Friday, April 21, 2017

மனம் / MIND





"உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." (ரோமர் 12:2)
~~  பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே! உம்முடைய நன்மையும், பிரியமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, என் மனம் புதிதாக, மறுரூபமாக என்னையே உம்முடைய திருப்பாதத்தில் அர்ப்பணித்து ஜெபிக்கிறேன்.
••  "நீங்கள் விசுவாசமுள்ள வர்களாய் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை எல்லாம் பெறுவீர்கள்."  (மத் 21:22)  என்ற உம்முடைய வசனத்துக்காக நன்றி! கோடாகோடி நன்றி!!
••  "வானமும் பூமியும் ஒழிந்து போம் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை." என வேதத்தில் நீர் சொல்லியுள்ளீர்.  ஸ்தோத்திரம்! 
~~  சர்வலோகத்திற்கும் ஆண்டவரே! என் மனம் பொல்லாப்பு செய்யாதபடி விலக்கி இயேசுவின் நாமத்தில் காத்தருளும்.  (நீதி 21:10)
**  சுத்தமுள்ளவனே தன் கிரியையில் செம்மையானவன்.  (நீதி 21:8)  ஸ்தோத்திரம்!
~~வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! என் மனம் மாறுதலடையாதபடி விலக்கி,  எச்சரிக்கையாயிருக்க இயேசுவின் நாமத்தில் காத்துக்கொள்ளும். (எபி 12:17)
~~  உன்னதமான தேவனே! என் மனம் வஞ்சிக்கப்படாதபடி விலக்கி என்னை இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (ஏசாயா 44 :20)
**  தகப்பனே! அறிந்து உணர காணக்கூடிய கண்களையும், உணரக்கூடிய இருதயத்தையும் அடியேனுக்கு இயேசுவின் நாமத்தின் நிமித்தம் அருளிச்செய்யும்.  (ஏசாயா 44:18)
~~  மகா தேவனே! என் மனம் வேறுபடாதபடி விலக்கி என்னை இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (யாத் 14 :5)
~~  தேவாதி தேவனே! என் மனம் திகைப்படையாதபடி புத்திமயக்கத்திற்கு விலக்கி என்னை இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (உபா 28 :28)
~~  ஜூவனுள்ள தேவனே! என் மனதை அகந்தையில்லாதபடி மேட்டிமையானபார்வைக்கு விலக்கி என்னை இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (நீதி 21:4)
**  ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கு ஏதுவானது என நீதி 21:5ல் படிக்கிறேனே ஸ்தோத்திரம்!
~~  அன்பின் தேவனே! என் மனம் கோபங்கொள்ளாதபடி விலக்கி என்னை இயேசுவின் நாமத்தில் காத்தருளும்.  (பிர 7:9)
**  ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமை யுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். (பிரசங்கி 7:8) ஸ்தோத்திரம்!
~~  இரட்சிப்பின் தேவனே! என் மனம் உலகத்தால் மயக்கப்படாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (யோபு 31:27)
••  கர்த்தருக்கு பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்.  தீமை அவனை அணுகாது. (நீதி 19:23) ஸ்தோத்திரம்!
~~  என் முகத்திற்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே! என் மனம் துன்மார்கமாய் நடக்காதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (நீதி 10:20)
••  சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்கிறவனோ புத்திமான்.  நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி; நீதிமானுடைய உதடுகள் அநேகரை போஷிக்கும் - என வேதம் போதிக்கிறதே! ஸ்தோத்திரம்!!   (நீதி 10:19-21) 
~~  எரிச்சலுள்ள தேவனே! என் மனம் விரும்பினபடி செய்யாதிருக்க உம்முடைய இரக்கத்தின் ஐசுவரியத்தின் படியே உம்முடைய அன்பின் நிமித்தம் என்னை உயிர்ப்பியும்.  (எபே 2:3)
~~  மன்னிக்கிற தேவனே! என் மனம் போன போக்கில் மாறுபாடாய் நான் நடக்காதபடி இயேசுவின் நாமத்தில் உதவியருளும்.   (ஏசாயா 57:17)
~~  அதிசயங்களைச்செய்கிற தேவனே!  என் மனம் கடினமடையாதபடி இயேசுவின் நாமத்தில் பாதுகாத்தருளும்.  (2 கொரி 3:14)
••  கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல் இருப்பார்கள்.  ஸ்தோத்திரம்!  (சங் 125:1,2)
••  பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தை சுற்றிலும் இருக்கிறார்.  ஸ்தோத்திரம்!
~~
~~
~~

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...