Tuesday, May 28, 2024

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.




1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள்.
2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள்.
3. வேத வாசிப்பு: சங் - 91: 1-16:  சங் - 50: 10-15

சங்கீதம் 50:10-15 -  10. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

11. மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

12. நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

13. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

14. நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

15. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

2 கொரி 10:4.-  4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளா யிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளா யிருக்கிறது.

பிலி 4:19.- 19.  என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.…
Phil 4:19: என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என் குறைவை யெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.…

1. ஒவ்வொரு நாளும் உயிருள்ள கர்த்தருடைய நெருப்புத்தூண் எனக்கு முன்பாகச் சென்று என் பாதைகளை ஆண்டவர் இயேசுவின் வல்லமையான பெயராலே வெளிச்சமாக்கக் கடவது
2. பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய அக்கினியும், ஆட்டுக்குட்டியானவரின் இரத்தமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் இருதயத்தை சுத்தமாக்கும்,  வெளிச்சமாக்கும்.
3. பரிசுத்த ஆவியானவரே, ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால், கிறிஸ்துவின் அன்பு  என் இருதயத்தை கொழுந்து விட்டு எரிய செய்யட்டும்.
கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார்; நான் அமர்ந்திருந்தால் போதும்.
4. கர்த்தாவே, ஆவியானவரின் வரங்கள், கனிகள் எனது வாழ்க்கையில் இயேசுவின் நாமத்தில் புது வல்லமையான வழியில் தோன்றுவதாக.
5. என் இருதயத்தில் பலமாய் ஆட்கொண்டிருக்கும் எந்த விக்கிரகமும், இயேசுவின் நாமத்தினால்,  கர்த்தரின் அக்கினி எடுத்து கீழே போட்டு அழிப்பதாக.
6. கர்த்தாவே, உம்முடைய வார்த்தையாகிய ஞானம் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக இயேசுவின் பெயராலே, எனக்கு வருவதாக.
7. கர்த்தாவே தீர்க்க தரிசன வரத்தை தூய ஆவியானவர் மூலமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனக்கு அருளிச் செய்யும்.
8. கர்த்தாவே, உணர்வுள்ள ஆவியை, பகுத்தரியும் ஆவியின் வரத்தை இயேசுவின் நாமத்தில் எனக்கு அருளிச் செய்யும்.  
9.  கர்த்தாவே, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், இயேசுவின் சரீரத்தை உயர்த்தவும், வரங்களை இயேசுவின் பெயரால் பயன் படுத்த உதவும்.  
10. ஆண்டவர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஜீவனின்  ஆவி, - எனது ஜெபபீடம், - வாழ்க்கை, கனவு, - திருமணம், - அழைப்பு, - என் சரீரத்தின் எல்லா உருப்புகளிலும் உயிறூட்டம் கொடுத்துள்ளது.
11  ஆவியில் இயேசுவைக் காண்பதைத் தடைச் செய்யும் சாத்தானின் எல்லாத் தடைகளும், கர்த்தரின் அக்கினி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அழித்துப் போடுவதாக.  
12  என் ஆவியின் கண்களை மறைக்க வீசப்படும், பலவான்களின் மறைப்பு, இயேசுவின் நாமத்தில் கர்த்தரின் அக்கினியால் சுட்டெரிக்கப் படுவதாக.  
13. உயிருள்ள தேவனின் ஆவி, எனது ஆவியின் கண்களை, இயேசுவின்  நாமத்தில் திறப்பாராக.
14. கர்த்தாவே, என் செவிகள் உமது சத்தத்தைக் கேட்க, இயேசுவின் நாமத்தில் திறக்கப்படுவதாக.
15. கர்த்தாவே, எனது வாழ்க்கையில் உமது உயர்வு உண்டாக்கும் அபிஷேகத்தை, இயேசுவின் பெயராலே கட்டவிழ்த்து விடும்.  
16. இயேசுவின் நாமத்தில், கர்த்தர் என்னை வாலாக்காமல் தலையாக்குவார், கீழாக்காமல் மேலாக்குவார் என்று எமுதியிருக்கிறதே.  
17. குறைவின் ஆவியே, இயேசுவின் பெயராலே என் வாழ்க்கையிலிருந்து உன் பிடியை எடு.
18. உலக வாழ்க்கையில் மூழ்கி விடாமல் இருக்க இயேசுவின் பெயராலே ஜெபிக்கிறேன்.
19. வெட்கப்படுத்தும் எல்லா சூழ்நிலைகளையும் இயேசுவின் நாமத்தில் செயலிழக்கச் செய்கிறேன்.   

