(1). ஆண்டவராகிய இயேசுவின் மேல் தங்கியிருந்த பரிசுத்த ஆவியானவரே! உமக்கு ஸ்தோத்திரம். (லூக்கா 4:1)
(2). சீஷர்களை சந்தோஷத்தினா லும், பரிசுத்த ஆவியினாலும் நிறைத்தது போல என்னையும் இயேசுவின்' நாமத்தின் நிமித்தம் நிரப்பும். (அப்13:52)
(3). உம்முடைய ஆவியினாலே என்னை நிரப்பி உமது அருள் கொடைகளை இயேசுவின் நாமத்தில் அருளும். (கொரி12:18)
(4). ஒத்தனியேல் மீது இருந்த ஆண்டவரின் ஆவியானவரே! போரில் வெற்றி பெற செய்தீரே! இஸ்ரயேருக்கு நீதித்தீர்ப்பு வழங்கினீரே! என் மீதும் தங்கியிருந்து வெற்றி மேல் வெற்றி பெற இயேசுவின் நாமத்தில் உதவி செய்யும். (நியா 3:10)
(4). யெப்தாவை நிரப்பின ஆவியானவரே! என்னையும் இயேசுவின் நாமத்தினால் நிரப்பும். எனக்கு எதிராய் போர் புரிகின்ற மாம்ச இச்சைகளை வெல்ல கிருபை செய்யும். (நியா11:29)
(5). ஆண்டவரின் ஆவி கிதியோனை அட்கொண்டது என வேதம் சொல்கிறதே! என்னையும் இயேசுவின் நாமத்தின் நிமித்தம் ஆட்கொள்ளும். என்னையும் வெற்றியின் பாதையில் வழிநடத்தும். என்னோடும் பேசும். (நியா 6:34)
(6). அம்சாவின் மேல் இறங்கின ஆவியானவரே! என் மேலும் இறங்கும். இயேசுவின் நாமத்தில் என்னையும் ஆட்கொள்ளும். வெற்றி முழக்கமிட கிருபை செய்யும். (1 நாளா 12:8)
(7). சிம்சோன் மேல் இறங்கி அவனை பெலப்படுத்தின ஆவியானவரே! என்னையும் பெலப்படுத்தும். (நியா 13:25)
(8). எலிசாவுக்கு இரட்டிப்பான ஆவியின் வல்லமையை அருளினவரே! என்னையும் இரட்டிப்பாய் நிரப்பும். (2 இரா 2:15)
(9). எசேக்கியேலை உம் வல்லமையால் நிரப்பி உமது சத்தத்தை கேட்கும்படி செய்தவரே! உம் சத்தத்தை நானும் கேட்க இயேசுவின் நாமத்தில் கிருபை செய்யும். (எசே 2:2)
(10). ஆண்டவரே! உன்னதத்தி லிருந்து வந்த பெலனால் என்னை இயேசுவின் நாமத்தினால் நிரப்பும். (லூக்கா 24:49).
(11). என்றென்றைக்கும் எங்களுடனே இருக்கும்டி சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை தந்தீரே! நன்றி கர்த்தாவே.
