Saturday, April 22, 2017

17. அற்புதத்திற்கான ஜெபம்.

ஜெபம்:
கர்த்தாவே, என் ஜெபங்களுக்கு விடை கொடுத்தபடியால் நன்றி சொல்லுகிறேன்.  நான் ஒரு வெற்றியாளன்.

கர்த்தாவே, எனது ஒவ்வொரு காலடியும் உம்மால் கட்டளையிடப்படுவதாக.  எல்லா நினைவுகளையும் பதிவு செய்வீராக.  நீரே கடந்த காலம், எதிர் காலம், நிகழ் காலம் இவற்றை  அறிந்திருக்கிறீர்.
என் வாழ்வின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நோக்கத்தை திட்டமிட்டிருக்கிறீர்.  மென்மையாக ஆனால் உறுதியாக ஒரு பிரகாசமான முடிவை எனக்காக பரலோகத்தில் தயாரித்து வைக்கிறீர்.  
என் வாழ்க்கையை உமது பாதுகாவலுக்குள் ஒப்புக் கொடுக்கிறேன்.  உம்முடைய ஞானம் எவ்வளவு ஆச்சரியமானது.
உமது உன்னத ஆசீர்வாதங்கள் என்னிடத்தில் இப்போழுது கடந்து வருகிறது.  அது அளவிடமுடியாதது.  அமுக்கி, குலுக்கி, சரிந்து விழும் படி எனது மடியில் போடப்படுகிறது.
நான் இயேசுவின் நாமத்தில் முழுமையாகவும், வலிமையாகவும், அன்பாக, சரியான விகிதத்திலும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்.  ஆமென்.
(யோவான் 10:10) இயேசு: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

(சங்கீதம். 68:19)  எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)

(1 தெசலோனிக்கயர். 5:18)  எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறத.

(யாக்கோபு 1:17.)   நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

(சங்கீதம் 119:62)  உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன

(சங்கீதம் 34:8)  கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
17. அற்புதத்திற்கான ஜெபம்.
சங்கீதம் 2: 8,  என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
1. கடன் என்னும் சாத்தானே என் பணத்தை எனக்கு வாந்தி பண்ணிப் போடு.  உன்னை நீயே இயேசுவின் நாமத்தில் விழுங்கிப் போடு.
2. நான் எழுந்து நிமிர்ந்து இருப்பேன்.  என் விரோதிகள் இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து தோல்வியடைந்து விழுந்து போவார்கள்.
3. வெற்றியையும், சாதகமான சூழ் நிலையையும், பேசும் வல்லமை எழுந்து எனக்காக இயேசுவின் நாமத்தில் பேசுவாயாக.
4. கர்த்தாவே நீர் என்னைக் குறித்து சிறப்பாக எழுதி வைத்திருப்பது இயேசுவின் நாமத்தில் எனது நெற்றியில் தெரிவதாக.
5. முழுமையடையாத வெற்றியை மறுத்து,  இயேசுவின் நாமத்தில் முழுமையான ஆசீர்வாதங்களைப் உரிமை பாராட்டி பெற்றுக் கொள்கிறேன்.
6. என் போக்கிலும், வருகையிலும் இயேசுவின் இரத்தின் வல்லமையின் மூலம் நன்மை செய்யும் ஆவியானவரை எடுத்துக் கொள்ளுகிறேன்.
7. இல்லாமை என்ற எழ்மையின் ஆவியை கட்டி பாதாளத்தில் இயேசுவின் நாமத்தில் தள்ளுகிறேன்.

8. இறந்து போன லாசருவை எழுப்பின உயிர்ப்பிக்கும் வல்லமை எனது ஆவிக்குரிய கல்லரைத் தோட்டத்திலிருந்து எனது பொருளாதாரத்தை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உயர்த்தட்டும்.  
9. இறந்து போன லாசருவை எழுப்பின உயிர்ப்பிக்கும் வல்லமை,  எனது திருமண வாழ்க்கையை அழிவின் பள்ளத்தாக்கிலிருந்து இயேசுவின் நாமத்தில் எழுப்பட்டும்.  
10. இறந்து போன  லாசருவை எழுப்பின உயிர்ப்பிக்கும் வல்லமை, எனது புதைக்கப் பட்ட திறமைகளை தமது அக்கினியால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உயிர் பெறச் செய்வார்.  
11. இறந்து போன லாசருவை எழுப்பின உயிர்ப்பிக்கும் வல்லமையே,   எனது ஜெப வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவின் பெயரில் அக்கினியால் கொழுந்து விட்டு எரியச் செய்யும்.
12. மரித்த லாசருவை எழுப்பின உயிர்ப்பிக்கும் வல்லமையே, எனது இருதயத்தை கிறிஸ்து இயேசுவின் அன்பினால் கொழுந்து விட்டு எரியச் செய்யும்.
13. கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் வாழ்வும் மூச்சும் பரிசுத்த அக்கினியாக இருக்க உதவி செய்யும்.
14. எனது கனவுகளில் தொடர்ந்து வரும் பொல்லாத வல்லமையின் முதுகெலும்பை கர்த்தரின் சம்மட்டியால் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஒடித்துப் போடுகிறேன்.
15. கர்த்தரின் வல்லமை எனது ஆவிக்குரிய வாழ்க்கையை பள்ளத்தாக்கி லிருந்து மலை உச்சிக்கு இயேசுவின் நாமத்தில் கொண்டு நிறுத்துவதாக.  
16. உமது அபிஷேகம், என் வாழ்வின் முன்னேற்றத்திலுள்ள சாத்தானின் எல்லையை, நுகத்தடியை இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் முறித்துப் போடுவதாக.

17. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலே, என்னை மகிழ்ச்சி, சந்தோஷம் உள்ள சுழ்நிலையில் கொண்டு அமரச் செய்வதற்காக நன்றி.

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...