Sunday, April 23, 2017

9. அறிவு தருவார். 10. அநுக்கிரகம், அநுகூலம்.

9.  அறிவு தருவார்.

1.  கர்த்தர் ஞானத்தை தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.  (நீதி 2:6)

2.  ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்.  (நீதி 2:10)

3.  அப்போது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக் கொள்ளும்.  (நீதி 5:2)

4.  ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம் பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.  (நீதி 8:12)

5.  கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.  (நீதி 9:10)

6.  நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.  (சங் 147:5)

7.  தேவன் தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு ஞானத்தையும், அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்.  (பிர 2:26)

8.  ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் தங்கியிருப்பார்.  (ஏசா 11:2)

9.  சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல். பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.  (ஏசா 11:9)

10.  கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.  (2. கொரி 2:14)

10.  அநுக்கிரகம், அநுகூலம்.

1.  தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு.  (ஆதி 33:11)

2.  அநுகிரக காலத்திலே நான் உமக்குச் செவி கொடுத்து, இரட்சணிய நாளிலே உனக்கு உதவி செய்தேன்.  (ஏசா 49:8)

3.  அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.  (பிர 3:13)

4.  தேவன் ஐசுவரியத்தையும், சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ; அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.  (பிர 5:19)

5.  பொறுமையையும், ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின் படியே, நீங்கள் ஏக சிந்தையுள்ளவர்களாய் இருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வாராக.  (ரோமர் 15:6)

6.  தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள் வரைக்கும்  சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி கூறி வருகிறேன்.  (அப் 26:22)

7.  கர்த்தாவே நீர் எனக்குத் துணை செய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞகர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமான ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.  (சங் 86:17)

8.  உமது அடியேனுக்கு அநுகூலமாயிரும்;  அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக் கொள்ளுவேன்.  (சங் 119:17)

9.  இங்கே பெரிதும் அநுகூலமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது.  (1 கொரி 16:9)

10.  சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ் செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.

7. அடைக்கலமானவர். 8. அதிசயம் செய்கிறவர்


7.  அடைக்கலமானவர்.

1.  தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.  (சங் 46:1)

2.  ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.  (சங் 90:1)

3.  கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர்.  (சங் 142:5)

4.  கொடுரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.  (ஏசா 25:4)

5.  அநாதிதேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப் போடு என்று கட்டளையிடுவார்.  (உபா 33:27)

6.  என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும், என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.  (சங் 62:7)

7.  நானோ உம்முடைய வல்லமையைப்பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.  (சங் 59:16)

8. 8.  அதிசயம் செய்கிறவர்

9.  எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய்.  ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.  (சங் 91:9-10)

10.  கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.  (நீதி 14:26)

8.  அதிசயம் செய்கிறவர்

1.  உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்.  (மீகா 7:15)

2.  இதோ, நான் ஒரு உடன்படிக்கையைப் பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்.  (யாத் 34:10)

3.  அராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.  (யோபு 5:9)

4.  எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ் செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும்  அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்க வேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.  (சங் 40:5)

5.  இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசங்களைச் செய்கிறவர்.  (சங் 72:18)

6.  கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவு கூருவேன்.  (சங் 77:11)

7.  அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணிணீர்.  (சங் 77:14)

8.  கர்த்தாவே வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணிணீர்.  (சங் 89:5)

9.  கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த புயமும் இரட்சிப்பை உண்டாக்கினது.  (சங் 98:1)

10.  பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அதிசயங்களையும் விவரிப்போம்.  (சங் 78:4)

5. கேடகமானவர். 6. கன்மலையானவர்.

5.  கேடகமானவர்.

1. நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்.  (ஆதி 15:1)

2.  நீ பாக்கியவான்;  கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?  உனக்குச் சகாயம் செய்யும் கேடகமும், உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே.  (உபா 33:29)

3.  தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். (2சாமு 22:36)

4.  உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.  (2 சாமு 22:36)

5.  நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்துகிறவருமா யிருக்கிறீர்.  (சங் 3:3)

6.  கர்த்தாவே,  நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.  (சங் 5:12)

7.  கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது.  நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது.  (சங் 28:7)

8.  அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாம்.  (சங் 91:4)

9.  தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.  (சங் 84:11)

10.  பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை யெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்.  (எபே 6:16)

6.  கன்மலையானவர்.

1.  கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சனியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.  (சங் 18:2)

2.  என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.  (சங் 31:3)

3.  நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.  (சங் 71:3)

4.  என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்திரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டு போய் விடும்.  (சங் 61:2)

5.  தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னை கன் மலையின் மேல் உயர்த்துவார்.  (சங் 61:2)

6.  நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.  (சங் 71:3)

7.  என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.  (சங் 62:7)

8.  உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.  (சங் 81:16)

9.  அவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.  (ஏசா 33:16)

10.  எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள்.  எப்படியெனில், அவர்களோடே கூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.  (1கொரி 10:4)

3. அரணாணவர். 4. பெலனானவர்.

3.  அரணாணவர்.

1.  தேவன் எனக்குப் பலத்த அரணாணவர்.  அவர் என் வழியைச்  செவ்வைப்படுத்துகிறவர்.  (2 சாமு 22:33)

2.  கர்த்தர் நல்லவர்.  இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.  (நாகூம் 1:7)

3.  நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்;  இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்குத் தருவேன்.  (கரியா 9:12)

4.  அவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவான்;  கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர்அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.  (ஏசா 33:16)

5.  அக்காலத்திலே யூதா தேசத்தில் பாடப்படும் பாட்டாவது;  பெலனான நகரம் நமக்கு உண்டு;  இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.  (ஏசா 26:1)

6.  அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.  (சங் 31:4)

7.  கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.  (நீதி 10:29)

8.  நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.  (ஏரே 6:27)

9.  மந்தையின் துருகமே சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரீகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.  (மீகா 4:8)

10.  என் அரணாகிய தேவன் நீர்;  சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரிய வேண்டும்? (சங் 43:2)

இரட்சிப்பின் தேவனே - ஸ்தோத்திரம்.
என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே - ஸ்தோத்திரம்.
இரட்சிப்பின் கன்மலையே - ஸ்தோத்திரம்.
என் இரட்சிப்புமானவரே - ஸ்தோத்திரம்.
என் இரட்சிப்பின் பெலனே - ஸ்தோத்திரம்.
பரலோககத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கிறீர் - ஸ்தோத்திரம்.
எங்கள் சத்துருக்களினின்று இரட்சித்து எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் - ஸ்தோத்திரம்.
இரட்சிக்கும் உமது வலது கரத்துக்காக, ஒங்கிய புயத்துக்காக - ஸ்தோத்திரம்.
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருந்து நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறீர் - ஸ்தோத்திரம்.
இரட்சிப்பென்னும் சீராவை சிரசில் தரித்திருப்பவரே (ஏசா 59:17) - ஸ்தோத்திரம்.
இரட்சிப்பு கர்த்தருடையது - ஸ்தோத்திரம்.
எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவன் வலது பாரிசத்தில் நிற்பவரே
என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவரே

4.  பெலனானவர்.

1.  என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப் படுத்துகிறவர் தேவனே.  (சங் 18:32)

2.  சோர்ந்து போகிறவனுக்குப் அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.  (ஏசா 40:29)

3.  யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என் மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப் பண்ணினீர்.  (சங் 18:39)

4.  கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.  (சங் 29:11)

5.  தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.  (சங் 46:1)

6.  என் பெலனே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்; தேவன் எனக்கு அடைக்கலமும், கிருபையுமுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.  (சங் 59:17)

7.  கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களி கூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.  (சங் 28:7)

8.  கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப் பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஒடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.  (ஏசா 40:31)

9.  ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்.  (அப 3:19)