(12). கர்த்தாவே! பரிசுத்த ஆவியானவரை எங்கள் மேல் இயேசுவின் நாமத்தினால் சம்பூரணமாய் பொழிந்தருளும். (தீத்து 3:7)
(13). கர்த்தாவே! உமது ஆவியை எங்களுக்கு அருளி உமது வார்த்தையை எங்களுக்கு இயேசுவின் நாமத்தினால் தெரிவியும். (நீதி 1:23)
(14). கர்த்தாவே! உம்முடைய ஆவியினாலே உமக்குரியவை களை அறிந்து கொள்ள இயேசுவின் நாமத்தினால் கிருபை செய்யும். (1 கொரி 2:10)
(15). கர்த்தாவே! நாங்கள் செழிப்படையும் படியாக உன்னதத்திலிருந்து உமது ஆவியை இயேசுவின் நாமத்தினால் ஊற்றும். (ஏசா 32:15)
(16). பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று பெலனடையவும், எங்கும் சாட்சியாக வாழவும் இயேசுவின் நாமத்தினால் உதவி செய்யும். (அப் 1:8)
(17). எங்கள் சரீரங்களை உயிர்பிக்கப் போகிற ஆவியானவரே! ஆவிக்குரிய வாழ்ககையில் மரித்துப்போய் இருக்கிறவர்களை இயேசுவின் நாமத்தினால் உயிர்ப்பியும். (ரோமர் 8:11)
(18). ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கிராகும் படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு - என வேதம் சொல்லுகிறது போல ஆண்டவரே உம்முடைய ஜனங்கள் யாவரையும் உமது ஆவியால் இயேவின் நாமத்தினால் நிரப்பும். (எண் 11:29)
(19). ஜனத்தை சபிக்க புறப்பட்ட பிலேயாமை உம்முடைய ஆவியினால் நிரப்பி அவன் தேவ ஜனங்களுக்கு ஆசீர்வாதத்தை கூறியது போல எங்களை யாரும் சபிக்க எண்ணாதபடி இயேசுவின் நாமத்தினால் கிருபையாக காத்தருளும். (எண் 23:11)
(20). இஸ்ரவேல் வம்சத்தார் மேல் என் ஆவியை ஊற்றினபடியால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்றவரே! எங்கள் மேலும் உமது ஆவியை ஊற்றி உமது முகத்தின் ஒளியை எங்கள் மேல் இயேசுவின் நாமத்தின் நிமித்தம் பிரகாசிக்கப் பண்ணும். (எசே 39:29)
(21) ஊழியக்காரர் மேலும் ஊழிக்காரிகள் என் ஆவியை ஊற்றுவேன் என்றவரே! உமது ஆவியை ஊழியர்கள் மேல் இயேசுவின் நாமத்தினால் அளவில்லாமல் ஊற்றும். (யோவேல் 2:29)
(22). ஆண்டவரே! செருபாபேல், யோசுவா மற்றும் சபையார் உள்ளத்தை அவர்களோடு இருந்து தட்டியெழுப்பீனீரே! உம்முடைய அலயத்திலே வந்து வேலை செய்தார்களே! உம்முடைய வேலையை செய்ய நீர் எங்களோடு யிருந்து எங்கள் உள்ளத்தை உமது ஆவியால் நிரப்பி இயேசுவின் நாமத்தினால் தட்டியெழுப்பும். (ஆகாய் 1:14)
(23). உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல; எனது ஆவியாலே ஆகும் என்ற படைகளின் ஆண்டவரே! உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே உம்முடைய ஆவியினாலே எங்கள் காரியங்களை இயேசுவின் நாமத்தினால் வாய்க்கச்செய்யும். (சகரியா 4:6)
(24). தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புபெற மாட்டார் என வேதம் எச்சரிக்கிறதே! உமது பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பேசமாட்டேன் ஆண்டவரே - என்னை காத்து வழி நடத்தும்.
