மதிக்கமாட்டேன். அழிக்கவும் மாட்டேன்.
தேவனுடைய நட்பின் சத்தத்தை நான் வரவேற்கிறேன்.

என்னுடைய உயர்ந்த நோக்கத்தையும் என்னுடைய வாழ்க்கையில் அவருடைய சிறப்பை நான் சாதிப்பதற்கும், அனுபவிப்பதற்கும், பங்கேற்பதற்கும் அவருடைய அன்பின் திட்டம் உதவி செய்கிறதை அவர் எனக்கு நினைவு படுத்துகிறார்.

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...