10.  பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.  (எபி 11:34)

வல்லமையுள்ள கர்த்தரே
எல்ஷடாய் சர்வ (வல்லமையுள்ளவர்)
வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு
தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறவரே
இஸ்ரவேலின் வல்லவரே
யாக்கோபின் வல்லவரே
சகலத்தையும் தம் வல்லமையுள்ள வசனத்தினால் தாங்குகிறவரே
யுத்தத்தில் வல்லவரே

என்பெலனாகிய கன்மலையே
என் பெலனும் என் கீதமுமானவரே
என் ஜீவனின் பெலனானவரே
என் இரட்சிப்பின் பெலனே
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவே
இஸ்ரவேலின் ஜெயபலமானவரே
ஐசுவரியத்தைச் சம்பாதிக்க பெலனைக் கொடுப்பவரே
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கு தப்புவிக்கிறவரே
பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் லேசாக உதவி செய்கிறவரே
கொடுமையானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப் போல் இருக்கையில் எழைக்குப் பெலனானவரே
என்னை பெலத்தால் இடை கட்டுகிறவரே
தேவன் எனக்கு பலத்தைக் கட்டளையிட்டதுக்காக

என் ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்

1. உன்னோடு இருப்பேன் 2. ஆசீர்வதிப்பேன்.

1.  உன்னோடு இருப்பேன்

1.  நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.  (யோசுவா 1:5)

2.  நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லோரும் அறியும் படிக்கு இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.  (யோசுவா 3:7)

3.  நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்.  (ஏசா 41:10)
4.  பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.  (யோசுவா 1:9,17)

5.  அவர்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர்உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.  (உபா 7:21)

6.  நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனே கூட இருக்கிறேன், உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை.  (அப் 18:9,10)

7.  கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர்; அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்.  (உபா 31:8)

8.  மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைப் பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைப் பெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.  (ஏசா 54:10)

9.  சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்த்த அடைக்கலமானவர்.  (சங் 46:11)

10.  இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.  (மத் 28:20)

இரக்கங்களின் பிதாவே - ஸ்தோத்திரம்
ஆறுதலின் தேவனே - ஸ்தோத்திரம்
இரக்கமுள்ள தேவனே - ஸ்தோத்திரம்
இரக்கத்தில் ஐசுவரியம் உள்ள தேவனே - ஸ்தோத்திரம்
ஆவியாய் இருக்கிற கர்த்தரே - ஸ்தோத்திரம்
இஸ்ரவேலின் ஆறுதலே - ஸ்தோத்திரம்.
முடிவில்லாத உம் இரக்கங்களுக்காக

2.  ஆசீர்வதிப்பேன்.

1.  நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன்.  (ஆதி 22:17)

2.  உன்னை ஆசீர்வதித்து உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.  உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கிறவர்களை சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர் வதிக்கப்படும்.  (ஆதி12:2,3)

3.  நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.  (உபா 28:6)

4.  நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப் பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.  (எசே 34:26)

5.  நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகு மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்.  (மல் 3:10)

6.  கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.  உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.  (சங் 128:5,6)

7.  இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும் படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்த படியினால் அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். (1நாளா 17:27)

8.  தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்திரத்தை ஆசீர்வதியும், அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.  (சங் 28:9)

9.  கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். சங் 115:12)

10.  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்.  அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.  (எபே 1:3)

யேகோவா ஷாலோம் (கர்த்தர் சமாதானமளிக்கிறவர்) - ஸ்தோத்திரம்.
சமாதானத்தின் தேவனே - ஸ்தோத்திரம்.
சமாதான கர்த்தரே  - ஸ்தோத்திரம்.
சமாதானத்தின் ராஜாவே  -  ஸ்தோத்திரம்.
சமாதான காரணரே  - ஸ்தோத்திரம்.

சமாதானப் பிரபுவே - ஸ்தோத்திரம்.

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...