(25). பிலிப்புவிடம் நீ போய் அந்த இரத்துடனே சேர்ந்து கொள் என்று சொன்னது போல. ஆவியானவரே ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட நீர் என்னையும் நடத்தும். (அப் 8:29)
(26). பேதுருவிடம், இதோ மூவர் உன்னைத்தேடி வந்திருக்கின்றனர்; நீ கிழே இரங்கித் தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு புறப்பட்டுச்செல். ஏனெனில் நான் தான் அவர்களை அனுப்பி யுள்ளேன் என சொன்ன தூய ஆவியானவரே! எங்களையும் நற்செய்தியை அறிவிக்க இயேசுவின் நாம்த்தினால் பயன் படுத்தும். (அப் 10:19)
(27). கடவுளின் ஆவி உங்களுக்குள் குடி கொண்டிருந்தால், நீங்கள் ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருபீர்கள் என வேதம் சொல்லுகிறதே - தேவனே! உம்முடைய ஆவி என்னில் வாசமாயிருக்க என்னை அபிஷேகித்தருளும். (ரோமர் 8:9)
(28). கடவுளின் ஆவியால் இயக்கப் படுகிறவர்களே! கடவுளின் மக்கள் என உம்முடைய வார்த்தை சொல்லுகிறதே! தேவனே! நான் உம்முடைய புத்திரனாகும்படிக்கு என்னை உம்முடைய ஆவியினாலே இயேசுவின் நாமத்தினால் நடத்தும். (ரோமர் 8:14)
(29). தூய ஆவியானவர் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியானவர் தாமே சொல்வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக நமக்காக பரிந்து பேசுகிறார். உள்ளங்களை துருவி ஆயும் கடவுள், தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காக பரிந்து பேசுகிறார் என வேத வசனம் சொல்லுகிறதே - நாங்கள் ஏற்றபடி வேண்டிக்கொள்ள எங்களுக்கு இயேசுவின் நாமத்தின் நிமித்தம் உதவி செய்யும். (ரோமர் 8:26)
(30). எங்களுக்குள் இருக்கும் உமது ஆவியின் செயல்பாட்டை நாங்கள் தடுக்காதிருக்க எங்களுக்கு இயேசுவின் நாமத்தின் நிமித்தம் கிருபை செய்யும். (1 தெச5:19)
(31). ஆண்டவராகிய இயேசுவே! நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஒங்கி வளருகின்றது. ஸ்தோத்திரம். நாங்கள் எல்லாரும் ஒருவருக் கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது. ஸ்தோத்திரம்.
** நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு எங்களத் தகுதி யுள்ளராக்குவாராக! எங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும் நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக.
** தூய ஆவியால் தூய்மையாக்கப்பட, உண்மையை நம்பி மீட்பு அடைய, எங்களை தெரிந்து கொண்ட கடவுள்; நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை அடைய, கிருபை செய்வாராக.
** நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம் மீது அன்பு கூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர் நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் எங்கள் உள்ளங்களுக்கு ஊக்கம் அளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் எங்களை உறுதிப் படுத்துவார்களாக! ஆமென்! அல்லேலூயா!! (2 தெசலோ 1:3,4,11; 2:13,14,16 )
(32). இயேசு துன்புற்று இறந்த பின்பு நாற்பது நாள்களாக தாம் தெரிந்துகொண்ட திருத் தூதர்களுக்கு தோன்றி, இறையாட்சியைப் பற்றி கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதை காண்பித்தார். தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள்; தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள் என்றும் கூறினார் என அப்போஸ்தலர் 1ம் அதிகாரத்தில் படிக்கிறோமே! நாங்களும் தூய ஆவியைப்பெற்று வெவ்வேறு பாஷைகளில் பேச அருள் செய்யும். (அப் 2:4)
(33). மனிதர்களுக்கு கீழ்படிவதை விட கடவுளுக்கு அல்லவா கீழ்படிய வேண்டும். கர்த்தாவே நாங்கள் உமக்கு கீழ்ப்படிய எங்களையும் உம்முடைய தூய ஆவியால் நிரப்பும். பாவமன்னிப்படைந்து மீட்படைய கிருபை செய்யும். ஸ்தோத்திரம். (அப்போ 5:32)
(34). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! பரிசுத்த ஆவியினால் நான் ஞானஸ்நானம் பெற உதவி செய்யும். (அப்1:4)
(35). சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே! சகல சத்தியத்திற் குள்ளும் என்னை நடத்தும். வரப் போகிறவற்றை எனக்கு இயேசுவின் நாமத்தில் அறிவியும். (யோவான் 16:13)
(36). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! ஜலத்தினாலும், ஆவியினாலும் நான் மறுபடியும் பிறக்க அருள் செய்யும். தூய ஆவியானவரின் இயல்பை உடையவனாயிருக்க என்னை உமது நாமத்தின் நிமித்தம் அபிஷேகியும். (யோவான் 3:5)
(37). பரிசுத்த ஆவியானவரே! நான் உம்மை துக்கப்படுத்தாத படி என்னை இயேசுவின் நாமத்தால் காத்தருளும். (எபே 4:30)
(38). பரிசுத்த ஆவியானவரே! உம்மை நான் சோதிக்காதிருக்க இயேசுவின் நாமத்தில் அருள் செய்யும்.