20. என்னை கீழ் நிலைக்கு கொண்டு செல்ல அழைக்கும் சப்தம், இயேசுவின் தூய இரத்தத்தினால் செயலிழப்பதாக.
21. மேன்மையான என் இடத்தில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு  ் வல்லமையும், கீழே தள்ளப்பட்டு இயேசுவின் நாமத்தினால் சுட்டெரிக்கப் படுவதாக.  
22. நான் கால் மிதிக்கும் இடமெல்லாம், இயேசுவின் பெயரால் எனக்குச் சொந்தமாவதாக.
23. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலே, சாத்தானின் போட்டியிடும் தன்மை செயலிழப்பதாக.
24. உயர்வான செயல்கள், மகிமையான காலம்,  என் வாழ்வில் இயேசுவின் பெயரால் தோன்றுவதாக.
25. கர்த்தருக்கு எதிராக உயர்த்தி புகழ்ந்து பேசும் கோலியாத் மற்றும் பார்வோனின் ஆவி, இயேசுவின் பெயராலே கட்டப்பட்டு அக்கினி நதிக்குள் செல்வதாக.
26. எனது வாழ்க்கைக்கு, வாழ்க்கையின் நோக்கத்திற்கு எதிரான சாத்தானின் எதிர்பார்ப்புகள், இயேசுவின் பெயரால் ஏமாற்றம் அடைவதாக.
27. எனக்கு எதிரான விரோதிகளின் சக்திகள் மேல், இயேசுவின் நாமத்தில் கர்த்தரின் வல்லமை இறங்குவதாக.  
28. என்னிடத்திலிருந்து கனவில் திருடப்பட்டவைகளை இயேசுவின் பெயரால் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.  
29. செழிப்பை அடைய விடாமல் என் கைகளைக் கட்டி வைத்திருக்கும் சாத்தானின் சங்கிலிகள் இயேசுவின் பரிசுத்தமான பெயரால் பற்றி எரிந்து சாம்பலாக போவதாக.
30. என்னை பின்மாற்றத்திற்கு இழுக்கும் படி என் கழுத்தைக் கட்டி இழுக்கும் சாத்தானின் சங்கிலிகள் இயேசுவின் வல்லமையான நாமத்தினால் தீ பற்றி எரிந்து சாம்பலாவதாக.
31. என்னை கீழே இழுக்கும் படி என் கைகளின் மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ள சாத்தானின் சங்கிலிகள்  இயேசுவின் வல்லமையான நாமத்தினால் தீ பற்றி எரிந்து சாம்பலாவதாக.  
32. முன்னோக்கிச் செல்லமுடியாதபடி கால்களைக் கட்டி இழுக்கும் சாத்தானின் சங்கிலிகள் அறுபட்டு எரிந்து இயேசுவின் நாமத்தில் சாம்பலாவதாக.  
33. தோல்வி என்னும் வட்டத்தை விட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலுள்ள வல்லமையினால் குதித்து வெளியே வருவேன்.
34.  எனது வாழ்க்கையிலுள்ள தோல்வியின் விதைகள் இயேசுவின் நாமத்தில், கடவுளின் அக்கினிக்கு தீக்கிரையாகட்டும்.
35. என்  வாழ்வில் நடப்பட்டுள்ள சாதிக்க முடியாது என்ற ஒவ்வொரு மரங்களும் இயேசுவின் நாமத்தில் வேரருக்கப்பட்டுப் போவதாக.
36. சாத்தானின் நங்கூரங்கள் என் கரங்கள், கால்கள் இவற்றில் போடப்பட்டிருப்பின் இயேசுவின் வல்லமையுள்ள பெயரால் நீங்கிப் போவதாக.
37. இப்பொழுது நான் இருக்கும் இடத்திலிருந்து கர்த்தர், நான் போக விரும்பும் இடத்திற்கு, இயேசுவின் இரத்தத்தில் உள்ள வல்லமையால், செல்ல உதவி செய்வாராக.
38.   சாதிக்க முடியாது என்ற சாபக் கட்டுகளை இயேசுவின் பெயரால், உடைத்துப் போடுகிறேன்.
39. கனவில் வரத் துவங்கும் சாத்தானின் செயல்கள், இயேசுவின் இரத்தத்தால் நீங்கி ஒன்றுமில்லாமல் போவதாக.
40.  கர்த்தரின் நன்மையையும், கிருபையையும், குறித்து இயேசுவின் நாமத்தில் பாடுவேன்.  

