1. உன்னோடு இருப்பேன்
1. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. (யோசுவா 1:5)
2. நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லோரும் அறியும் படிக்கு இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். (யோசுவா 3:7)
3. நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன். (ஏசா 41:10)
4. பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். (யோசுவா 1:9,17)
5. அவர்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர்உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன். (உபா 7:21)
6. நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனே கூட இருக்கிறேன், உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. (அப் 18:9,10)
7. கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர்; அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம். (உபா 31:8)
8. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைப் பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைப் பெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். (ஏசா 54:10)
9. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்த்த அடைக்கலமானவர். (சங் 46:11)
10. இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். (மத் 28:20)
இரக்கங்களின் பிதாவே - ஸ்தோத்திரம்
ஆறுதலின் தேவனே - ஸ்தோத்திரம்
இரக்கமுள்ள தேவனே - ஸ்தோத்திரம்
இரக்கத்தில் ஐசுவரியம் உள்ள தேவனே - ஸ்தோத்திரம்
ஆவியாய் இருக்கிற கர்த்தரே - ஸ்தோத்திரம்
இஸ்ரவேலின் ஆறுதலே - ஸ்தோத்திரம்.
முடிவில்லாத உம் இரக்கங்களுக்காக
2. ஆசீர்வதிப்பேன்.
1. நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன். (ஆதி 22:17)
2. உன்னை ஆசீர்வதித்து உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கிறவர்களை சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர் வதிக்கப்படும். (ஆதி12:2,3)
3. நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். (உபா 28:6)
4. நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப் பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். (எசே 34:26)
5. நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகு மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள். (மல் 3:10)
6. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். (சங் 128:5,6)
7. இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும் படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்த படியினால் அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். (1நாளா 17:27)
8. தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்திரத்தை ஆசீர்வதியும், அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும். (சங் 28:9)
9. கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். சங் 115:12)
10. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (எபே 1:3)
யேகோவா ஷாலோம் (கர்த்தர் சமாதானமளிக்கிறவர்) - ஸ்தோத்திரம்.
சமாதானத்தின் தேவனே - ஸ்தோத்திரம்.
சமாதான கர்த்தரே - ஸ்தோத்திரம்.
சமாதானத்தின் ராஜாவே - ஸ்தோத்திரம்.
சமாதான காரணரே - ஸ்தோத்திரம்.
சமாதானப் பிரபுவே - ஸ்தோத்திரம்.
No comments:
Post a Comment