(39). கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டும் பேசுவார். அவர் வசனம் என்னுடைய நாவில் இருக்கும்.
(40). கர்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர். கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். (2 சாமு 23:2) ஸ்தோத்திரம்!
(41). தேவன் எனக்கு பலத்த அரணானவர்; அவர் என் வழியை செவ்வைப்படுத்துகிறவர்.
** அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
(42). கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் அவர் போற்றப் பெறுவாராக! என் இரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் மாட்சியுறுவாராக!! (2 சாமு 22: 33,34,47)
(43). என் உள்ளத்தின் நேர்மையை என் சொற்கள் விளம்பும்; அறிந்ததை உண்மையாய் விளம்பும் என் உதடுகள்.
இறைவனின் ஆவி என்னைப் படைத்தது; எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது.
இறைவனின் ஆவி என்னைப் படைத்தது; எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது.
(44). கடவுளே! உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளி விடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துவிடாதேயும்.
உம்மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். (சங் 51:11,12)
உம்மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். (சங் 51:11,12)
(45). உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில் நீரே என் கடவுள்; உமது நலமிகு ஆவி இயேசுவின் நாமத்தில் என்னை செம்மையான வழியில் நடத்துவாராக! (சங் 143:10)
உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகிறேன்; வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல் என் உயிர் உமக்காகத் தவிக்கிறது. (சங் 142:6)
(46). ஞானத்தையும், உணர்வையும் அருளும் ஆவியானவரே! ஆலோசனையையும், பெலனையும் அருளும் ஆவியானவரே! அறிவையும், கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியானரே! என் மேல் இயேசுவின் நாமத்தின் நிமித்தம் தங்கியிரும். கர்த்தருக்கு பயப்படுதல் எனக்கு உகந்த வாசனையாயிருப்பதாக! (ஏசா11:1,2)
(47). தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஒடச்செய்வேன்; உம் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல் களுக்கு நான் ஆசி வழங்குவேன்; அவர்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும், நாணல்கள் போலும் செழித்து வளருவர் என வாக்குறுதி அளித்துள்ளீர். உமக்கு நன்றி! கோடாகோடி நன்றி!! உமது வார்த்தையின் படியே அருளிச்செய்யும். (ஏசா 44:3,4)
(48). உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும்
உன் வாயினின்றும் உன் வழிமரபினர் வாயினின்றும் வழிவழி வரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றும் நீங்கிவிடாது என்ற உம் உடன்படிக்கையின் வார்த்தையின் படியே இயேசுவின் நாமத்தில் அருள் செய்யும். உமக்கு நன்றி! கோடாகோடி நன்றி!! (ஏசா 59:21).
உன் வாயினின்றும் உன் வழிமரபினர் வாயினின்றும் வழிவழி வரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றும் நீங்கிவிடாது என்ற உம் உடன்படிக்கையின் வார்த்தையின் படியே இயேசுவின் நாமத்தில் அருள் செய்யும். உமக்கு நன்றி! கோடாகோடி நன்றி!! (ஏசா 59:21).