FOR COMFORT AND STRENGTH

FOR COMFORT AND STRENGTH

1. “என்னுடைய இருதயத்தில் கருவாகி நாவால் உருப்பெற்று வாயால் பேசப்படும் தேவனுடைய வார்த்தையானது என்னிலுள்ள தேவனுடைய திறனை வெளியாக்கும் ஆவிக்குரிய பெரும் சக்தியா யிருக்கிறது. “

2. “நான் தேவனைப் பற்றிய அறிவில் விருத்தி யடைகிறேன். மகிமையான அவருடைய வல்லமையின் படி, அவருடைய எல்லா வல்லமையாலும் பெலப்படுத்தப் படுகிறென். “

3. “இருளின் அதிகாரத்தில் இருந்து நான் விடுதலையாகி, அவரது அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு உட்படுத்தப் பட்டு யிருக்கிறேன். “

4. “நான் தேவனால் பிறந்தவன். எனக்குள் உலகத்தை ஜெயிக்கிற விசுவாசம் உண்டு. ஏனென்றால் உலகத்திலுள்ளவனை விட என்னில் உள்ளவர் பெரியவர். “
5. “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.”

6. “கர்த்தருக்குள் மகிழ்சியாய் இருப்பதே என் பெலன். கர்த்தர் என் ஜூவனின் பெலனானவர். “

7. “எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் என் இருதயத்தையும் சிந்தையையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளுகிறது.  நல்லவைகள் எவைகளோ, சுத்தமானவைகள் எவைகளோ, பூரணமானவைகள் எவைகளோ, அன்பானவைகள் எவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். “

8. “அன்புடன் சத்தியத்தைக் கைக் கொண்டு கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் வளருகிறேன். “

9.  கெட்ட வார்த்தை யொன்றும் என் வாயிலிருந்து புறப்பட விடமாட்டேன்.  ஆனால் பக்திவிருத்திக்கேதுவான நல்ல வார்த்தைகளையே, கிருபையின் வார்த்தைகளையே பேசுவேன்.  நான் மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்த மாட்டேன்.

10.  எனக்கு நித்திய ஜீவனிருப்பதால், அவருடைய கரத்திலிருந்து என்னை யாரும் பிரிக்கமுடியாது.

11. தேவனுடைய சமாதானம் என் இருதயத்தை ஆளுகை செய்கிறது.  நான் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்.

12.  தேவனுடைய வார்த்தைகள் என் கண்களை விட்டுப் பிரிய விடமாட்டேன்.  ஏனென்றால் அவைகள் எனக்குச் ஜீவனும் என் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாய் இருக்கிறது.

13.  தேவன் என் பட்சத்திலிருக்கிறார்.  எனக்குள் இருக்கிறார்.  ஆகவே எனக்கு விரோதமாய் இருப்பவன் யார்?  அவர் எனது ஜீவனுக்கும், தேவபக்திக்கும் வேண்டிய யாவையும் எனக்கு கொடுத்திருக்கிறார்.  ஆகவே அவருடைய திவ்விய சுபாவத்தில் பங்குள்ளவனாக இருக்கிறேன்.

14.  இயேசு தமது நாமத்தைப் பயன்படுத்தும் படி எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.   நான் பூலோகத்தில் எதை தடை செய்கிறேனோ அது விண்ணுலகிலும் தடை செய்யப்படும்.  மண்ணுலகில் நான் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்.  
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர், ஆகியோரை தடைசெய்கிறேன்.  வான்வெளியிலுள்ள தீய ஆவிகளையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தடை செய்கிறேன்.  இவைகளை அப்புறப் படுத்துகிறேன்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவைகள் எங்களுக்கு விரோதமாய் ஒன்றும் செய்யாதபடி செய்கிறேன்.

15.  நான் ஒரு விசுவாசியாய்யிருப்பதால் இந்த அடையாளங்கள் என்னைப் பின் தொடரும்.  இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துறத்துவேன், அந்நிய பாஷைகளில் பேசுகிறேன், வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கிறேன் அவர்கள் சொஸ்தமாகிறார்கள்.

16.  எல்லா துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்காகவும், தலையான கிறிஸ்துவுக்குள் நான் பூரணமாயிருக்கிறேன்.  ஏனென்றால் நான் நற்கிரியைகளைச் செய்வதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறேன்.  அவைகளில் நான் நடக்கும் படி என்னை முன் குறித்திருக்கிறார்.

Sunday, April 23, 2017

9. அறிவு தருவார். 10. அநுக்கிரகம், அநுகூலம்.

