FOR COMFORT AND STRENGTH
1. “என்னுடைய இருதயத்தில் கருவாகி நாவால் உருப்பெற்று வாயால் பேசப்படும் தேவனுடைய வார்த்தையானது என்னிலுள்ள தேவனுடைய திறனை வெளியாக்கும் ஆவிக்குரிய பெரும் சக்தியா யிருக்கிறது. “
2. “நான் தேவனைப் பற்றிய அறிவில் விருத்தி யடைகிறேன். மகிமையான அவருடைய வல்லமையின் படி, அவருடைய எல்லா வல்லமையாலும் பெலப்படுத்தப் படுகிறென். “
3. “இருளின் அதிகாரத்தில் இருந்து நான் விடுதலையாகி, அவரது அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு உட்படுத்தப் பட்டு யிருக்கிறேன். “
4. “நான் தேவனால் பிறந்தவன். எனக்குள் உலகத்தை ஜெயிக்கிற விசுவாசம் உண்டு. ஏனென்றால் உலகத்திலுள்ளவனை விட என்னில் உள்ளவர் பெரியவர். “
5. “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.”
6. “கர்த்தருக்குள் மகிழ்சியாய் இருப்பதே என் பெலன். கர்த்தர் என் ஜூவனின் பெலனானவர். “
7. “எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் என் இருதயத்தையும் சிந்தையையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளுகிறது. நல்லவைகள் எவைகளோ, சுத்தமானவைகள் எவைகளோ, பூரணமானவைகள் எவைகளோ, அன்பானவைகள் எவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். “
8. “அன்புடன் சத்தியத்தைக் கைக் கொண்டு கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் வளருகிறேன். “
9. கெட்ட வார்த்தை யொன்றும் என் வாயிலிருந்து புறப்பட விடமாட்டேன். ஆனால் பக்திவிருத்திக்கேதுவான நல்ல வார்த்தைகளையே, கிருபையின் வார்த்தைகளையே பேசுவேன். நான் மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்த மாட்டேன்.

10. எனக்கு நித்திய ஜீவனிருப்பதால், அவருடைய கரத்திலிருந்து என்னை யாரும் பிரிக்கமுடியாது.
11. தேவனுடைய சமாதானம் என் இருதயத்தை ஆளுகை செய்கிறது. நான் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்.
12. தேவனுடைய வார்த்தைகள் என் கண்களை விட்டுப் பிரிய விடமாட்டேன். ஏனென்றால் அவைகள் எனக்குச் ஜீவனும் என் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாய் இருக்கிறது.
13. தேவன் என் பட்சத்திலிருக்கிறார். எனக்குள் இருக்கிறார். ஆகவே எனக்கு விரோதமாய் இருப்பவன் யார்? அவர் எனது ஜீவனுக்கும், தேவபக்திக்கும் வேண்டிய யாவையும் எனக்கு கொடுத்திருக்கிறார். ஆகவே அவருடைய திவ்விய சுபாவத்தில் பங்குள்ளவனாக இருக்கிறேன்.

14. இயேசு தமது நாமத்தைப் பயன்படுத்தும் படி எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். நான் பூலோகத்தில் எதை தடை செய்கிறேனோ அது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நான் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர், ஆகியோரை தடைசெய்கிறேன். வான்வெளியிலுள்ள தீய ஆவிகளையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தடை செய்கிறேன். இவைகளை அப்புறப் படுத்துகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவைகள் எங்களுக்கு விரோதமாய் ஒன்றும் செய்யாதபடி செய்கிறேன்.
15. நான் ஒரு விசுவாசியாய்யிருப்பதால் இந்த அடையாளங்கள் என்னைப் பின் தொடரும். இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துறத்துவேன், அந்நிய பாஷைகளில் பேசுகிறேன், வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கிறேன் அவர்கள் சொஸ்தமாகிறார்கள்.

16. எல்லா துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்காகவும், தலையான கிறிஸ்துவுக்குள் நான் பூரணமாயிருக்கிறேன். ஏனென்றால் நான் நற்கிரியைகளைச் செய்வதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறேன். அவைகளில் நான் நடக்கும் படி என்னை முன் குறித்திருக்கிறார்.
No comments:
Post a Comment