(49). ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என் மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிப்பேன். உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்துவேன். சிறைப் பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றுவேன். கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிப்பேன். துயருற்று அழுவோருக்கு ஆறுதல் அளிப்பேன். சாம்பலுக்கு பதிலாக அழகு மாலை அணிவிக்கவும், புலம்பலுக்கு பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாக 'புகழ்' என்னும் ஆடையை கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆமென். அல்லேலூயா!! (ஏசாயா 61:1)
(50). என் ஆவியை உங்கள் மேல் பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன் - என்ற உமது வார்த்தைக்காக நன்றி அண்டவரே! கோடாகோடி நன்றி!! (எசே 37:14)
(51). நான் இனி ஒருபோதும் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துககொள்ளமாட்டேன். இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியைப் பொழிவேன் என்ற உமது வார்த்தைக்காக நன்றி ஆண்டவரே! கோடாகோடி நன்றி! (எசேக்கியேல் 39:29)
(52). இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் " என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. என வேதம் சொல்லுகிறதே என் மீதும் கடவுளின் ஆவி புறா இறங்குவது போல இறங்க இயேசுவின் நாமத்தில் அருள் செய்யும். (மத் 3:16-17)
(53). வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன - என வேதத்தில் படிக்கிறேனே! அப்பா நான் உம்முடைய வார்த்தையை புரிந்து உணர்ந்து கொள்ள அருள் செய்யும்.
(54). கிறிஸ்து இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினீரே! உமக்கு ஸ்தோத்திரம். என்னில் வாசம் செய்யும் உம்முடைய ஆவியால் சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை இயேசுவின் நாமத்தினால் உயிர்ப்பியும். (ரோமர் 8:11).
(55). உடலின் தீச்செயல்களை சாகடிக்க உதவி செய்யும் தூய ஆவியானவரே! உமக்கு ஸ்தோத்திரம்!
கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிற வர்களே கடவுளின் மக்கள். ஸ்தோத்திரம்!
கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொள்ள தயை செய்தீரே! உமக்கு நன்றி!
அப்பா தந்தையே! என அழைக்க கிருபை செய்தீர் - உமக்கு நன்றி! (ரோமர் 8:14-16)
(56). உங்கள் விசுவாசம், தேவனுடைய பெலத்தில் நிற்க்கும் படிக்கு என் பேச்சும் என் பிரசங்கமும், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிபடுத்தப் பட்டதாயிருந்தது. வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறைஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மைபெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது என 1கொரிந்தியர் 2:4,5,7 ல் படிக்கிறேனே ஆண்டவரே! நான் பறைசாற்றும் நற்செய்தியும் தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக இயேசுவின் நாமத்தில் அமைவதாக!
(57). நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறிவிக்கும் படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். ஸ்தோத்திரம்! (1 கொரி 2:12-13)
பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். ஸ்தோத்திரம்! (1 கொரி 2:12-13)
(58). நாங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். தேவனுடைய ஆவியானவர் எங்களில் வாசமாயிருக்கிறார். ஸ்தோத்திரம்! (1 கொரி 3:16)
(59). நாங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவர்களானோம்.கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறோம். ஸ்தோத்திரம்! கோடாகோடி ஸ்தோத்திரம்!! (1 கொரி 6:11)
(60). உடல் ஒன்றே; உறுப்புக்கள் பல. உறுப்புக்கள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பது போல கிறிஸ்துவும் இருக்கிறார். ஸ்தோத்திரம்!
யூதரானாலும், கிரேக்கரானாலும், அடிமைகளானாலும், உரிமை குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியை பானமாகவும் பெற்றோம். ஸ்தோத்திரம்! (1 கொரி 12:12-13)
(61). கிறிஸ்துவோடு எங்களுக்கு இருக்கும் உறவை கடவுளே உறுதி படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.
அவரே நம் மீட்பை உறுதிபடுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம் மீது தம் முத்திரையை பதித்தார். நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலையாய் இருக்கிறோம். (2 கொரி 1:21-22) ஸ்தோத்திரம்.