9.  அறிவு தருவார்.

1.  கர்த்தர் ஞானத்தை தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.  (நீதி 2:6)

2.  ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்.  (நீதி 2:10)

3.  அப்போது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக் கொள்ளும்.  (நீதி 5:2)

4.  ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம் பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.  (நீதி 8:12)

5.  கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.  (நீதி 9:10)

6.  நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.  (சங் 147:5)

7.  தேவன் தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு ஞானத்தையும், அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்.  (பிர 2:26)

8.  ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் தங்கியிருப்பார்.  (ஏசா 11:2)

9.  சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல். பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.  (ஏசா 11:9)

10.  கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.  (2. கொரி 2:14)

10.  அநுக்கிரகம், அநுகூலம்.

1.  தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு.  (ஆதி 33:11)

2.  அநுகிரக காலத்திலே நான் உமக்குச் செவி கொடுத்து, இரட்சணிய நாளிலே உனக்கு உதவி செய்தேன்.  (ஏசா 49:8)

3.  அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.  (பிர 3:13)

4.  தேவன் ஐசுவரியத்தையும், சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ; அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.  (பிர 5:19)

5.  பொறுமையையும், ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின் படியே, நீங்கள் ஏக சிந்தையுள்ளவர்களாய் இருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வாராக.  (ரோமர் 15:6)

6.  தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள் வரைக்கும்  சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி கூறி வருகிறேன்.  (அப் 26:22)

7.  கர்த்தாவே நீர் எனக்குத் துணை செய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞகர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமான ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.  (சங் 86:17)

8.  உமது அடியேனுக்கு அநுகூலமாயிரும்;  அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக் கொள்ளுவேன்.  (சங் 119:17)

9.  இங்கே பெரிதும் அநுகூலமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது.  (1 கொரி 16:9)

10.  சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ் செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.

7. அடைக்கலமானவர். 8. அதிசயம் செய்கிறவர்


7.  அடைக்கலமானவர்.

1.  தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.  (சங் 46:1)

2.  ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.  (சங் 90:1)

3.  கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர்.  (சங் 142:5)

4.  கொடுரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.  (ஏசா 25:4)

5.  அநாதிதேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப் போடு என்று கட்டளையிடுவார்.  (உபா 33:27)

6.  என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும், என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.  (சங் 62:7)

7.  நானோ உம்முடைய வல்லமையைப்பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.  (சங் 59:16)

8. 8.  அதிசயம் செய்கிறவர்

9.  எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய்.  ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.  (சங் 91:9-10)

10.  கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.  (நீதி 14:26)

8.  அதிசயம் செய்கிறவர்

1.  உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்.  (மீகா 7:15)

2.  இதோ, நான் ஒரு உடன்படிக்கையைப் பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்.  (யாத் 34:10)

3.  அராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.  (யோபு 5:9)

4.  எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ் செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும்  அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்க வேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.  (சங் 40:5)

5.  இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசங்களைச் செய்கிறவர்.  (சங் 72:18)

6.  கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவு கூருவேன்.  (சங் 77:11)

7.  அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணிணீர்.  (சங் 77:14)

8.  கர்த்தாவே வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணிணீர்.  (சங் 89:5)

9.  கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த புயமும் இரட்சிப்பை உண்டாக்கினது.  (சங் 98:1)

10.  பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அதிசயங்களையும் விவரிப்போம்.  (சங் 78:4)

5. கேடகமானவர். 6. கன்மலையானவர்.

5.  கேடகமானவர்.

1. நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்.  (ஆதி 15:1)

2.  நீ பாக்கியவான்;  கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?  உனக்குச் சகாயம் செய்யும் கேடகமும், உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே.  (உபா 33:29)

3.  தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். (2சாமு 22:36)

4.  உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.  (2 சாமு 22:36)

5.  நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்துகிறவருமா யிருக்கிறீர்.  (சங் 3:3)

6.  கர்த்தாவே,  நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.  (சங் 5:12)

7.  கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது.  நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது.  (சங் 28:7)

8.  அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாம்.  (சங் 91:4)

9.  தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.  (சங் 84:11)

10.  பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை யெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்.  (எபே 6:16)

6.  கன்மலையானவர்.