அவரே நம் மீட்பை உறுதிபடுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம் மீது தம் முத்திரையை பதித்தார். நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் நிலையாய் இருக்கிறோம். (2 கொரி 1:21-22) ஸ்தோத்திரம்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். எங்கள் இன்னல்கள் அனைத்திலும் ஆறுதல் அளிக்கிறார். கிறிஸ்து வழியாக நாங்கள் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம். இறந்தோரை உயிர்த்தெழச் செய்யும் கடவுளையே நம்பி இருக்கிறோம். ஆமென்! அல்லேலூயா!! (2 கொரி 1:3-4)
(62). "மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்" என்று எழுதியுள்ளவாறு நமக்காக கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மை சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார். Thank You Jesus!
ஆபிரகாமுக்கு கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்து வழியாய்ப் பிற இனத்தாருக்கு கிடைக்கவும் வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கை வழியாய் பெற்றுக் கொள்ளவுமே இவ்வாறு செய்தார். Thank You Jesus. (கலா 3:13-14)
(63). ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை - என கலாத்தியர் 5:17 ல் படிக்கிறேனே ஆண்டவரே! என்னுடைய ஊனியல்புகளை உம்முடைய ஆவியின் பெலத்தினாலே அடக்க, தூய ஆவியானவர் காட்டும் நெறியில் நடக்க இயேசுவின் நாமத்தினால் அருள் செய்யும்.
(64). தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்.
இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை.
கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்து சிலுவையில் அறைந்து விட்டார்கள். (கலா 5:22-23) என்ற உம் வார்த்தையின் படியே தூய ஆவியானவரே! உம்முடைய ஆவியின் கனிகள் என் வாழ்க்கையில் முழுமையாய் வெளிப்பட இயேசுவின் நாமத்தின் நிமித்தம் எனக்குள் உமது வைராக்கியத்தை வையும். என்னையும் கரம் பிடித்து அனுதினமும் வழிநடத்தும்.
(65). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவரே! உம்மை நாங்கள் முழுமையாக அறிந்து கொள்ள ஞானமும் வெளிப்பாடும் தரும் தூய ஆவியை எங்களுக்கு இயேசுவின் நாமத்தின் நிமித்தம் அருள்வீராக! (எபேசியர் 1:17)
(66). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவரே! உம்மை நான் போற்றுகிறேன்! விண்ணகம் சார்ந்த ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக எங்கள் மீது பொழிந்துள்ளீர். Thank You Father! Thank You Jesus!! Thank You Holy Spirit!! (எபே 1:3)
(67). தந்தையே! உம்முடைய அளவற்ற மாட்சிக்கேற்ப எங்கள் உள்ளத்திற்கு வல்லமையையும் ஆற்றலையும் உம் தூய ஆவி வழியாகத் இயேசுவின் நாமத்தில் தந்தருளுவீராக! (எபேசி 3:16)
(68). தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட, தூய ஆவியால் நிறைந்து திருப்பாடல்களை, புகழ்ப் பாக்களை, ஆவிக்குரிய பாடல்களை உளமார இசை பாடி ஆண்டவரை போற்ற என் உள்ளம் விரும்புகிறது. ஆண்டவர் இயேசுவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். (எபே 5:18-20)
(69). தீயோனின் தீக்கணைகளை யெல்லாம் அணைத்துவிட மீட்பை தலைச்சீராகவும், கடவுளின் வார்த்தையை தூய ஆவி அருளும் போர் வாளாக எடுத்துக் கொண்டேன்! ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப்பெற்றேன். Thank You Lord! (எபே 6:16)
(70). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! தலைமை குருவே! உமக்கு ஸ்தோத்திரம்!
நீர் அருளும் நலன்கள் எனக்கு கிடைப்ப தற்காக உமக்கு நன்றி!
நீர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதைவிட மேலானது. நிறைவுமிக்கது.
நீர் பலியாக படைத்த இரத்தம் உம் சொந்த இரத்தமே! நீர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப்படைத்து எங்களுக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும் படி செய்தீர். Thank You Jesus.
கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்து கிறது! Thank You Jesus.
என்றுமுள்ள தூய ஆவியினால் உம்மையே மாசற்ற தூய பலியாகக் கொடுத்த எங்கள் தேவனாகிய இயேசுவே! ஸ்தோத்திரம்! புதியஉடன்படிக்கை யின் இணைப்பாளராயிருக்கி வரே! உம்மை போற்றுகிறோம்.
கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்றே இந்த உடன்படிக்கை உண்டானது. Thank You Father! Thank You Jesus!! Thank You Holy Spirit!!! (எபிரேயர் 9:11-14)
(71). கிறிஸ்து இயேசுவே! எங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தீர். நீர் எங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தீர். நீதியுள்ளவராகிய நீர் நீதியற்றவர்களுக்காக இறந்தீர். மனித இயல்போடிருந்த நீர் இறந்தீரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தீர். உமது உயிர்த்தெழுதல் வழியாக எங்களுக்கு மீட்பு உண்டு. Thank You Jesus. Thank You Father. Thank You Holy Spirit.
வான தூதர்களையும், அதிகாரங் களையும், வல்லமைகளையும் உமக்கு பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறீர் - உம்மை நாங்கள் போற்றிப் புகழ்ந்து ஆராதனை செய்கிறோம்.
ஊனுடல் வாழ்வின் எஞ்சிய காலமெல்லாம் மனிதருடைய தீய நாட்டங்களுக்கு இசையாமல் கடவுளின் திருவுளப்படி வாழ்வேன். ஆமென். அல்லேலூயா!! (பேதுரு 3:18,22; 4:2)
(72). கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவர் மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. தூய ஆவியானவரே உமது கட்டளையை கருத்தாய் கைக்கொள்ள என்னை இயேசுவின் நாமத்தில் வழி நடத்தும்.
கடவுளுடைய கட்டளையை கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந் திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம். Thank You Lord! (1 யோவான் 3:23,24))
(73). கடவுளிடமிருந்து பிறக்கும் அணைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. ஸ்தோத்திரம்!
இயேசு இறைமகன் என்று நம்புவோரைத்தவிர உலகை வெல்வோர் யார்? ஸ்தோத்திரம்!
நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே! உண்மை. ஆமென்! அல்லேலுயா!!
இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று.
இறைமகனைக் கொண்டிருப் போர் வாழ்வைக் கொண்டுள்ள னர். Thank You Father! Thank You Jesus! Thank You Holy Spirit!!! (யோவான் 5:4,5,6,7,11)
(74), கேட்க செவி உடையோர் திருச் சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதை கேட்கட்டும். கடவுளின் தோட்டத்தில் உள்ள வாழ்வு தரும் மரத்தினுடைய கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன் என வெளிப்படுத்தல் 2:7ல் எழுதியிருக்கிறதே - தூய ஆவியானவரே! உமது வார்த்தைகளைக் கேட்க என் செவியைத் திறந்தருளும். உமது சத்தத்துக்கு செவி கொடுக்க எனக்கு ஞானத்தையும், உணர்வையும் இயேசுவின் நாமத்தில் அருளிச்செய்யும்.
தாவீதின் குலக்கெழுந்தும், வழித்தோன்றலும் நானே! ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே! என்றவரே உமக்கு ஸ்தோத்திரம்!
(75). தூயஆவியாரும், ஆட்டுக்குட்டி யின் மணமகளும் சேர்ந்து "வருக! வருக!!" என்கிறார்கள். இதைக் கேட்போரும் "வருக! வருக! " எனச் செல்லட்டும்.
தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும். (வெளி 22:17)
(★). கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் நெஞ்சம் கடவுள் மீது, உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகிறேன்.
என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்பு செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
நாள் தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவு தோறும் நான் அவரைப் பாடுவேன். (சங் 42)
உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவு சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.
திரண்ட கொள்ளைப் பொருளை அடைந்தவன் மகிழ்வது போல உமது வாக்குறுதியில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.
நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து உம்மைப் புகழ்ந்து பாட நள்ளிரவில் எழுகின்றேன்.
நான் மனமுவந்து வாயார உம்மைப் புகழ்வதை ஆண்டவரே! தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்
No comments:
Post a Comment