1.  கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சனியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.  (சங் 18:2)

2.  என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.  (சங் 31:3)

3.  நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.  (சங் 71:3)

4.  என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்திரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டு போய் விடும்.  (சங் 61:2)

5.  தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னை கன் மலையின் மேல் உயர்த்துவார்.  (சங் 61:2)

6.  நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.  (சங் 71:3)

7.  என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.  (சங் 62:7)

8.  உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.  (சங் 81:16)

9.  அவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.  (ஏசா 33:16)

10.  எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள்.  எப்படியெனில், அவர்களோடே கூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.  (1கொரி 10:4)

3. அரணாணவர். 4. பெலனானவர்.

3.  அரணாணவர்.

1.  தேவன் எனக்குப் பலத்த அரணாணவர்.  அவர் என் வழியைச்  செவ்வைப்படுத்துகிறவர்.  (2 சாமு 22:33)

2.  கர்த்தர் நல்லவர்.  இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.  (நாகூம் 1:7)

3.  நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்;  இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்குத் தருவேன்.  (கரியா 9:12)

4.  அவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவான்;  கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர்அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.  (ஏசா 33:16)

5.  அக்காலத்திலே யூதா தேசத்தில் பாடப்படும் பாட்டாவது;  பெலனான நகரம் நமக்கு உண்டு;  இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.  (ஏசா 26:1)

6.  அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.  (சங் 31:4)

7.  கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.  (நீதி 10:29)

8.  நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.  (ஏரே 6:27)

9.  மந்தையின் துருகமே சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரீகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.  (மீகா 4:8)

10.  என் அரணாகிய தேவன் நீர்;  சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரிய வேண்டும்? (சங் 43:2)

இரட்சிப்பின் தேவனே - ஸ்தோத்திரம்.
என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே - ஸ்தோத்திரம்.
இரட்சிப்பின் கன்மலையே - ஸ்தோத்திரம்.
என் இரட்சிப்புமானவரே - ஸ்தோத்திரம்.
என் இரட்சிப்பின் பெலனே - ஸ்தோத்திரம்.
பரலோககத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கிறீர் - ஸ்தோத்திரம்.
எங்கள் சத்துருக்களினின்று இரட்சித்து எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் - ஸ்தோத்திரம்.
இரட்சிக்கும் உமது வலது கரத்துக்காக, ஒங்கிய புயத்துக்காக - ஸ்தோத்திரம்.
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருந்து நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறீர் - ஸ்தோத்திரம்.
இரட்சிப்பென்னும் சீராவை சிரசில் தரித்திருப்பவரே (ஏசா 59:17) - ஸ்தோத்திரம்.
இரட்சிப்பு கர்த்தருடையது - ஸ்தோத்திரம்.
எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவன் வலது பாரிசத்தில் நிற்பவரே
என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவரே

4.  பெலனானவர்.

1.  என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப் படுத்துகிறவர் தேவனே.  (சங் 18:32)

2.  சோர்ந்து போகிறவனுக்குப் அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.  (ஏசா 40:29)

3.  யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என் மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப் பண்ணினீர்.  (சங் 18:39)

4.  கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.  (சங் 29:11)

5.  தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.  (சங் 46:1)

6.  என் பெலனே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்; தேவன் எனக்கு அடைக்கலமும், கிருபையுமுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.  (சங் 59:17)

7.  கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களி கூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.  (சங் 28:7)

8.  கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப் பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஒடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.  (ஏசா 40:31)

9.  ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்.  (அப 3:19)

10.  பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.  (எபி 11:34)

வல்லமையுள்ள கர்த்தரே
எல்ஷடாய் சர்வ (வல்லமையுள்ளவர்)
வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு
தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறவரே
இஸ்ரவேலின் வல்லவரே
யாக்கோபின் வல்லவரே
சகலத்தையும் தம் வல்லமையுள்ள வசனத்தினால் தாங்குகிறவரே
யுத்தத்தில் வல்லவரே

என்பெலனாகிய கன்மலையே
என் பெலனும் என் கீதமுமானவரே
என் ஜீவனின் பெலனானவரே
என் இரட்சிப்பின் பெலனே
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவே
இஸ்ரவேலின் ஜெயபலமானவரே
ஐசுவரியத்தைச் சம்பாதிக்க பெலனைக் கொடுப்பவரே
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கு தப்புவிக்கிறவரே
பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் லேசாக உதவி செய்கிறவரே
கொடுமையானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப் போல் இருக்கையில் எழைக்குப் பெலனானவரே
என்னை பெலத்தால் இடை கட்டுகிறவரே
தேவன் எனக்கு பலத்தைக் கட்டளையிட்டதுக்காக

என் ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...